பரிசுத்த ஆவி எதற்காக அருளப்பட்டது? Jeffersonville, Indiana, USA 59-12-17 1. கைகளை வைத்தலில் சகோ. நெவில் நம்பிக்கை கொண்டிருக்கிறார் என்று காண்கிறேன். என்னிடம் ஒரு சில கேள்விகள் இருப்பதைக் காண்கிறேன். நாளை இரவு இவைகளுக்கு நான் பதிலுரைக்கிறேன், ஏனெனில் இன்றிரவு உங்களுக்காக இவைகளுக்குப் பதில் கூற எனக்கு நேரமில்லை, ஒருக்கால் நேற்று இரவு செய்தியின் பேரில் இவை இருக்கக்கூடும். எந்த செய்தியின் பேரிலாவது உங்களுக்கு கேள்விகள் இருக்குமானால், ஒரு இரவு நீங்கள் அவைகளை இங்கே வைத்து விடுங்கள், அடுத்த இரவு அவைகளை நான் எடுத்துக் கொள்வேன். நாளை இரவு, கூடுமானால் சில போதகர்களைப் பெற விரும்புகிறேன்; இல்லையென்றால், தேவைப்படும்போது நாங்கள் கூப்பிட சில நல்ல, திடகாத்திரமுள்ள மனிதர்களும், ஸ்திரீகளும்... நாளை இரவு செய்திக்குப் பிறகு, பரிசுத்த ஆவிக்காக நாங்கள் கைகளை வைக்கப் போகிறோம், அதன் பிறகு... உங்களுக்கு விருப்பமானால், விடுமுறை நாட்கள் முழுவதும் இங்கு தங்கும் சிலாக்கியம் உங்களுக்குண்டு - நீங்கள் மரிப்பதற்கு அவ்வளவு நாட்கள் எடுக்குமானால், இல்லையென்றால், உங்கள் வீட்டிற்கு செல்ல நீங்கள் விரும்பினால், நீங்கள் அதைப் பெறக் கூடிய ஒரு இடத்திற்கு செல்வது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கும்... எங்கு போவீர்களென்று தெரியவில்லை. சில போதகர்களையும், அவர்கள் இங்கு விஜயம் செய்பவர்களானால், அவர்கள் வசிக்கும் வீடுகளின் எண்களையும், தொலைபேசி எண்களையும் நாங்கள் பெற விரும்புகிறோம். அப்பொழுது அவர்களிடம் உடனடியாக தொடர்பு கொண்டு, ஒருவரை ஒருவருடைய வீட்டிற்கும், மற்றொருவரை மற்றொரு வீட்டிற்கும் அனுப்பி, நாம் பேசிக் கொண்டிருக்கும் பரிசுத்த ஆவியின் அபிஷேகம் என்னும் இந்த மகத்தான ஆசீர்வாதத்தை நாடும் உங்களுக்கு அவர்கள் வழி முறைகளைக் கற்பிக்க அது ஏதுவாயிருக்கும். 2.சென்ற இரவு நாம் பரிசுத்த ஆவி என்பது என்ன என்பதைக் குறித்து பேசினோம். அது தேவன் நமக்கு வாக்களித்துள்ள அனைத்துமாக உள்ளதென்று நாம் கண்டோம். அது சபைக்கு அவசியமான ஒன்று என்றும் நாம் கண்டோம். அது முத்திரை, தேற்றரவாளன், இளைப்பாறுதல், சந்தோஷம், சமாதானம், உயிர்த்தெழுதல் என்று நாம் கண்டோம். தேவன் தமது சபைக்கு வாக்களித்துள்ள அனைத்துமே பரிசுத்த ஆவிக்குள் அடங்கியுள்ளது. இன்றிரவு நாம் எதைக் குறித்து பிரசங்கிக்கப் போகிறோம், பேசப் போகிறோம் என்றால்... வேத வாக்கியங்களை நான் மூன்று நான்கு தாள்களில் எழுதி வைத்துள்ளேன். சென்ற இரவு நான் க்ருடன் எழுதிய ஒத்துவாக்கிய சங்கிரகத்தை (Cruden's Concordance) இங்கேயே விட்டு சென்றுவிட்டேன். அது எனக்கு கிடைக்கவில்லை. எனவே இன்றைக்கு என்னால் இயன்றவரை, எனக்குத் தெரிந்த வேத வாக்கியங்களைக் கொண்டு நான் ஆயத்தம் செய்ய வேண்டியதாகிவிட்டது. 3.இப்பொழுதும், நாளை இரவும் நாம் தேவன் பரிசுத்த ஆவியை அனுப்பியதன் நோக்கம் என்ன, அது எதற்காக அருளப்பட்டது? அது எவ்வளவு பெரிதான ஒன்றாயிருக்குமானால், பின்னை ஏன் அவர் அதை அனுப்பினார்?என்பதைக் குறித்து நாம் கற்பிக்கப் போகின்றோம்? நாளை இரவு நாம், அது உங்களுக்கா? அதை நீங்கள் எப்படி பெற முடியும்? அதை நீங்கள் பெற்றுக் கொண்டீர்கள் என்று எப்படி அறிந்து கொள்வது? என்பதன் பேரில் பேசப் போகின்றோம். வேத வாக்கியங்களை ஆதாரமாகக் கொண்டு இவையனைத்தையும் விளக்கின பின்பு, பரிசுத்த ஆவியை நாடுபவர்கள் முன்னே வருவார்கள். அப்பொழுது முதல் எழுப்புதல் துவங்கி, பரிசுத்த ஆவியுடன் முன்னேறிச் செல்ல முடியுமென்று நான் நம்புகிறேன். அது நாளை இரவு நடக்கப் போவதால், பல சபையிலுள்ள அறைகளில் தங்க நேரிடும். நமக்கு போதகர்களும், பரிசுத்தஆவியை பெறுவதற்கு ஜனங்களை வழி நடத்துவதில் அனுபவம் வாய்ந்த மக்களும் கிடைக்கப் பெற்றால் (அதாவது அவர்களை உற்சாகப்படுத்தி, ஒரு ஸ்திரீயோடும் கணவரோடும் அவர் வீட்டிற்கு சென்று, அல்லது பரிசுத்த ஆவியை நாடும் எவராகிலும் ஒருவருடன் அவர் வீட்டுக்கு செல்லக் கூடிய அப்படிப்பட்ட மக்கள்); என்ன செய்ய வேண்டுமென்று நன்கு கற்பிக்கப்பட்டவர்கள் இருந்தால், உங்கள் தொலைபேசி எண் அல்லது முகவரியை போதகரிடம் இன்றிரவு அல்லது நாளை இரவு கொடுத்துவிடுங்கள். அதை சகோ. நெவிலிடம் கொடுத்துவிடுங்கள். அது உங்களை மறுபடியுமாக ஒன்று கூட்டுவதைத் தவிர்க்கும். உங்களுடன் தொடர்பு கொள்ளக்கூடிய தொலைபேசி எண் மாத்திரம் கொடுங்கள். பிறகு, ''ஒரு வீட்டுக்கு என்னை அனுப்ப நினைத்தால், நான் ஆயத்தமாயிருக்கிறேன்'' என்று எழுதித் தெரிவியுங்கள். அது ஒரு ஸ்திரீயாக மாத்திரம் இருந்தால், ஒரு ஸ்திரீயை அவளிடம் அனுப்பலாம். (பாருங்கள்?) அது கணவனும் மனைவியும் கொண்ட ஒரு குடும்பமாக இருந்தால், ஒரு போதகரை அனுப்பலாம். உங்கள் ஒத்துழைப்பை நாங்கள் கோருகிறோம். ஏனெனில் நீங்கள் ஒவ்வொருவரும் இதில் சிரத்தை கொண்டிருக்கிறீர்கள் என்று எனக்குத் தெரியும். இது மிகவும் அவசியமானது. ''ஒரு ஆத்துமாவை தப்பிப் போன மார்க்கத்தினின்று திருப்புகிறவன், திரளான பாவங்களை மூடுவான்“ என்பதை நினைவில் கொள்ளுங்கள் (யாக்.5:20) பாருங்கள்? கிறிஸ்துவின் மணவாட்டி பசி தாகம் கொண்டிருக்கிறாள். அவள் தேவனுடைய பிள்ளைகளைப் பெற்றெடுக்க பிரசவ வேதனை கொண்டிருக்கிறாள். 4.இன்றிரவு, நாம் வேதத்தைப் படிக்கும் முன்பு, சிறிது நேரம் ஜெபம் செய்ய நாம் தலை வணங்குவோம். நாம் ஜெபிப்பதற்கு முன்பு, உங்கள் தலைகள் வணங்கியுள்ள இந்நேரத்தில், உங்களுக்கு ஏதாகிலும் விண்ணப்பம் இருக்குமானால், உங்கள் கரங்களையுயர்த்தி, ''தேவனே, நான் பயபக்தியாய் என் கைகளை உயர்த்துகிறேன். எனக்குத் தேவையுள்ளது. ஓ, தேவனே, எனக்கு உதவி செய்யுமாறு வேண்டிக் கொள்கிறேன்'' என்று கூறுங்கள். தேவன் உங்கள் ஒவ்வொருவரையும் ஆசீர்வதிப்பாராக. அவர் உங்கள் கைகளைக் காண்கிறார். தேவதூதர்கள் உங்கள் விண்ணப்பங்களை எழுதி வைத்துக் கொண்டுவிட்டார்கள். 5.பரலோகப் பிதாவே, நாங்கள் மறுபடியுமாக ஜெபத்தில் உம்மிடம் வருகிறோம். தேவனுடைய பிள்ளைகளுக்காக இந்த சிறு இடத்தில் ஏற்கனவே ஜெபம் ஏறெக்கப்பட்டுவிட்டது என்பதில் ஐயமில்லை. பாடல்கள் பாடப்பட்டுவிட்டன. நாங்கள் எங்கள் இருதயங்களை ஆனந்த களிப்பினால் உயர்த்தி தேவனை பாடல்களினால் துதித்தோம். தாவீது பரிசுத்தவான்களின் சபைக்கு வந்து தன் விண்ணப்பங்களை தெரியப்படுத்துவதாக கூறினான். இன்றிரவு அநேக கரங்கள் உயர்த்தப்பட்டன. இக்கட்டிடத்தில் இன்றிரவு அமர்ந்துள்ளவர்களில் ஏறக்குறைய 80 சதவிகிதம் பேர் விண்ணப்பங்களுக்காக தங்கள் கரங்களை உயர்த்தினர். கர்த்தாவே, உம்மையல்லாமல் நாங்கள் செல்ல முடியாது என்பதை அது காண்பிக்கிறது. ஒவ்வொரு நாளும் உம்மை நாங்கள் கொண்டிருக்க வேண்டியவர்களாயிருக்கிறோம். நீரே எங்கள் ஜீவன், எங்கள் மகிழ்ச்சி, எங்கள் சுகம், எங்களை நிலை நிறுத்தும் பெலன் எங்களுடன் தங்குபவர், சத்துருவினின்று எங்களைக் காக்கும் கேடகம். உம்மையல்லாமல் எங்களால் இந்த வாழ்க்கை போரில் சண்டையிட முடியாது. எங்களுக்கு அது முழுவதும் சாத்தியமில்லாத ஒரு செயல், நாங்கள் முழுவதுமாக உம் பேரில் சார்ந்திருக்க வேண்டியதாயுள்ளது. நாங்கள் இருள்சூழ்ந்த தேசத்தின் வழியாய் நடந்து சென்று கொண்டிருக்கிறோம் என்பதை அறிந்திருக்கிறோம். ஒவ்வொரு பக்கமும் சத்துரு எங்களை சூழ்ந்து கொண்டு, கண்ணிகளை வைத்திருக்கிறான் கர்த்தாவே எங்களை விழச் செய்ய சத்துரு வைத்துள்ள கண்ணிகளால் எங்கள் பாதை நிறைந்துள்ளது. 6.எங்கள் பாதையின் முடிவில், நாங்கள் நடக்க வேண்டிய மரணம் என்னும் அந்த நீளமான இருளின் பள்ளத்தாக்கு உள்ளது என்பதையும் நாங்கள் அறிந்திருக்கிறோம். ஓ, கர்த்தாவே, அப்பொழுது யார் எங்கள் கரங்களைப் பிடிப்பார்? கர்த்தாவே, இப்பொழுதே உம்மை நாங்கள் அறிந்து கொள்ள விரும்புகிறோம். நீர் எங்கள் கரங்களையும், நாங்கள் உம்முடைய கரங்களையும் பிடித்திருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள விரும்புகிறோம். அந்த நங்கூரமிடப்பட்ட உறுதியை நாங்கள் பெற விரும்புகிறோம். அப்பொழுது, எங்கள் வாழ்க்கையின் முடிவு நேரத்தை நாங்கள் அடைந்து, மரணம் என்னும் வாசலில் நாங்கள் பிரவேசிக்கும் போது, முன்காலத்து பரிசுத்தவான்களுடன் நாங்களும் சேர்ந்து, ''அவரை அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையில் நான் அறிந்திருக்கிறேன். அவர் என்னைக் கூப்பிடும்போது, நான் மரித்தோரிலிருந்து வெளியே வருவேன் என்று அறிந்திருக்கிறேன்'' என்று கூற முடியும். இப்பொழுதும் பிதாவாகிய தேவனே, எங்கள் விண்ணப்பங்களையும், நாங்கள் ஒன்று கூடி வந்துள்ளதையும் ஆசீர்வதிக்குமாறு வேண்டிக் கொள்கிறோம். உம்முடைய வார்த்தைகளை ஆசிர்வதியும். உமது வார்த்தைக்கு அல்லது உமது சித்தத்துக்கு முரணாக நான் எதையாகிலும் கூறமுற்பட்டால், தானியேல் இருந்த கெபியில் நீர் சிங்கங்களின் வாயைக் கட்டிப் போட்டதுபோல், என் வாயையும் கட்டிப் போட உமக்கு இன்னும் வல்லமையுண்டு. கர்த்தாவே, இன்றிரவு எங்கள் செவிகளையும் இருதயங்களையும் நீர் திறந்து, அவைகளில் பசி தாகம் உண்டாகச் செய்யும்படி வேண்டிக் கொள்கிறோம். அவர்கள் தேற்றரவாளனைப் பெறும்வரைக்கும் உறங்காமலும் இளைப்பாறாமலும் இருக்கும் அளவுக்கு அவர்கள் தாகம் கொள்ளும்படி செய்வீராக. 7.நாங்கள் கடைசி நாட்களில், அவருடைய வருகையின் நிழல்களில், வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்று விசுவாசிக்கிறோம். கர்த்தாவே, இந்த செய்திகள் அனைத்தும் அதையே குறிப்பிடுகின்றன. அந்த எச்சரிப்பின் சத்தத்தை கேட்க வேண்டியது ஜனங்களுடைய பொறுப்பு. இன்றிரவு நாங்கள் எங்கள் மேல் ஓட்டை (Shell) இப்பொழுதே அவிழ்த்து அதை ஒருபுறம் வைத்துவிட்டு, ''தேவனாகிய கர்த்தாவே, உம்மை ஏற்றுக் கொள்ளக்கூடிய ஒரு பாத்திரமாக நான் இருக்கிறேன். உமது ஆவி அலை அலையாக எனக்குள் நுழைந்து, உமது சித்தத்தின்படி என்னை வனைவீராக. என் இருதயத்தையும், என் பெலனையும், என் எல்லாவற்றையும் உமது நோக்கத்திற்கென்று உம்மிடம் சமர்ப்பிக்கிறேன்'' என்று கூறுகிறோம். கர்த்தாவே, எங்களுக்கு செவிகொடும். மழை பெய்து கொண்டிருக்கும் இவ்விரவில், மற்றவர் எங்களைக் காண வேண்டும் என்பதற்காக இங்கு நாங்கள் வரவில்லை. போவதற்கு வேறு இடம் எதுவுமில்லை என்பதற்காக நாங்கள் இங்கு வரவில்லை. எங்கள் இருதயங்களில் ஒரே ஒரு பயபக்தியான, புனிதமான நோக்கம் கொண்டவர்களாய் இங்கு நாங்கள் வந்துள்ளோம். அதாவது, உமது அருகாமையில் நாங்கள் வர வேண்டும் என்னும் நோக்கமே அது. நாங்கள் உம்மிடத்தில் சேர்ந்தால், நீர் எங்களிடத்தில் சேருவதாக வாக்களித்திருக்கிறீர் (யாக். 4:8). அதற்காகவே நாங்கள் இங்கிருக்கிறோம். பசியுள்ளவனாக வருபவன் பசியுள்ளவனாக செல்லமாட்டான். ''நீதியின் மேல் பசிதாகமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் திருப்தியடைவார்கள்'' என்று இயேசு கூறியுள்ளாரே (மத். 5:6). நாம் அப்பத்தைக் கேட்டால் கல்லைப் பெற்றுக் கொள்ள மாட்டோம் என்னும் உறுதி கொண்டவர்களாயிருக்கிறோம். நாம் மீனைக் கேட்டால், பாம்பை பெற மாட்டோம். (மத்.7:9-10). நம்முடைய பிதாவாகிய தேவன் வானத்திலிருந்து வரும் மன்னாவினால் நம்மை போஷிப்பார் - அவரைக் குறித்து சாட்சி கொடுக்கும் வார்த்தையினாலும் ஆவியினாலும். கர்த்தாவே, நாங்கள் தொடர்ந்து உம்மண்டையில் காத்திருக்கும் இவ்வேளையில், எங்கள் ஜெபங்களுக்கும் விண்ணப்பங்களுக்கும் உத்தரவு அருளுவீராக. இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் வேண்டிக் கொள்கிறோம். ஆமென். 8.வேதாகமம் வைத்துள்ளவர்கள் என்னுடன் மறுபடியுமாக பரி. யோவான் சுவிசேஷம் 14-ம் அதிகாரத்துக்கு திருப்புங்கள். நாம் 14-ம் வசனத்திலிருந்து படிக்கத் துவங்குவோம். பரி. யோவான் 14:14. அதில் துவங்கி, ஒரு பாகத்தை நாம் வேதத்திலிருந்து படிப்போம். இன்றிரவு நான் பேச எத்தனித்துள்ள பெரும்பாலான பொருளை இதில் நீங்கள் காண்பீர்கள். ''சிகப்பு எழுத்துக்கள்“ வேதாகமங்களை வைத்துள்ளவர்கள், இந்த பாகம் சிகப்பு எழுத்துக்களில் அச்சடித்துள்ளதைக் காணலாம். இயேசுவே இவைகளைக் கூறினார். எனவே அவர் கூறினவாறே இது இருக்கும் என்று நாம் உறுதி கொள்ளலாம். வானமும் பூமியும் ஒழிந்துபோம், அவருடைய வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை. நாம் 14-ம் அதிகாரத்தில், 14-ம் வசனத்திலிருந்து படிப்போம். என் நாமத்தினாலே நீங்கள் எதைக் கேட்டாலும் அதை நான் செய்வேன். (எவ்வளவு ஆசீர்வாதமான ஒரு வாக்குத்தத்தம்) நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள். நான் பிதாவை வேண்டிக் கொள்ளுவேன், அப்பொழுது என்றென்றைக்கும் உங்களுடனேகூட இருக்கும்படிக்குச் சத்திய ஆவியாகிய வேறொரு தேற்றரவாளனை அவர் உங்களுக்குத் தந்தருளுவார். உலகம் அந்தச் சத்திய ஆவியானவரைக் காணாமலும்... (கிரேக்க வேதாகமத்தில் இதை படிப்பவர்கள் இதை காணலாம்...'காணுதல்' என்றால் 'புரிந்து கொள்ளுதல்' என்று பொருள். ''உலகம் அவரை புரிந்து கொள்ளாமலும்'' என்று அது அர்த்தம் பெறுகிறது. அது மிகவும் உண்மை. அதை மறுபடியும் படிக்கிறேன்.) உலகம் அந்தச் சத்திய ஆவியானவரை காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக் கொள்ள மாட்டாது; அவர்... (யார்? தேற்றரவாளன்) உங்களுடனே வாசம் பண்ணி... (நிகழ் காலம்). அவர் உங்களுடனே வாசம் பண்ணி உங்களுக்குள்ளே இருப்பதால்.... (அது என்ன? அதே தேற்றரவாளன்)... நீங்கள் அவரை அறிவீர்கள் (ஆங்கிலத்தில் “shall be in you”) (வருங்காலத்தில் உங்களுக்குள்ளே இருக்கப் போவதால் என்னும் அர்த்தத்தில் எழுதப்பட்டுள்ளது - தமிழாக்கியோன்) நான்... ('நான்' என்பது தனிப் பிரதி பெயர் என்று எவருமே அறிவர்). நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன். உங்களிடத்தில் வருவேன். இன்னும் கொஞ்ச காலத்திலே உலகம் என்னைக் காணாது. நீங்களோ என்னைக் காண்பீர்கள்; நான் பிழைக்கிறபடியினால் நீங்களும் பிழைப்பீர்கள். நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். யோவான்: 14:14-20 இதுவே என் கருத்தின் மையமாக இருக்கும், ஆனால் நாம் தொடர்ந்து படிக்கப் போகின்றோம். அதை நான் மறுபடியும் படிக்கட்டும். நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே... (அந்த மகத்தான நாளிலே, நியாயத் தீர்ப்பின் நாளிலே)... நீங்கள் அறிவீர்கள். என் கற்பனைகளைப் பெற்றுக் கொண்டு அவைகளைக் கைக் கொள்ளுகிறவனே என்னிடத்தில் அன்பாயிருக்கிறான், என்னிடத்தில் அன்பாயிருக்கிறவன் என் பிதாவுக்கு அன்பாயிருப்பான்; நானும் அவனில் அன்பாயிருந்து, அவனுக்கு என்னை வெளிப்படுத்துவேன் என்றார். ஸ்காரியோத்தல்லாத யூதா என்பவன் அவரை நோக்கி: ஆண்டவரே, நீர் உலகத்துக்கு உம்மை வெளிப்படுத்தாமல் எங்களுக்கு உம்மை வெளிப்படுத்தப் போகிற காரணமென்ன என்றான். ('உலகம்' என்பது 'உலக ஒழுங்கு' என்று பொருள்படும்). உங்கள் வேதாகமத்தில் 'ஓர் அர்த்தம்' (margin reading) இருக்குமானால், அதில் 'உலக ஒழுங்கு' என்று எழுதப்பட்டுள்ளதைக் காண்பீர்கள். அது ஸ்தாபன சபைகள் போன்றவைகளை குறிக்கிறது. பாருங்கள்? ''நீர் எப்படி எங்களுக்கு மாத்திரம் உம்மை வெளிப்படுத்தி, அவர்களுக்கு உம்மை வெளிப்படுத்தாமல் இருக்கலாம்? நீர் எப்படி அவ்வாறு செய்யலாம்?'' இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: ஒருவன் என்னில் அன்பாயிருந்தால், அவன் என் வசனத்தைக் கைக்கொள்ளுவான்... (ஆமென்!)... அவனில் என் பிதா அன்பாயிருப்பார்; நாங்கள் அவனிடத்தில் வந்து அவனோடே வாசம் பண்ணுவோம். என்னில் அன்பாயிராதவன் என் வசனங்களைக் கைக் கொள்ள மாட்டான்... (அவன் ஸ்தாபனங்கள் கூறுவதை ஒருக்கால் கைக் கொள்ளுவான், ஆனால் அவர் கூறுவதைக் கைக் கொள்ளமாட்டான். பாருங்கள்?)... நீங்கள் கேட்கிற வசனம் என்னுடையதாயிராமல் என்னை அனுப்பின பிதாவினுடையதாயிருக்கிறது. நான் உங்களுடனே தங்கியிருக்கையில் இவைகளை உங்களுக்குச் சொன்னேன். என் நாமத்தினாலே பிதா அனுப்பப் போகிற பரிசுத்த ஆவியாகிய தேற்றரவாளனே எல்லாவற்றையும் உங்களுக்குப் போதித்து, நான் உங்களுக்கு சொன்ன எல்லாவற்றையும் (அதாவது அவருடைய வார்த்தையை)... உங்களுக்கு நினைப்பூட்டுவார். (அப்படியானால் எந்த நோக்கத்துக்காக தேவன் பரிசுத்த ஆவியை அனுப்பினார்? தேவன் தாமே தமது ஆசீர்வாதங்களை தமது வார்த்தையுடன் கூட்டுவாராக). யோவான்: 14: 20-26 9.இயேசு, ''நான் என் பிதாவிலும், பிதா என்னிலும் - நான் உங்களிலும், நீங்கள் என்னிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள்'' என்றார். இப்பொழுது, நாம் இதை கூறுவோமானால்... இது ஒலிநாடாவில் பதிவு செய்யப்படப் போகிறது என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். லூயிவில்லில் உள்ள கிறிஸ்தவ வர்த்தகர் ஒருவர் சற்று முன்பு என்னை தொலைபேசியில் கூப்பிட்டு, பில்லி, “நேற்று இரவு நீர் அளித்த செய்தி நாற்பதாயிரம் பேர்களை அடையாமல், உமது சிறிய கூடாரத்திலுள்ள நூற்றைம்பது, இருநூறு அல்லது முன்னூறு பேர்களை மாத்திரம் அடைவது அவமானமான ஒரு செயல்'' என்றார். நான், “ஐயா, இப்பொழுது முதல் ஆறு மாதங்களில், இயேசு வரத் தாமதிப்பாரானால், உலகம் முழுவதுமே இதைக் கேட்கும்'' என்றேன். பாருங்கள்? இந்த ஒலிநாடாக்கள் உலகம் முழுவதும் செல்கின்றன (பாருங்கள்?) - உலகம் சுற்றிலும். எனவே நாம் சத்தியம் என்று விசுவாசிப்பவைகளையும் தேவன் சத்தியம் என்று நமக்கு உறுதிப்படுத்தினவைகளாக நாம் அறிந்துள்ளவைகளையும் நாம் இங்கு இப்பொழுது போதிக்கிறோம். 10.இப்பொழுது, நோக்கம்... பரிசுத்த ஆவியை தேவன் அனுப்பியதன் நோக்கம் என்ன? (இதற்கு ஆதாரமாக யோவான் 14-ம் அதிகாரம், 14-ம் வசனம் துவங்கி அந்த அதிகாரத்தை வாசித்ததை இங்கு வலியுறுத்துகிறேன்.) பரிசுத்த ஆவியை அனுப்பியதற்கு தேவனுக்கு ஒரே ஒரு நோக்கம் இருந்ததென்று இங்கு நாம் காண்கிறோம். அதாவது தேவனே தமது சபையில் வாசம் செய்து தமது சபையின் மூலம் தமது திட்டங்களைத் தொடர வேண்டும் என்பதே அந்த நோக்கம். தேவன் கிறிஸ்துவுக்குள் வாசம்செய்து, கிறிஸ்துவின் மூலம் தமது திட்டங்களை நிறைவேற்றி வந்தார், இப்பொழுது கிறிஸ்துவிலிருந்து சபைக்குள் வந்து, சபையின் மூலம் தமது கிரியைகளை தொடர்ந்து நடத்துகிறார். பரிசுத்த ஆவி என்னவென்று நாமறிவோம். அது தேவன் என்று சென்ற இரவு நாம் கண்டு கொண்டோம். நாம் தேவனாகிய பிதா (இயேசு இங்கு கூறினது போன்று) - அவருடைய பிதா, தேவனுடைய குமாரனாகிய இயேசு, இன்றைக்கு நாம் அழைப்பது போல் தேவனுடைய பரிசுத்த ஆவி என்பதை நினைத்து பார்க்கும்போது... மூன்று நபர்கள், வெவ்வேறு தெய்வங்கள் உள்ளனர் என்று அதன் அர்த்தம் இல்லை. ஒரே தேவன் மூன்று உத்தியோகங்களில் இருக்கிறார் என்பதே அதன் அர்த்தம். அதை நாம் இவ்வாறு கூறலாம். தேவன் என்னவாயிருந்தாரோ, அது அனைத்தையும் கிறிஸ்துவுக்குள் ஊற்றினார். அவர் தம்மை வெறுமையாக்கி அதை கிறிஸ்துவுக்குள் ஊற்றினார். கிறிஸ்து தேவத்துவத்தின் பரிபூரணமாக சரீரப்பிரகாரமாக இருந்தார். யேகோவா என்னவாயிருந்தாரோ, அது அனைத்தையும் அவர் கிறிஸ்துவுக்குள் ஊற்றினார். கிறிஸ்து என்னவாயிருந்தாரோ, அது அனைத்தையும் அவர் சபைக்குள் ஊற்றினார் - ஒரு நபருக்குள் அல்ல, ஆனால் முழு சரீரத்துக்குள்ளும். நாம் ஒன்று கூடும்போது, நமக்கு வல்லமையுள்ளது. தேவன் என்னவாயிருந்தாரோ, அது அனைத்தும் கிறிஸ்துவுக்குள் இருந்தது. கிறிஸ்து என்னவாயிருந்தாரோ, அது அனைத்தும் உங்களுக்குள் இருக்கிறது. ''தேவன் மாம்சமாகி நம்மிடையே வாசம் பண்ணினார். (நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், அது 1தீமோ:3:16) அன்றியும் தேவ பக்திக்குரிய இரகசியமானது யாவரும் ஒப்புக் கொள்ளுகிறபடியே மகா மேன்மையுள்ளது; தேவன் மாம்சத்திலே வெளிப்பட்டார்''. நாங்கள் எங்கள் கைகளினாலே அவரைத் தொட்டோம். யேகோவா தேவன் மாமிசமாகி பூமியில் நடந்தார். எங்கள் கண்களினாலே அவரைக் கண்டோம் (1யோவான்:1:1) 11.உங்களுக்குத் தெரியுமா, அந்த யோவான் 14-ம் அதிகாரத்திலே பிலிப்பு, “ஆண்டவரே, பிதாவை எங்களுக்குக் காண்பியும், அது எங்களுக்குப் போதும்'' என்றான் (யோவான் 14:8). இயேசு, ''பிலிப்புவே, இவ்வளவு காலம் நான் உங்களுடனே கூட இருந்தும் நீ என்னை அறியவில்லையா? என்னை நீ கண்டதனால், பிதாவைக் கண்டுவிட்டாய். அப்படியிருக்க, பிதாவை எங்களுக்குக் காண்பியும் என்று நீ எப்படி சொல்லுகிறாய்?'' என்றார். தேவன் மாமிசமானார். இதுதான் அது. பிதா உங்கள் மேல் உள்ள தேவன். நாம் சொல்லுகிறோம்... நாம் ஆதாம் இருந்தது முதல் இருக்கிறோம். பிதாவாகிய தேவன் அக்கினி ஸ்தம்பத்தில் மோசேயின் மேலும் இஸ்ரவேல் புத்திரர் மேலும் இருந்தார். பிறகு தேவன் கிறிஸ்துவில் நம்மோடு கூட இருந்து, நம்மோடு கூட நடந்து, நம்மோடு கூட புசித்து, நம்மோடு கூட உறங்கினார். நம் மேல் தேவன், நம்மோடு தேவன், இப்பொழுது நமக்குள் தேவன். தேவன் என்னவாயிருந்தாரோ, அது அனைத்தும் கிறிஸ்துவுக்குள் வந்தது, கிறிஸ்து என்னவாயிருந்தாரோ, அது அனைத்தும் சபைக்குள் வந்துள்ளது. அது என்ன? தேவன் உங்களுக்குள் இருந்து கொண்டு கிரியை செய்கிறார். உலகின் எந்த பாகத்திலும், அவர் உங்களை அழைக்க விரும்பினால், நீங்கள் அங்கே இருக்கிறீர்கள் அவருடைய நன்மையான சித்தத்தைச் செய்ய உங்களுக்குள் இருந்து கொண்டு கிரியை செய்தல். அதற்காக நாம் எவ்வளவாக தேவனுக்கு நன்றியுள்ளவர்களாயிருக்க வேண்டும். தேவன் தமது சபையில் வாழ்ந்து, ஒவ்வொரு காலத்தின் வழியாகவும் அசைந்து, தமது தெய்வீக சித்தத்தை செய்ய வேண்டும் என்னும் நோக்கத்திற்காகவே தேவனாகிய பரிசுத்த ஆவி அனுப்பப்பட்டுள்ளார். 12.மனிதர் உங்களைப் பரிகாசம் செய்யும்போது, அவர்கள் உங்களைப் பரிகாசம் செய்யவில்லை, உங்களை அனுப்பினவரை பரிகாசம் செய்கின்றனர். இயேசு, “என் நாமத்தினிமித்தம் பலவிதமான தீமையான மொழிகளை உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்'' என்றார் (மத். 5:11). மேலும், ”கிறிஸ்து இயேசுவுக்குள் தேவபக்தியாய் நடக்க மனதாயிருக்கிற யாவரும் துன்பப்படுவார்கள்“ (2தீமோ. 3:12). தேவன் தம்மை கிறிஸ்துவில் வெளிப்படுத்தினபோது, அவர்கள் அவரை வெறுத்தனர். அவரை அதிகமாக வெறுத்தது யார்? சபைதான் அவரை அதிகமாக வெறுத்தது. அவர்கள் குடிகாரனைக் காட்டிலும் அவரை அதிகமாக வெறுத்தனர். மற்றெல்லா மனிதரைக் காட்டிலும் அவர்கள் தான் அவரை அதிகமாக வெறுத்தனர். சபைதான் அவரை வெறுத்தது. எனவே நீங்கள் 'காஸ்மாஸ்' (Kosmos) என்னும் உலக ஒழுங்கைக் காணும்போது... ”உலகமோ அவரை அறியவில்லை'' என்றால் “சபை என்று தவறாக அழைக்கப்பட்ட ஸ்தாபன சபை அவரை அறியவில்லை'' என்று அர்த்தம். ''அவர் தமக்குச் சொந்தமானதிலே வந்தார். அவருக்குச் சொந்தமானவர்களோ அவரை ஏற்றுக் கொள்ளவில்லை. அவருடைய நாமத்தின் மேல் விசுவாசமுள்ளவர்களாய் அவரை ஏற்றுக் கொண்டவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களும் தேவனுடைய பிள்ளைகளாகும்படி அவர்களுக்கு அதிகாரங் கொடுத்தார்'' (யோவான். 1:10-12). ஓ, நாம் எவ்வளவாக அவரில் அன்பு கூர்ந்து அவரை ஆராதிக்க வேண்டும். தேவன் ஐக்கியங் கொள்ள விரும்பின நோக்கம் என்னவெனில்... உதாரணமாக 13.இந்த வேத வாக்கியத்தை நாம் விட்டு செல்வதற்கு முன்பு, ஒரு உதாரணத்தை இங்கு உபயோகிப்போம். ரூத்தின் நாட்களில் மீட்பின் பிரமாணத்தில், நகோமி துன்பத்தின் காரணமாகவும், வறுமை நிலைமை ஏற்பட்ட காரணத்தாலும் தன் தேசத்தை விட்டு வெளியேறி மோவாபிய தேசத்துக்கு சென்றாள். அது வெதுவெதுப்பான, பெயர்க் கிறிஸ்தவர்களைக் கொண்டதாயிருந்தது. ஏனெனில் மோவாபியர் லோத்தின் குமாரத்தியிலிருந்து தோன்றியவர்கள். அவர்கள் விசுவாசிகள் என்று தவறாக அழைக்கப்பட்டு, மற்றவர்களுடன் கலந்திருந்தனர். பிறகு, அவளுடைய கணவன் மரித்துப் போனான். அவளுடைய இரண்டு குமாரரும் மரித்தனர். நகோமி தன் தேசத்துக்கு திரும்பி வரும் வழியில் ரூத்... நகோமி... இருவருமே திரும்பி வரும் வழியில் நகோமியின் ஒரு மருமகளான ஓர்பாள், தன் தேசத்திற்கும், தன் தெய்வங்களிடமும், தன் சபையிடமும், தன் ஜனத்தண்டைக்கும் திரும்பிப் போவதாகக் கூறிக் சென்றுவிட்டாள். ரூத்தும் திரும்பி செல்ல நகோமி எவ்வளவோ வற்புறுத்தின போதிலும் அவள், ''உம்முடைய ஜனம் என்னுடைய ஜனம்; உம்முடைய தேவன் என்னுடைய தேவன். நீர் மரணமடையும் இடத்தில் நானும் மரணமடைந்து, அங்கே அடக்கம் பண்ணப்படுவேன். நான் திரும்பி போகமாட்டேன்'' என்று கூறிவிட்டாள்.(ரூத்.1:16-17) ஒருவன் தரிசனத்தை கிரகித்துக் கொள்ளும்போது அப்படித்தான் செய்வான். அவளுடைய ஜனங்கள் “நீ அங்கு சென்று உருளும் பரிசுத்தர் ஆகப் போகின்றாய்'' என்று கூறின போதும், அது அவளை பாதிக்கவில்லை. ரூத்தின் மனப்பான்மையில் அது எந்த வித்தியாசத்தையும் உண்டு பண்ணவில்லை. தேவனுடைய நோக்கம் ஒன்று நிறைவேற வேண்டியிருந்தது. 14.நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள இன்றிரவு நிச்சயமாக பசியுற்றிருக்கிறீர்கள். உங்களிலுள்ள ஏதோ ஒன்று உங்களை இழுக்கின்றது. ரூத்தின் வாழ்க்கையில் தேவனுடைய நோக்கம் நிறைவேற வேண்டியிருந்தது போன்று, உங்கள் வாழ்க்கையிலும் அவருடைய நோக்கம் நிறைவேற வேண்டியதாயுள்ளது. அந்த வரலாறு மிகவும் அருமையானதால், அதை என்னால் ஒரு வினாடியும் கூட விட்டு விலக முடியவில்லை. உங்களுக்கு மீட்பின் பிரமாணம் தெரியும். போவாஸ்... ரூத் எவ்வாறு போவாஸின் வயலில் கதிர்களைப் பொறுக்கி போவாஸின் கண்களில் தயை பெற்றாள் என்னும் வரலாற்றை நீங்கள் அறிவீர்கள். அவன் அவளை விவாகம் செய்யும் முன்பு, நகோமி இழந்த எல்லாவற்றையும் அவன் மீட்க வேண்டியதாயிருந்தது. மீட்பின் பிரமாணத்தின்படி, நகோமியின் வயல் நிலத்தை வாங்கக் கூடிய ஒரே ஒருவன் நெருங்கின சுதந்தரவாளி. அவன் மீட்க வேண்டுமானால், அவன் மிகவும் நெருங்கின சுதந்தாவாளியாக இருக்க வேண்டும். போவாஸ் அவளை மீட்க எண்ணம் கொண்ட மிகவும் நெருங்கின சுதந்தரவாளியாக இருந்தான். அவன் பட்டின வாசலின் வெளிப்புறத்தில், நகோமி இழந்த எல்லாவற்றையும் அவன் மீட்டுவிட்டதாக பகிரங்கமாக ஒருஅடையாளம் அல்லது அறிக்கை செய்ய வேண்டியதாயிருந்தது. போவாஸ் மூப்பர்களின் முன்னிலையில் தன் பாதரட்சையை கழற்றி, ''நகோமிக்கு சொந்தமான ஏதாகிலும் இங்குள்ள யாரிடமாவது இருக்குமானால், இன்றைய தினம் அதை நான் மீட்டுக் கொண்டேன்'' என்றான். 15.அப்படித்தான் தேவன் செய்தார் தம்முடைய சொந்த பிரமாணங்களை அவரும் கைக்கொண்டார். நீங்கள் கைக் கொள்ள தேவன் ஒரு பிரமாணத்தை உங்களுக்கு அளித்துவிட்டு, அவர் வேறொரு பிரமாணத்தைக் கைக் கொள்வதில்லை.அவர் தம்முடைய சொந்த பிரமாணங்களையே கைக் கொள்ளுகின்றார். தேவன் இழந்து போன சபையை, இழந்து போன உலகத்தை, இழந்து போன சிருஷ்டிப்பை மீட்கும் பொருட்டு... ஆவியில் முடிவற்றவராக இருக்கும் தேவன், மானிட வர்க்கத்தை மீட்கும் பொருட்டு, தாமே நெருங்கிய இனத்தான் ஒருவராக, ஒரு மனிதனாக, மரியாளின் கர்ப்பத்தில் அவர் சிருஷ்டித்த ஒரு குமாரனாக ஆனார். பிறகு அவர் ஒரு அடையாளம் அல்லது ஒரு சாட்சியை கொடுத்தார். எருசலேமின் வாசல்களுக்குப் புறம்பே அவர் வானத்துக்கும் பூமிக்கும் மத்தியில் உயர்த்தப்பட்டு, மரித்து, எல்லாவற்றையும் மீட்டுக் கொண்டார். அவர் தமது இரத்தத்தை சிந்தி, சபையை பரிசுத்தப்படுத்தி, அதில் அவரே வாழ்ந்து, ஏதேன் தோட்டத்தில் சாயங்கால நேரத்தில் தேவன் இறங்கி வந்து ஆதாமுடன் பெற்றிருந்த அந்த இழந்து போன ஒவ்வொரு ஐக்கியத்தை மீண்டும் நிலை நிறுத்தவும் அவர்களுடன் உறவாடவும் பொருட்டு அப்படி செய்தார். சூரிய அஸ்தமனத்தின் போது, குளிர்ச்சியான வேளையிலே தேவன் இறங்கி வந்தார் என்பதை கவனித்தீர்களா? இரவு நேரம் வர ஆரம்பிக்கும் போது, ஏதோ ஒன்று நடக்கிறது. ஜனங்கள் - கிறிஸ்தவர்கள் - சபையையும் தேவனையும் குறித்து அப்பொழுது சிந்திக்கின்றனர். நீங்கள் சூரியன் அஸ்தமிப்பதை காண்கிறீர்கள்; உங்கள் சூரியன் அஸ்தமித்துக் கொண்டிருப்பதை உணருகிறீர்கள். 16.சாயங்கால நேரத்தில் குளிர்ச்சியான வேளையில், அவர் இறங்கி வந்து அவர்களுடன் உறவாடுவது வழக்கம். அங்கு அவர் அந்த ஐக்கியத்தை இழந்தார். பாவமானது அவர் ஐக்கியங் கொள்ளாதபடி தடை செய்தது. பிறகு அவர் மாமிசமாகி, நம்மிடையே வாசம் பண்ணி, அவர் மறுபடியும் மனிதனிடம் வந்து, மனிதனில் வாழ்ந்து, மனிதனை அவருடன் மீண்டும் ஐக்கியம் கொள்ளும் நிலைக்கு கொண்டு வந்து, தேவனளித்த உரிமைகளை அவனுக்கு மீண்டும் அளிக்கும் பொருட்டு அப்படி செய்தார். அதைத்தான் அவர் செய்தார். பரிசுத்த ஆவியின் நோக்கம் அதுவே. அது மறுபடியுமாக பிதா; தேவனாகிய பிதா, உங்களுக்குள் வாசம் செய்து தமது மீட்பின் திட் டத்தை முடிக்க உங்கள் மூலம் கிரியை செய்து, உங்களை அவருடன் உடன் ஊழியக்காரராக்கி, உங்களுக்கு ஒரு ஸ்தானத்தை அளித்து, விழுந்து இழந்து போன உங்கள் சகோதரனையும் சகோதரியையும் மீட்பதற்கென உங்களுக்கு ஒரு பாகத்தை அளித்து, அவருடைய ஆவியையும் அவருடைய அன்பையும் உங்களுக்குக் கொடுத்து, அவர் ஏதேன் தோட்டத்தில், “ஆதாமே, ஆதாமே, நீ எங்கேயிருக்கிறாய்?'' என்று கூப்பிட்டு அவனைத் தேடினது போல, நீங்களும் இழந்து போனவர்களைத் தேடும்படி செய்கிறார். அது தான் பரிசுத்த ஆவி ஒரு மனிதனுக்கும் ஒரு ஸ்திரீக்கும் செய்கிறது. பரிசுத்த ஆவி அவர்களுடைய இருதயங்களில் நுழைந்து வாசம் பண்ணும்போது, இழந்து போன ஆத்துமாக்களுக்காக பசி தாகம் உண்டாகின்றது. ஆனால் இன்று நடைபெறும் கூட்டங்களில் உள்ள விவகாரம் என்னவெனில், அங்கு போதிய ஆவியின் தொடுதலே இல்லை. இழந்து போய் மரித்துக் கொண்டிருக்கிற ஆத்துமாக்களின் பின்னால் செல்லுங்கள். ஆத்துமாக்களை ஆதாயம் செய்வதற்கு பதிலாக, இன்றைக்கு தங்களுக்கென புகழ் சம்பாதிக்க பெரிய கட்டிடங்களும், ஸ்தாபனங்களும் அதிகமாக எழும்புகின்றன என்பது எவ்வளவு பரிதாபமான ஒரு செயல்! நாம் இதைக் குறித்து அதிக நேரம் பேசிக் கொண்டே செல்லலாம். 17.தேவன் தம்மை கிறிஸ்துவுக்குள் ஊற்றினார். அது உண்மை. கிறிஸ்து தம்மை சபைக்குள் ஊற்றினார். எனவே இப்பொழுது கவனியுங்கள்! நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். அந்நாளிலே நீங்கள் அதை அறிந்து கொள்வீர்கள். ஏனெனில் அது முழுவதும் ஒரே மீட்பின் திட்டம். தேவன் மறுபடியும் இறங்கி வந்து, அவர் ஆதியில் செய்தது போலவே தமது ஜனங்களின் மத்தியில், தமது ஜனங்களுடன் வாழ்ந்து, அவர்களுடன் உறவாடுவது. அவர் தமது சபையை பேசும் நிலைக்கு; அவர் தமது சபையின் மூலம் பாயும் நிலைக்கு அதை கொண்டு வரும் போது, ஒரு ஏதேன் தோன்றும். சபை அவரை எங்கு கைவிட்டதோ, அந்த ஒரு இடத்திற்கு, அது விழுந்து போன அந்த ஒரு ஏதேனுக்கு அவர் சபையை மறுபடியும் கொண்டு செல்வார். அது... அங்கு தான் அது முதலாவதாக விழுந்தது. அது மறுபடியும் அதே இடத்துக்கு, முழுவதும் மீட்கப்பட்டதால், திரும்ப கொண்டு செல்லப்படும். 18.சபையானது இவ்வுலகில் சில காலமாக இருந்து வந்துள்ளது. சபை, உண்மையில், 1500 ஆண்டுகளாக இருந்த இருளின் காலங்களுக்குப் பிறகு சீர்திருத்தம் அடைந்தபோது... அப்போஸ்தலர்களுக்குப் பிறகு தோன்றிய முதல் சீர்திருத்தக்காரர் லூத்தரே. லூத்தர் தோன்றின போது, தேவன் சிறிது ஆவியை சபையின்மேல் ஊற்றி நீதிமானாக்கப்படுதலை அளித்தார். பிறகு வெஸ்லியின் நாட்களில், சிறிது அதிகமாக தம்மை ஊற்றி பரிசுத்தமாக்கப்படுதலை அளித்தார். காலம் வளர்ந்து கொண்டே வந்து முடிவு காலத்தை அடைந்துள்ளபோது, தேவன் தமது சபையை நிறைத்து வருகிறார். நீங்கள் சுற்றிலும் நோக்கி, அது உண்மையா இல்லையாவென்று கண்டுகொள்ளுங்கள். சரித்திரம் படிக்கிறவர்களே, லூத்தரன் காலத்தைப் பாருங்கள், அவர்களுக்கு உண்டான எழுப்புதலையும் அவர்கள் என்ன செய்தனரென்றும் பாருங்கள். வெஸ்லியின் காலத்தில் உண்டான எழுப்புதல் அதைக் காட்டிலும் எவ்வளவு பெரியதென்றும், அதைக் காட்டிலும் எவ்வளவு அதிகம் வல்லமை இருந்ததென்றும் பாருங்கள். ஆனால் அது சிறுபான்மையோரைக் கொண்டிருந்தது. பெந்தெகொஸ்தேயினரின் நாட் களில் அவர்களுக்கு எத்தகைய எழுப்புதல் உண்டாயிருந்ததென்றும், அது எவ்வளவு தூரம் பரவினதென்றும் கவனியுங்கள். 19.''எங்கள் ஞாயிறு விருந்தினர்“ (Our Sunday Visitor) என்னும் கத்தோலிக்க செய்தித்தாள், பெந்தெகொஸ்தேயினர் ஒரே ஆண்டில் 15,00,000 பேர்களை இரட்சிப்புக்குள் கொண்டு வந்து, மற்றெல்லா சபைகளும் ஒருங்கே செய்ததைக் காட்டிலும் அதிகம் செய்துள்ளனர் என்று அறிக்கைவிடுத்துள்ளது. கத்தோலிக்கர் பத்து லட்சம் பேர்களை மாத்திரமே தங்கள் சபையில் சேர்த்ததாக உரிமை கோரினர். அவர்களுடைய சொந்த செய்தித்தாளாகிய, 'ஞாயிறு விருந்தினரில்', பெந்தெகொஸ்தேயினர் அவர்களை மிஞ்சிவிட்டதாக வாக்குமூலம் அளித்துள்ளனர். பெந்தெகொஸ்தேயினரால் உண்டான இரட்சிப்பு என்பதை பரிசுத்த ஆவியால் உண்டான இரட்சிப்பு என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். அவர்கள் சிறுபான்மையோராக வீதிகளின் ஓரங்களில் பழைய 'கிட்டார்' (guitar)ருடன் துவங்கினர். ஸ்திரீகளுக்கு ஒரு ஜதை காலுறைகள் வாங்கக் கூட பணமில்லை. அவர்கள் ரயிலடிகளில் படுத்து, சோளத்தை பொறுக்கி பொடியாக்கி, தங்கள் பிள்ளைகளுக்கு ரொட்டி உண்டாக்கி கொடுத்தனர். ஆனால் அதிலிருந்து என்ன தோன்றியது? இன்றைக்கு உலகிலேயே மிகவும் வல்லமையாக விளங்கும் சபை - உலகின் கண்களில் அல்ல, ஆனால் தேவனின் கண்களில். ஏனெனில் அவர் அவர்களுக்கு என்ன செய்கிறாரோ, அதன் மூலம் அதை நிரூபிக்கிறார். அவர் தம்மை அவர்களுக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறார் - அதை ஊற்றிக் கொண்டிருக்கிறார். 20.இப்பொழுது, என்ன நடந்துள்ளதென்று கவனியுங்கள். தேவன் தம்மை அவர்களுக்குள் ஊற்றிக் கொண்டிருக்கிறார். இப்பொழுது சபையானது லூத்தர், வெஸ்லி ஆகியோரைக் கடந்து... பெந்தெகொஸ்தேயினரிடையே எழுப்புதல் எழுந்துள்ளது. நாம் அடைந்துள்ள இந்த காலத்தில், அதே பரிசுத்த ஆவியினால் இன்னும் சற்று அதிகம்... முன் காலத்தில் லூத்தரன்கள் இரட்சிக்கப்பட்டபோது, அவர்கள் பரிசுத்த ஆவியின் ஒரு பாகத்தைப் பெற்றனர். மெதோடிஸ்டுகள் பரிசுத்தமாக்கப்பட்டபோது, அதுவும் பரிசுத்த ஆவியின் கிரியையே. பாருங்கள்? அது பரிசுத்த ஆவியின் ஒரு பாகம். ''நம்மையல்லாமல் அவர்கள் பூரணராக முடியாது'' (எபி. 11:40) என்று வேதம் கூறுகிறது. பாருங்கள்? இப்பொழுது தேவன், இந்த கடைசி நாட்களில் வெளிச்சம் பிரகாசிக்கத் துவங்கிவிட்டதால், ஒரு பெரிய காரியத்தை அவர் நம்மிடமிருந்து எதிர்பார்க்கிறார். ஏனெனில் எவனிடத்தில் அதிகங் கொடுக்கப்படுகிறதோ, அவனிடத்தில் அதிகங் கேட்கப்படும் (லூக். 12:48). எனவே அவர் லூத்தரன்கள் அல்லது மெதோடிஸ்டுகளைக் காட்டிலும் நம்மிடத்தில் அதிகம் கேட்பார். ஏனெனில் நாம் அவர்கள் பெற்றிருந்ததைக் காட்டிலும் அதிக வெளிச்சத்தில், அதிக வல்லமையில், மிகப் பெரிய சாட்சியில் நடந்து கொண்டிருக்கிறோம். நாம் உயிர்த்தெழுதலின் மிகப் பெரிய சாட்சியை உடையவர்களாயிருக்கிறோம். அவர்களைக் காட்டிலும் நாம் மிக உறுதியான, மிக நிச்சயமான காரியங்களைப் பெற்றுள்ளோம். 21.அண்மையில் நான் ஒரு லூத்தர்ன் கல்லூரியில் கூறினது போன்று. அவர்கள், ''எங்களிடம் என்ன உள்ளது?'' என்று வினவினர். நான் ஒரு மனிதன் வயலில் சோளத்தை விதைத்தான். “முதலாவதாக சிறு முளைகள் முளைத்தெழும்பின. அவன், 'சோளப் பயிருக்காக கர்த்தருக்கு ஸ்தோத்திரம்' என்றான். மறைமுகமாக (potentially) அவன் அதை பெற்றிருந்தான். ஆனால் அவன் அதை பெற்றிருந்தான். ஆனால் அவன் அதை ஆரம்ப கட்டத்தில் மாத்திரமே பெற்றிருந்தான். படிப்படியாக அது தண்டாக மாறி அதிலிருந்து மகரந்தப்பொடி தோன்றினது. அதுதான் மெதோடிஸ்டுகள்'' என்றேன். நீங்கள் இயற்கையை கவனிப்பீர்களானால், தேவன் கிரியை செய்வதை நீங்கள் காண்பீர்கள். என் ஊழியத்தோடும் சம்பந்தப்பட்ட ஒரு இரகசியம் அதில் அடங்கியுள்ளது. பாருங்கள்? இயற்கையை கவனித்து, அது எப்படி வளருகிறது; எந்த காலத்தில், எந்த நேரத்தில் எது தோன்றுகிறது என்று கண்டால், நீங்கள் எந்த காலத்தில் வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்து கொள்வீர்கள். காலத்தை கவனித்து வாருங்கள். 22.மெதோடிஸ்டுகள் தான் மகரந்தப்பொடி அவர்கள் திரும்பி லூத்தரன்களைப் பார்த்து, ''நாங்கள் பரிசுத்தமாக்கப்படுதலைப் பெற்றுள்ளோம். உங்களுக்கு அதில் ஒன்றுமேயில்லை'' என்றனர். படிப்படியாக மகரந்தப் பொடியிலிருந்து தானியம் தோன்றினது - கதிரிலே நிறைந்த தானியம். அதுதான் பெந்தெகொஸ்தே. பார்த்தீர்களா; நீதிமானாக்கப்படுதல், அதன் ஒரு கட்டம்; பரிசுத்தமாக்கப்படுதல், அதன் மற்றொரு கட்டம், பரிசுத்த ஆவி, அதன் மற்றொரு கட்டம் - லூத்தர், வெஸ்லி, பெந்தெகொஸ்தேயினர். பெந்தெகொஸ்தே என்ன... அதை நான் ஒப்பிடுகிறேன், ஏனெனில் பெந்தெகொஸ்தே மறுபடியும் பச்சை இலை, அல்லது மகரந்தப் பொடியை தோன்றச் செய்யவில்லை... ஆனால் தானியம் மகரந்தப் பொடியை நோக்கி, ''உன்னால் எனக்கு ஒரு உபயோகமுமில்லை'' என்று கூற முடியாது. அவ்வாறே மகரந்தப் பொடியும் இலையை நோக்கி, ''உன்னால் எனக்கு ஒரு உபயோகமுமில்லை'' என்று கூற முடியாது. ஏனெனில் இலையிலிருந்த அதே ஜீவன் தான் மகரந்தப் பொடியை தோன்றச் செய்தது. அது போன்று லூத்தரன் சபைதான் வெஸ்லியன் சபையை தோன்றச் செய்தது. அவ்வாறு வெஸ்லியன் சபை பெந்தெகொஸ்தேவை தோன்றச் செய்தது. பெந்தெகொஸ்தே அது என்ன? துவக்கத்தில் பூமிக்கடியில் சென்ற கோதுமை மணியைப் போன்ற கோதுமை மணியை திரும்ப அளித்து, இந்தக் கடைசி நாளில் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தினால் (பாருங்கள்?) பெந்தெகொஸ்தே வல்லமையின் முழுமையை திரும்பக் கொண்டு வருதல். ஓ, அதை விசுவாசித்து அதைக் காண்பது பெரிய செயல்! 23.நாம் வாழ்ந்து கொண்டிருக்கும் இந்த காலம் பெந்தெகொஸ்தேவையும் கடந்த ஒன்று. பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்களை உண்டாக்கிக் கொண்டு, “நாங்கள் இது, நாங்கள் அது'' என்று கூறிக் கொண்டு, அநேக ஸ்தாபனங்களை பாவனை செய்து வருகிறது. அது இயற்கை. அதை நீங்கள் ஒன்றும் செய்ய முடியாது. அது இயற்கை. அவர்கள் அப்படித்தான் செய்வார்கள். அவர்கள் அப்படி செய்ய வேண்டுமென்று நியமிக்கப்பட்டுள்ளது. ஆனால் சபையோ அதை கடந்து சென்றுவிட்டது. அது அதைக் காட்டிலும் பெரிய, வல்லமையுள்ள ஒன்றுக்குள் சென்றுவிட்டது. அது வரங்கள் புதுப்பிக்கப்படுதல். பெந்தெகொஸ்தேயினரில் பலருக்கு தெய்வீக சுகமளித்தலிலும், தேவ தூதர்களின் ஊழியத்திலும், தேவனுடைய வல்லமையிலும் நம்பிக்கையில்லை. நான் காணும் தரிசனங்களை பெந்தெகொஸ்தேயினரில் பலர் பிசாசினால் உண்டானது என்கின்றனர். அநேக பெந்தெகொஸ்தே ஸ்தாபனங்கள் அதனுடன் எவ்வித தொடர்பும் கொள்ள மறுக்கின்றன. பாருங்கள், நாம் அதைக் கடந்து சென்றுவிட்டோம். பெந்தெகொஸ்தேயினர் அந்நிய பாஷை பேசினதற்காக மெதோடிஸ்டுகள் அவர்களை 'பைத்தியக்காரர்' என்றழைத்தது போலவும், மெதோடிஸ்டுகள் கூச்சலிட்டதற்காக லூத்தரன்கள் அவர்களை 'பைத்தியக்காரர்' என்றழைத்தது போலவும்... பாருங்கள்? ஆனால் இவையனைத்தும் பரிசுத்த ஆவியினால் உண்டாகி, முடிவில் மகத்தான சபை சர்வ வல்லமையுள்ள தேவனின் வல்லமையினால் முழுவதுமாக (அல்லேலூயா) நிரப்பப்பட்டு, இயேசு செய்த அதே கிரியைகள் இப்பொழுது சபையில் காணப்படும் நிலைக்கு அது கொண்டு வரப்படுகின்றது. நண்பர்களே, நாம் அருகாமையில் இருக்கிறோம். 24.இங்கு ஒரு நிமிடம் நிறுத்திக்கொண்டு, தேவன் பரிசுத்த ஆவியை எதற்காக சபையில் வைத்தார் என்பதை உங்களுக்கு காண்பிக்க, வேறொரு உதாரணத்தைக் கூற விரும்புகிறேன். பழைய ஏற்பாட்டின் காலத்தில், ஒரு பிள்ளை... ஒரு மனிதன் தனக்கென்று ஒரு குடும்பத்தை உண்டாக்கிக் கொள்கிறான். முதலில் அவன் தன் மணவாட்டியை தெரிந்து கொள்கிறான். பின்பு அவன் ஒரு ஸ்தாபனத்தைப் போல் பெரியவனாகின்றான். அது நல்லது. அடுத்ததாக அவனுடைய குடும்பத்தில் ஒரு குழந்தை பிறக்கிறது. அப்பொழுது தான் பரிசுத்த ஆவி (பாருங்கள்?) - வேறொரு ஆவி உள்ளே வருகிறது. அது ஒரு குமாரன். அந்த குமாரன் ஒரு குறிப்பிட்ட வயது அடையும் வரைக்கும் முழு பொறுப்பும் வகிப்பதில்லை, அல்லது சுதந்தரவாளியாகவும் ஆகிவிடுவதில்லை, அவன் முதலாவதாக நிரூபிக்கப்பட வேண்டும். ஆம்! அதன்பிறகு, அவர்களுக்கு புத்திர சுவீகாரத்தைக் குறித்த ஒரு பிரமாணம் உண்டாயிருந்தது. (போதகர்களே, குமாரனை நியமித்தல் என்பதைக் குறித்து தான் நான் இப்பொழுது பேசிக் கொண்டிருக்கிறேன்). அவன் சுவீகாரப் புத்திரனாக ஆகும் நிலையையடையும் போது... இயேசு இதைக் குறித்த அழகான விவரணத்தை மறுரூப மலையின் மேல் அருளினார். நான் உங்களுக்கு முன்னே கூறினபடி, தேவன் தமது பிரமாணங்களுக்குப் புறம்பே ஒன்றையும் செய்யமாட்டார். இந்த மலையில் உங்களுக்கு மேலே தண்ணீர் பீச்சும் 'ஆர்டீஷியன்' ஊற்று ஒன்று இருந்து, பக்கத்திலுள்ள மலையில் பயிர்கள் காய்ந்து கொண்டிருந்தால், நீங்கள் இந்த மலையின் மேல் நின்றுகொண்டு, ''ஓ, தண்ணீரே, இங்கு வந்து என் பயிர்களை அடைந்து, அதற்கு தண்ணீர் பாய்ச்சு'' என்று எவ்வளவாக கூச்சலிட்டாலும், அது ஒருபோதும் நடக்காது. ஆனால் நீங்கள் புவியீர்ப்பு விதியை அனுசரித்து பணிபுரிந்தால், உங்கள் பயிருக்கு தண்ணீர் பாய்ச்சலாம். 25.வியாதிப்பட்ட ஒரு மனிதன் இங்கு படுத்து கிடந்தால், அல்லது ஒரு பாவி இங்கிருந்தால், அல்லது நேராக வேண்டுமென்று விரும்பும் ஒரு மனிதன் இங்கிருந்தால் (அவனால் குடியையோ, புகை பிடிப்பதையோ, இச்சையையோ விட முடியவில்லை என்னும் நிலை), நீங்கள் தேவனுடைய பிரமாணங்களை பின்பற்றி கிரியை செய்தால், பரிசுத்த ஆவி இங்கு வரும்படி அழைத்தால், அவன் இனி ஒருபோதும் தனக்கு சொந்தமல்ல. அவன் அவைகளை விட்டுவிடுவான், ஏனெனில் பரிசுத்த ஆவி அவனை ஆட்கொள்கிறார். ஆனால் நீங்கள் தேவனுடைய பிரமாணங்களை தேவனுடைய விதிகளை பின்பற்றி கிரியை செய்ய வேண்டும். பழைய ஏற்பாட்டின் காலத்தில் இந்த குழந்தை பிறந்தவுடன், அதன் நடத்தை எவ்வாறுள்ளது என்று அவர்கள் கவனித்து வந்தனர். பிறகு, பெரிய வியாபாரியான அவனுடைய தந்தை; அவனுக்கு நாற்பதிலிருந்து ஐம்பது வயதுக்குள் ஒருக்கால் இருக்கலாம். இந்த குழந்தைக்கு பாடம் சொல்லி கொடுக்க அவனுக்கு நேரமில்லை, எனவே அவன். அந்நாட்களில் இப்பொழுது உள்ளது போல் பொதுப் பள்ளிக்கூடங்கள் கிடையாது. எனவே அவர்களுக்கு 'உபாத்தி' என்றழைக்கப்படுபவர் இருந்தார். இந்த உபாத்திதான் அவனால் கண்டு பிடிக்க முடிந்தவர்களில் சிறந்தவர். அவர் உண்மையாக இருந்து தந்தையிடம் மகனைப் பற்றிய உண்மையைக் கூறுவார். 26.பிறகு, இந்த பையன் குறிப்பிட்ட வயதை அடைந்த போது (அவனுக்கு வயது வந்தபோது), அந்த பையன் ஒன்றுக்கும் உதவாதவனாக, தன் தந்தையின் வியாபாரத்தை கவனிக்காதவனாய், பெண்களுடன் திரிந்து, குடித்து, சூதாடி, குதிரைப் பந்தயத்துக்கு சென்றால், அந்தப் பையன் குமாரனாக எப்பொழுதும் இருந்தாலும், தன் தந்தையின் சொத்துக்களுக்கு சுதந்தரவாளியாக நியமிக்கப்படமாட்டான். ஆனால் அவன் நல்லவனாயிருந்து, தன் தந்தையின் வியாபாரத்தை கவனித்து, நல்ல பையன் என்று தன்னை நிரூபித்தால், அவர்கள் ஒரு வைபவம் வைப்பது வழக்கம். அவர்கள் அந்த பையனுக்கு வெள்ளை அங்கி உடுத்து, அவனை தெருவில் கொண்டு போவார்கள். அவர்கள் ஒரு உயர்ந்த மேடையை கட்டி, எல்லோரும் காணத் தக்கதாக அவனை அங்கே உட்கார வைத்தனர். அவர்கள் விருந்தையும் யூபிலியையும் வைத்தனர். தந்தை புத்திரசுவீகார வைபவத்தை நடத்தினார். அவன் தன் குமாரனுக்கு தன் வியாபாரத்தைக் கொடுக்கிறான். அப்பொழுது குமாரன் தந்தையுடன் சமஉரிமை பெறுகிறான். இன்றைய பாணியில் கூறினால், காசோலையில் தந்தையின் கையொப்பத்தைப் போல் குமாரனின் கையொப்பமும் முக்கியத்துவம் பெறுகிறது. 27.தேவன் என்ன செய்தாரென்று கவனியுங்கள். அவருடைய குமாரன் பிறந்தபிறகு, அவரை முப்பது ஆண்டு காலம் சோதித்து வந்தார். பிறகு அதற்கு அடுத்த மூன்று ஆண்டு காலமாக அவரை கடினமாக சோதனைக்குட்படுத்தினார். அந்த கடினமான சோதனை முடிந்த பின்பு, குமாரன் பிதாவுக்கடுத்தவைகளில் (Father's business) இருப்பதைக் கண்டபோது (மறுரூபமலை, லூக்கா சுவிசேஷம்), அவர் பேதுரு, யாக்கோபு, யோவானை (மூன்று சாட்சிகள்) கூட்டிக் கொண்டு மலையின் மேலேறிச் சென்றார். அங்கு தேவன் புத்திர சுவீகார வைபவத்தை நடத்தினார். அவர்... அவர்கள் பார்த்தபோது இயேசுவைக் கண்டனர். அவருடைய வஸ்திரம் உறைந்த மழையைப் போல் வெண்மையாக மாறினது. ஒரு மேகம் அவரை நிழலிட்டது. மேகத்திலிருந்து ஒரு சத்தமுண்டாகி, ''இவர் என்னுடைய நேசக் குமாரன், இவருக்குச் செவி கொடுங்கள்! நான் அமர்ந்திருந்து, இனிமேல் ஒன்றும் கூறப் போவதில்லை. அவர் கூறுவதே பிரமாணமும் சத்தியமுமாயிருக்கும்'' என்றார். 28.சபையானது இந்தப் பள்ளிக்கூடங்களின் வழியாய் வந்துள்ளது. அது நீண்ட காலத்துக்கு முன்பு விவாகம் செய்து, ஒரு ஸ்தாபனமாகிவிட்டது. நீங்கள் கவனிப்பீர்களானால், பிறப்பு வேறெதோ ஒன்றைத் தோன்றச் செய்தது. இப்பொழுது பெந்தெகொஸ்தே சபை புதிய பிறப்புடன் சோதிக்கப்படும் நிலைக்கு வந்துள்ளது. இப்பொழுது அது வந்துள்ள நிலை... தேவன் சபையுடன் ஒரு ஸ்தாபனமாக தொடர்பு கொள்ளமாட்டார். அவர் சபையுடன் ஒரு கூட்டம் ஜனமாக தொடர்பு கொள்ளமாட்டார். அவர் சபையுடன் தனிப்பட்ட நபராக தொடர்பு கொள்ளுகிறார் சபையிலுள்ள ஒவ்வொரு நபருடனும். இப்பொழுது அது அடைந்துள்ள நிலை... அது இரகசியமல்ல; நாமெல்லாரும் அதைக் காண்கிறோம். ஒரு மனிதன் தன்னை நிருபித்து, தேவன் அவனில் அன்பு கூரும்போது, அவர் அவனை தமக்கென எங்கோ கொண்டு செல்கிறார். அங்கே தேவ தூதர்களின் முன்னிலையில், அவனுக்கு ஏதோ ஒன்றை செய்கிறார். தேவனுடைய சமூகத்தில் அவர் அவனையுயர்த்தி, அவனை நிரப்பி, அவனுக்கு வரங்களை அருளி, அவனை வெளியே அனுப்புகிறார். அந்த காலத்தில் தான் நாம் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். 29.லூத்தரன்களை இரட்சித்த அதே பரிசுத்த ஆவி, மெதோடிஸ்டுகளை பரிசுத்தமாக்கின அதே பரிசுத்த ஆவி, பெந்தெகொஸ்தேயினரை அபிஷேகித்த அதே பரிசுத்த ஆவி, இப்பொழுது கர்த்தராகிய இயேசுவின் வருகைக்கென ஒழுங்குபடுத்திக் கொண்டிருக்கிறது. அது மிகவும் வல்லமையுள்ளதாகி, அந்த சரீரம் இந்த சபை குழுக்களுக்குள் வந்து, மற்றவர்களை கல்லறையிலிருந்து வெளியே கொண்டுவரும். உயிர்த்தெழுதல் உண்டாகும்! அதற்காகத்தான் பரிசுத்த ஆவி உள்ளது. பரிசுத்த ஆவி என்பது என்ன?நம்மையல்லாமல் அவர்கள் பூரணராக முடியாது. அவர்கள் ஒரு நாள் அதன் கீழ் வாழ்ந்தனர்; நாமோ வேறொரு நாளில் வாழ்ந்து கொண்டிருக்கிறோம். ''வெள்ளம் போல் சத்துரு வரும் போது கர்த்தருடைய ஆவியானவர் அவனுக்கு விரோதமாய்க் கொடியேற்றுவார்'' (ஏசா. 59:19) பாருங்கள்? 30.நாம் இப்பொழுது வாழ்ந்து கொண்டிருக்கும் நாள்... முன் காலத்தில் இருந்தவர்களுக்கு, இன்றுள்ளவர்களின் அறிவில் பாதி கூட இல்லை. அவர்களால் அணுகுண்டு அல்லது மோட்டார் வாகனத்தை உண்டாக்க முடியவில்லை. இன்றைக்கு நமக்கு உள்ளது போல், அவர்களுக்கு விஞ்ஞானமோ அல்லது மர்மமான காரியங்களின் கண்டுபிடிப்போ இருக்கவில்லை. மனிதன் சில துகள்கள் சேர்ந்ததனால் உண்டானான் என்று, சில இரசாயன ஆய்வினால் அதை நிரூபிக்க முயன்று, ஜனங்களை நாத்தீகர்களாகச் செய்வது... ஆனால் இப்பொழுது, நமக்கு அவசியமிருந்தால், கர்த்தருடைய ஆவியானவர் கொடியேற்றுவார். அது என்ன? அவர் தமது ஆவியை ஊற்றிக் கொண்டிருக்கிறார். கல்லறையில் இளைப்பாறிக் கொண்டிருக்கிறவர்கள், அல்லது வேதவாக்கியம் கூறுகிறபடி பலிபீடத்தின் கீழ் இருக்கிறவர்கள், ''எதுவரைக்கும் ஆண்டவரே? எதுவரைக்கும்? இன்னும் எவ்வளவு காலம், ஆண்டவரே?'' என்று மகா சத்தமிட்டுக் கொண்டிருக்கிறவர்கள் (வெளி. 6:10); தேவன் எனக்காகவும் உங்களுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறார். சபையானது எனக்காகவும் உங்களுக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறது. புத்திர சுவீகார நேரம், அப்பொழுது தேவன் நமக்குள் தமது பரிபூரணத்தை, தமது வல்லமையை, தமது உயிர்த்தெழுதலை ஊற்றி, சபையும் கிறிஸ்துவும் ஒருவருக்கொருவர் மிக அருகாமையில் வந்து, கிறிஸ்து நம்மிடையே காணப்படுபவராகி, மரித்தோரை உயிரோடெழுப்பி, நாமும் எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வோம். பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டவர் மாத்திரமே எடுத்துக் கொள்ளப்படுதலில் செல்வார்கள் என்று சிறிது கழிந்து உங்களுக்குக் காண்பிக்கப் போகிறோம். ''மரணமடைந்த மற்றவர்கள் அந்த ஆயிரம் வருஷம் முடியுமளவும் உயிரடையவில்லை'' (வெளி 20:5). அது உண்மை. பரிசுத்த ஆவியினால் நிறையப்பட்டவர்கள் மாத்திரமே எடுத்துக் கொள்ளப்படுதலில் சென்றனர். 31.தேவன் பரிசுத்த ஆவியை அருளினார். நான் மற்றொரு வேதவாக்கியத்தை இங்கு குறித்து வைத்துள்ளேன். யோவான்:14:12. இந்த கூடாரத்திலுள்ள அனைவரும் நன்கு அறிந்துள்ள வேதவாக்கியம் அது. “மெய்யாகவே, மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன், என்னை விசுவாசிக்கிறவன்...” இப்பொழுது ''விசுவாசிக்கிறவன்'' என்னும் வார்த்தை உங்களைத் திருப்தியடையச் செய்யவேண்டாம். பெயர்க் கிறிஸ்தவ சபையில், அவர்கள், “ஆம், நான் விசுவாசிக்கிறேன். நிச்சயமாக இயேசு கிறிஸ்து தேவனுடைய குமாரன் என்று விசுவாசிக்கிறேன்'' என்கின்றனர். பிசாசும் கூட அதையே விசுவாசிக்கிறான். உண்மையாக. அவன் அப்படி செய்வதாக வேதம் கூறுகிறது (யாக். 2:19). ஆனால் வேதவாக்கியம் யோவானில், பரிசுத்த ஆவியினாலேயன்றி ஒருவனும் இயேசுவை கிறிஸ்து என்று சொல்லக் கூடாது என்று கூறுகிறது. நீங்கள் உண்மையாக, வேத வாக்கியத்தின்படி... (நான் அதை படித்து முடிக்கும் முன்பு ஒரு நிமிடம் நிறுத்திக் கொள்கிறேன்). 32.நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாமல் இரட்சிக்கப்படுவதில்லை. அது உண்மை. நீங்கள் அதற்கேற்ப விசுவாசிக்கிறீர்கள். பரிசுத்த ஆவி உங்களிடம் பேசி, நீங்கள் அவரை பகிரங்கமாக அறிக்கையிட்டுவிட்டீர்கள். பிசாசும் அதையே செய்கிறான். “அவர் தேவனுடைய குமாரன் என்று நான் விசுவாசிக்கிறேன்'' பிசாசும் அதையே செய்கிறான். ஆனால் நீங்கள் அவரை நோக்கி நடந்து செல்கிறீர்கள். பேதுரு அழைக்கப்பட்டு இயேசு கிறிஸ்துவை விசுவாசிப்பதன் மூலம் நீதிமானாக்கப்பட்ட பிறகு... யோவான்: 17:17-ல் இயேசு வசனத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கினார், அவருடைய வசனமே (வார்த்தையே) சத்தியம். இயேசுவே வார்த்தை. ”ஆதியிலே வார்த்தை இருந்தது, அந்த வார்த்தை தேவனிடத்திலிருந்தது, அந்த வார்த்தை தேவனாயிருந்தது. அந்த வார்த்தை மாம்சமாகி... நமக்குள்ளே வாசம் பண்ணினார்'' என்று யோவான் முதலாம் அதிகாரம் உரைக்கிறது. அவர் வார்த்தையாயிருந்தார், எனவே அவர் அவர்களைப் பரிசுத்தமாக்கினார். அவர், ''பிதாவே (அவருக்குள் இருந்த ஆவியுடன் அவர் பேசினார்), அவர்களை வசனத்தினாலே நான் பரிசுத்தமாக்குகிறேன்'' என்றார். அவரே அவர்கள் மேல் தமது கைகளை வைத்தார். ''உமது வசனமே சத்தியம். அவர் பேசி ஒரு ஸ்திரீயின் கர்ப்பத்தில் அவரை சிருஷ்டித்தார். ஓ, அவர் தேவனுடைய வார்த்தையாய் இருந்து தம்மை வெளிப்படுத்துவதை தவிர, வெறெந்த விதமாகவும் அவர் இருக்க முடியாது. அவர்களை நான் பரிசுத்தமாக்குகிறேன்.'' 33.அசுத்த ஆவிகளைத் துரத்த அவர் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்தார். அவர்கள் புறப்பட்டுச் சென்றனர். அவர் அவர்களுடைய பெயர்களை ஆட்டுக் குட்டியானவரின் ஜீவ புஸ்தகத்தில் எழுதினார். அவர் அவர்களை அனுப்பி (மத்தேயு. 10), அசுத்த ஆவிகளின் மேல் அவர்களுக்கு அதிகாரம் கொடுத்து, அசுத்த ஆவிகளைத் துரத்தவும், அற்புதங்களைச் செய்யவும் கட்டளையிட்டார். அவர்கள் சந்தோஷத்தோடு திரும்ப வந்து, ''பிசாசுகளும் எங்களுக்கு கீழ்ப்படிகின்றன'' என்றனர். அவரோ, “பிசாசுகள் உங்களுக்கு கீழ்ப்படிகிறதற்காக சந்தோஷப்படாமல், உங்கள் பெயர்கள் புத்தகத்தில் எழுதியிருக்கிறதற்காக சந்தோஷப்படுங்கள்'' என்றார். யூதாஸும் அவர்களுடன் கூட இருந்தான். அவன் நீதிமானாக்கப்படுதலின் வழியாக பரிசுத்தமாக்கப்படுதலை அடைந்து, அதற்கு எவ்வளவு அருகாமையில் வரமுடிந்தது என்று பாருங்கள். அவன் தன் உண்மையான தன்மையை எங்கு காண்பித்தான்? அவன் தன் தன்மையை எங்கு காண்பித்தான்? பெந்தெகொஸ்தேக்கு முன்பு அவன் தன் தன்மையை காண்பித்தான். 34.கவனியுங்கள், அந்த ஆவி மிகவும் பயபக்தியாயும், பக்திமான் போல் நடிக்கிறதாகவும் இருக்கும். ஆனால் அது பரிசுத்த ஆவிக்கு வரும் போது, அவர்கள் அங்கேயே தங்களைப் பிரித்துக் கொண்டுவிடுவார்கள். அதுதான் அந்த ஆவி. அந்த அந்திக் கிறிஸ்து நகர்ந்து முன்னால் செல்வதை உங்களால் காண முடியவில்லையா? கடைசி நாட்களில் இவ்விரு ஆவிகளும் ஒன்றுக்கொன்று மிக அருகாமையில் இருந்து, கூடுமானால் தெரிந்து கொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கும் என்று இயேசு கூறினார் (மத். 24:24). ஆனால் தெரிந்து கொள்ளப்பட்டவர்கள் மாத்திரமே அதை காண்பார்கள் என்பதை ஞாபகம் கொள்ளுங்கள். தேவன் தெரிந்து கொள்ளுதலின் மூலமே அழைக்கிறார்! அவர்களில் ஒருவராக நீங்கள் இருப்பதற்கு, நீங்கள் மகிழ்ச்சியாயிருக்கிறீர்கள் அல்லவா? இன்றிரவு இங்குள்ளவர்களாகிய நீங்கள், உங்கள் இருதயங்களில் ஏதோ ஒன்று, ''எனக்கு பரிசுத்த ஆவி வேண்டும்; கர்த்தாவே, உம்மை என் இருதயத்தில் பெற விரும்புகிறேன்'' என்று சொல்லிக் கொண்டிருக்கிறதை அறிவீர்கள். ஏனெனில் தேவன் உங்கள் பெயர்களை உலகத் தோற்றத்துக்கு முன்பே ஆட்டுக் குட்டியானவருடைய ஜீவபுஸ்தகத்தில் எழுதிவிட்டார். அவர் அப்படி கூறியுள்ளார், ''என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டால் அவன் என்னிடத்தில் வரமாட்டான். என்னிடத்தில் வருகிற யாவருக்கும் நான் நித்திய ஜீவனைத் தருவேன்'' என்று கூறினார். நித்திய ஜீவன் என்றால் என்ன? பரிசுத்த ஆவி, நித்திய ஜீவன். அந்த வார்த்தையை கிரேக்க வேதாகமத்தில் நீங்கள் கண்டால், அது 'சோ' (Zoe) என்று எழுதப்பட்டுள்ளது. 'சோ' என்பது பரிசுத்த ஆவி: ''பிதாவானவர் எனக்குக் கொடுக்கிற யாவும் என்னிடத்தில் வரும். என்னிடத்தில் வருகிற யாவருக்கும்; அவனுக்கு நான் பரிசுத்த ஆவியைத் தருவேன். கடைசி நாளில் நான் அவனை எழுப்புவேன். நான் அதை செய்வேன்''. அவர் “ஒருக்கால் அதை நான் செய்யலாம்'' என்று கூறவில்லை. ''நான் நிச்சயம் செய்வேன்'', ''என்னிடத்தில் வருகிற யாவருக்கும்... நான் நித்திய ஜீவனைத் தருவேன். அவன் உயிரோடெழ வேண்டும். ஏனெனில் அவனுக்கு நித்திய ஜீவன் உண்டு. அவன் உயிரொடெழுந்தே ஆக வேண்டும்!'' தேவனால் எப்படி மரிக்க முடியாதோ, அப்படியே அவனும் மரிக்க முடியாது. 35.ஓ, இந்த தேசத்தின் பல்வேறு பாகங்களிலிருந்தும், இந்த சிறு பட்டினத்திலிருந்தும் வந்துள்ள என் அன்பார்ந்த நண்பர்களே, பரிசுத்த ஆவியைப் பெற்றுக்கொள்ள வேண்டியதன் முக்கியத்துவத்தை இந்த மானிட குரலினால் உங்கள் இருதயத்தில் என்னால் பதியச் செய்யக் கூடுமானால், நீங்கள் என்ன செய்ய வேண்டுமென்று உங்கள் வாழ்க்கையில் நீங்கள் பெறும் மிகவும் அற்புதமான வெளிப்பாடாக அது அமையும். நீங்கள் அதை நிச்சயம் செய்யவேண்டும். நீங்கள் குணப்படாததை (Converted) குறித்து உங்களுக்கு தெளிவுபடுத்தி காண்பிக்க விரும்புகிறேன். பேதுரு இரட்சிக்கப்பட்டிருந்தான். அவன் கர்த்தரின் மேல் விசுவாசம் கொண்டிருந்தான். அவன் யாரென்று இயேசு பகுத்தறிந்து கூறி, அவன் அவரைப் பின்பற்றும்படி செய்தார். அவர் அவனுக்கு அசுத்த ஆவிகளின் மேல் அதிகாரம் கொடுத்து, அவனை பரிசுத்தமாக்கினார். ஆனால் இவை எல்லாவற்றிற்கும் பிறகு... அவன் அந்த குழுவுக்கு முக்கிய தலைவனாக இருந்தான் கத்தோலிக்கர் அழைக்க விரும்புகிறபடி, அவன் சபையின் பேராயராகவோ, போப்பாண்டவராகவோ, சபையின் தலைவனாகத் திகழ்ந்தான். இருப்பினும், அவன் அவரை மறுதலித்த அந்த இரவில், ''பேதுருவே, நீ என்னிடத்தில் அன்பாயிருக்கிறாயா?'' என்று கேட்டார் (யோவான்:21:15). அவன், ''ஆம் ஆண்டவரே, உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர்'' என்றான். அவர், ''என் ஆட்டுக்குட்டிகளை மேய்ப்பாயாக'' என்றார். இப்படியாக மூன்று தரம் கூறினார். பேதுரு, “உம்மை நேசிக்கிறேன் என்பதை நீர் அறிவீர். மரண பரியந்தம் உம்மோடு கூட செல்ல நான் ஆயத்தமாயிருக்கிறேன்'' என்றான். அவர், ''இன்று சேவல் கூவுவதற்கு முன்னே, என்னை நீ மூன்று தரம் மறுதலிப்பாய்'' என்றார். அவர், ''ஆனாலும் பேதுருவே, உனக்காக நான் வேண்டிக் கொண்டேன்'' என்றார். அது மாத்திரமல்ல, “நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து'' என்றார் (லூக்கா:22:32). நீ குணப்பட்ட பின்பு! அவன் கூச்சலிட்டான், ஒருக்கால் அவன் ஆவியில் நடனமாடினான்; இப்படிப்பட்ட எல்லாவற்றையும் செய்தான். ஆனால் அவன் இன்னும் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவில்லை. ”நீ குணப்பட்ட பின்பு உன் சகோதரரை ஸ்திரப்படுத்து“. அது உண்மை. அவருடைய திட்டத்தை நிறைவேற்று. 36.இப்பொழுது நான் யோவான்: 14:12-ஐ படித்து முடிக்கட்டும். யோவான் 14-ம் அதிகாரம் 12-ம் வசனத்தில் இயேசு, ''மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்... என்னை விசுவாசிக்கிறவன். (நீங்கள் விசுவாசிக்க முடியாது). ''நீங்கள் அவருக்கு ஏற்ற விசுவாசத்தை பெற்றிருக்கலாம். (believe unto Him). எத்தனை பேர் அதை புரிந்து கொண்டீர்கள்? 'ஆமென்' என்று சொல்லுங்கள் (சபையோர் 'ஆமென்' என்கின்றனர் - ஆசி). உங்களுக்கு நினைவிருக்கலாம், அப்போஸ்தலர் 19-ல் (இதை இங்கு நிறுத்த எனக்கு பிரியமில்லை, ஆயினும் என் மனதில் தோன்றுகிறதை நான் கூறவேண்டும்); அப்போஸ்தலர் 19-ம் அதிகாரத்தில், வழக்கறிஞராயிருந்து இரட்சிக்கப்பட்ட பாப்டிஸ்டு போதகர்... அவன் பிரசங்கம் செய்து, ஜனங்களை இரட்சிப்புக்குள் நடத்திக் கொண்டிருந்தான். அங்கு மிகுந்த சந்தோஷம் உண்டாயிருந்தது. அவர்கள் களிகூர்ந்து, கூச்சலிட்டு கூட்டம் நடத்திக் கொண்டிருந்தனர் (அப். 18). ஆக்கிலாவும், பிரிஸ்கில்லாளும்... (நேற்று மாலை அதை நாம் குறிப்பிட்டோம்). அவர்கள் அவனைக் காணச் சென்றிருந்தனர். அவன் பெரியவன் என்றும், வேத மாணாக்கன் என்றும் அவர்கள் அறிந்திருந்தனர். அவன் இயேசு தேவனுடைய குமாரன் என்று வேதத்தைக் கொண்டு நிரூபித்து வந்தான். அவன் யோவான் கொடுத்த ஸ்நானத்தை மாத்திரம் அறிந்திருந்தான்; அவன் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைக் குறித்து அறிந்திருக்கவில்லை. எனவே அவன் கூறினான். கணவனும் மனைவியுமாகிய ஆக்கில்லாவும், பிரிஸ்கில்லாளும்; அவர்கள் கூடாரம் செய்பவர்கள் (பவுலும் கூடாரம் செய்பவன் தான்). அவர்கள் பவுலின் போதகத்தின் கீழ் பரிசுத்த ஆவியைப் பெற்றிருந்தனர். அவர்கள், ''ஒரு சகோதரன் இங்கு வருகிறார். அவர் இதைக் குறித்து சிறிது நம்மிடம் பேசட்டும்“ என்றனர். பவுல் அங்கு வந்து, அவன் பிரசங்கிப்பதைக் கேட்டபோது, அவன் ஒரு பெரிய மனிதன் என்று அறிந்துகொண்டு, ''நீங்கள் விசுவாசிகளான பிறகு பரிசுத்த ஆவியைப் பெற்றீர்களா?'' என்று கேட்டான். அவர்கள், “பரிசுத்த ஆவி உண்டென்பதை நாங்கள் கேள்விப்படவே இல்லை'' என்றார்கள். அவன், ''அப்படியானால் நீங்கள் எந்த ஞானஸ்நானம் பெற்றீர்கள்?'' என்றான் (கிரேக்க மொழி, 'எப்படி ஞானஸ்நானம் பெற்றீர்கள்'? என்று கூறுகிறது). அவர்கள், ''நாங்கள் ஏற்கனவே யோவான் ஸ்நானனால் ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்'' என்றார்கள். பவுல் என்ன கூறினானென்று கவனியுங்கள்: ''யோவான் மனந்திரும்புதலுக்கு ஏற்ற ஞானஸ்நானம் கொடுத்தான் (baptism unto repentance); அவன் பாவ மன்னிப்புக்கென்று ஞானஸ்நானம் கொடுக்கவில்லை'' என்றான்... நீங்கள் கிறிஸ்துவை உங்கள் சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ளும்போது அதைத்தான் நீங்கள் விசுவாசிக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியின் அபிஷேகத்துக்கு ஏற்றதாக விசுவாசிக்கிறீர்கள். என் அருமை பாப்டிஸ்டு சகோதரர்களே, அதுவல்ல பரிசுத்த ஆவியின் அபிஷேகம். அது தவறு. 37.அன்றொரு நாள் ஒரு சகோதரர் என்னிடம் (சில நாட்களுக்கு முன்பு, சில மாதங்களுக்கு முன்பு), ''சகோ. பிரான்ஹாமே, ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது'' என்றார். நான், ''உண்மையாக'' என்றேன். அவர், “ஒரு மனிதன் விசுவாசிப்பதைக் காட்டிலும் வேறென்ன செய்யமுடியும்?'' என்றார். நான், ''அவ்வளவு தான் ஒரு மனிதன் செய்ய முடியும். தேவனை விசுவாசிப்பதைத்தான் ஒரு மனிதன் இன்றைக்கு செய்யமுடியும். ஆனால் தேவன் ஆபிரகாமுக்கு, அவன் அவர் பேரில் கொண்டிருந்த விசுவாசத்தை அவர் ஏற்றுக்கொண்டார் என்பதற்கு அடையாளமாக, விருத்தசேதனம் என்ற முத்திரையைக் கொடுத்தார்'' என்றேன். இன்றைக்கு அவரை உங்கள் சொந்த இரட்சகராக நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போது, அவரை நோக்கி உங்கள் விசுவாசம் உள்ளது. ஆனால் தேவன் உங்களுக்கு பரிசுத்த ஆவி என்னும் முத்திரையை அளிக்கும் போது, அவர் நீங்கள் அடைய வேண்டிய நித்தியத்துக்கு உங்களை முத்தரித்துவிட்டார். பாப்டிஸ்டுகளாகிய நீங்கள் இதை ஏற்றுக்கொள்ளுங்கள். அப்பொழுது நான் நித்திய பாதுகாப்பு என்பதில் உங்களுடன் இணங்குவேன். ஆம், ஐயா! ஏனெனில், “நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்”. நீங்கள் அதை நோக்கி விசுவாசிப்பதினால் முத்தரிக்கப்படுவதில்லை. நீங்கள் பரிசுத்த ஆவியினால் முத்திரை போடப்படுகிறீர்கள். எபே. 4:30, ''நீங்கள் மீட்கப்படும் நாளுக்கென்று முத்திரையாகப் பெற்ற தேவனுடைய பரிசுத்த ஆவியைத் துக்கப்படுத்தாதிருங்கள்“. நீங்கள் தேவனிடத்தில் தயை பெறும்போது, அது உங்களை முத்தரிக்கிறது. அவர் உங்களை பரிசுத்த ஆவியினால் முத்தரிக்கிறார். அது அப்படித்தான். ஏனெனில் வேதம், ''பரிசுத்த ஆவியினாலேயன்றி ஒருவனும் இயேசுவை கிறிஸ்து என்று அழைக்க முடியாது'' என்று கூறுகிறது. 38.நீங்கள், ''போதகர் அப்படி சொன்னதினால், நான் விசுவாசிக்கிறேன்“ என்கிறீர்கள். ஆனால் அது உங்கள் கணக்கில் வராது. ''வார்த்தை அப்படி கூறுவதனால் நான் விசுவாசிக்கிறேன்'' அது உண்மைதான், ஆனால் அது உங்களுக்கல்ல, அது உங்கள் கணக்கில் வருவதல்ல. இயேசுவே கிறிஸ்து என்று நீங்கள் சொல்லக்கூடிய ஒரே வழி, பரிசுத்த ஆவி உங்களுக்குள் வந்து, அவர் தேவனுடைய குமாரன் என்று சாட்சி பகருவதன் மூலமே. பரிசுத்த ஆவி சாட்சியிடுகிறதன் மூலமே நீங்கள் உயிர்த்தெழுதலை அறிந்துகொள்ள முடியும். ''பரிசுத்த ஆவி வரும்போது, அவர் என்னைக் குறித்து சாட்சி கொடுத்து, வரப் போகிற காரியங்களை உங்களுக்குக் காண்பித்து, நான் உங்களுக்குச் சொன்ன எல்லாவற்றையும் உங்களுக்கு நினைப்பூட்டுவார்”. அதை நீங்கள் வேதாகம பள்ளிகளில் அறிந்துகொள்ள மாட்டீர்கள். பாருங்கள்? அவர் இந்த காரியங்களை உங்களுக்கு நினைப்பூட்டுவார். 39.இந்த வேத வாக்கியத்தை இப்பொழுது இன்னும் சற்று தொடர்ந்து படிக்க விரும்புகிறோம். யோவான்: 14:12 மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப் பார்க்கிலும் பெரிய... (நீங்கள் காண விரும்பினால், அதன் சரியான மொழி பெயர்ப்பு, 'இவைகளைப் பார்க்கிலும் அதிக')... கிரியைகளையும் செய்வான். அவர் பிதாவினிடத்திற்குப் போனால், பரிசுத்த ஆவி வருவார். அது சரியா? மற்றொரு வேதவாக்கியம், ''நான் போகாதிருந்தால், தேற்றரவாளன் உங்களிடத்தில் வரார். நான் போவேனேயாகில், நான் மறுபடியும் உங்களிடத்திற்கு வந்து, உங்களுடனே வாசம் பண்ணி, உங்களுக்குள்ளே இருப்பேன்'' என்கிறது. பாருங்கள்? அது தேவன் உங்களுடனே இருத்தல்... முதலாவதாக உங்கள் மேல், உங்களோடு கிறிஸ்துவாக, உங்களுக்குள் பரிசுத்த ஆவியாக. தேவன் உங்களுக்குள் இருத்தல். 40.''நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்“. வேறு கிரியைகள் அல்ல. தேவன் உங்களுக்குள் பரிசுத்த ஆவியைக் கொண்டு வந்து, அவர் கிறிஸ்துவுக்குள் செய்து வந்த அதே கிரியைகளை தொடர்ந்து செய்ய விரும்புகிறார். லூத்தரின் காலத்தில் அது அவ்வளவு அவசியமாயிருக்கவில்லை; அது தேவனுடைய சபை. வெஸ்லியின் காலத்தில் அது சிறிது அதிக அவசியமாயிருந்தது, ஏனெனில் உலகமானது நாளடைவில் பலவீனமடைந்தும், அறிவு பெருகியும், அதிக பொல்லாங்கானதாயும் ஆகிவிடும் என்று வேதம் கூறுகிறது. உலகத்தில் நாளுக்கு நாள் பொல்லாப்பு பெருகிக் கொண்டே வருகிறது. அதை நாமறிவோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பு கொடுரமான மனிதன் இருந்ததாக நீங்கள் நினைத்துக்கூட பார்க்க முடியாது. ஆனால் இன்றைக்கோ மனிதன் செய்யும் கிரியைகள்! ''நாளுக்கு நாள் தீமை பெருகிக் கொண்டே வருகிறது. பொல்லாப்பு செய்கிறவர்கள் அதிகம் பொல்லாப்பு செய்வார்கள்'' என்று வேதம் கூறுகிறது. 41.எனவே பரிசுத்த ஆவி நகர்ந்து கொண்டே செல்கிறது. லூத்தரிடம் அது சிறு மூச்சாகவும், வெஸ்லியினிடம் அது சிறிது காற்றாகவும், பெந்தெகொஸ்தேயினரிடம் அது இன்னும் பலத்த காற்றாகவும் இருந்தது. இப்பொழுது மூச்சும் ஆவியும் ஒன்றாகிவிட்டது. அது ஒன்றாக இணைந்து, முன் காலத்தில் அவர் செய்தது போல் அது அதே வல்லமையுள்ள பலத்த காற்றாக மாறி, முன்பு செய்த அதே கிரியைகளை இப்பொழுது செய்து வருகிறது. இயேசு என்ன கூறினார் என்பதை கவனியுங்கள். ''பிதாவானவர் செய்யக் குமாரன் காண்கிறதெதுவோ, அதையேயன்றி, வேறொன்றையும் தாமாய்ச் செய்யமாட்டார். பிதா செய்கிறவைகளையெல்லாம் குமாரனுக்குக் காண்பிக்கிறார். என்னில் வாசமாயிருக்கிற பிதாவே கிரியைகளைச் செய்கிறார்“ என்றார். பாருங்கள்? 42.இப்பொழுது, கவனியுங்கள். இங்கு வேறொரு காரியத்தை கூற விரும்புகிறேன். இயேசு, “பிதா என்னை அனுப்பினது போல... (நன்றாக கவனியுங்கள்)... பிதா என்னை அனுப்பினது போல. நானும் உங்களை அனுப்புகிறேன்'' என்றார் (யோவான்:20:21). பிதா அவரை எப்படி அனுப்பினார்? அவரை அனுப்பின பிதா பரலோகத்திலிருந்து இறங்கி வந்து அவருக்குள் வாசம் செய்தார். அவர் புறப்பட்டு சென்றார். அவர், ''என் பிதாவுக்குப் பிரியமானவைகளையே நான் எப்பொழுதும் செய்கிறேன்'' என்றார் (யோவான்:8:29). பாருங்கள்? பிதா அவருக்குக் காண்பித்ததையே அவர் செய்துகொண்டு வந்தார். ''என் பிதா எனக்கு முதலில் ஒன்றைக் காண்பிக்காமல் நான் எதையும் செய்யமாட்டேன்'' அவரை அனுப்பின பிதா அவருக்குள் இருந்தார். ''பிதா என்னை அனுப்பினது போல (பிதா என்னை எந்தவிதமாக அனுப்பினாரோ, அதே விதமாக), நானும் உங்களை அனுப்புகிறேன்.'' அது என்ன? தேவன் உங்களுக்குள் இருத்தல், எதை செய்து கொண்டிருப்பது? அதே கிரியைகளை. இயேசு, ”என்னை விசுவாசிக்கிறவன் (என்னைத் தனக்குள் கொண்டிருப்பவன், பரிசுத்த ஆவியாக)- என்னை விசுவாசித்து (என் உயிர்த்தெழுதலுக்கு ஏற்கனவே சாட்சியாயிருப்பவன்), நான் அவனுக்குள் வாசம் செய்வதை அறிந்திருப்பவன். என்னில் இருப்பவன்; நீங்கள் என்னிலும் என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால்...'' என்றார். (யோவான்: 15:7). 43.நீங்கள், ''நான் இயேசுவில் நிலைத்திருக்கிறேன், ஆனால் நான் நிச்சயமாக தெய்வீக சுகமளித்தலை நம்புவது கிடையாது'' என்கிறீர்கள். அவர் அங்கில்லை என்பதை அது காண்பிக்கிறது. ''நான் இயேசுவை விசுவாசிக்கிறேன்; ஆனால் இந்நாளில் பரிசுத்த ஆவி உள்ளதை நான் நம்புவது கிடையாது முன் காலத்தில் அவர்கள் பெற்றிருந்ததுபோல்'', அவர் அங்கில்லை என்பதை அது காண்பிக்கிறது. பரிசுத்த ஆவியானவர் தாம் கூறின ஒவ்வொரு வார்த்தைக்கும் சாட்சியாயிருப்பார். அவர் பொய்யர் அல்ல. அவர் யாருக்கும், எந்த ஸ்தாபனத்துக்கும் பயப்படுவதில்லை. அவர் யார் சார்பிலும் பேச வேண்டிய அவசியமில்லை. அவர் ஒன்றைக் கூறினால், அதில் நிலைத்திருக்கிறார். உயர்ந்தவர்கள், மாசுபட்டவர்கள், படித்தவர்கள், அல்லது பணக்காரர்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுத்தால், தேவன் இந்த கற்களினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டு பண்ண வல்லவராயிருக்கிறார். அவர் கொள்ளைக்காரர், மதுபானம் விற்பவர் போன்றவர்களை தெரிந்துகொண்டு, அவர்களிலிருந்து பிள்ளைகளை உண்டு பண்ணுவார். தேவனால் அப்படி செய்யமுடியும், அவர் அப்படி செய்து வருகிறார். தேவன் இந்த கற்களினாலே ஆபிரகாமுக்கு பிள்ளைகளை உண்டுபண்ண வல்லவராயிருக்கிறார். யாரோ ஒருவர் அதை செய்யப் போகிறார், ஏனெனில் அவர் தேவனாயிருக்கிறார். 44.''நீங்கள் என்னிலும், என் வார்த்தைகள் உங்களிலும் நிலைத்திருந்தால், நீங்கள் கேட்டுக் கொள்வதெதுவோ அது உங்களுக்குச் செய்யப்படும்'' (யோவான்.15:7). ஏனெனில் நீங்கள் அவருடைய வார்த்தையைக் கேட்கிறீர்கள். அவருடைய வார்த்தை ஜீவனாயுள்ளது. அதை உரையுங்கள். தேவன் அதை கூறியிருப்பாரானால், அவர் கூறியிருக்கிறார் என்னும் நிச்சயத்தை நீங்கள் உடையவர்களாயிருந்து, அந்த வார்த்தை உண்மையென்று பரிசுத்த ஆவி சாட்சி பகருமானால், சகோதரனே, அது நிறைவேறும். அதை உரையுங்கள். ''இந்த மலையைப் பார்த்து, தள்ளுண்டுபோ என்று சொல்லி, உங்கள் இருதயத்தில் சந்தேகப்படாமல், நீங்கள் சொன்னது நிறைவேறும் என்று விசுவாசித்தால், அது அப்படியே ஆகும்''. பேசுபவர் நீங்கள் அல்ல, உங்களுக்குள் வாசமாயிருக்கிற பிதாவே பேசுகிறவர். மலையினிடத்தில் பேசுகிறவர்கள் நீங்கள் அல்ல, உங்களுக்குள் வாசமாயிருக்கிற பிதாவே மலையினிடத்தில் பேசுகிறவர். எனவே அது தள்ளுண்டு போக வேண்டும். அவர், ''வானமும் பூமியும் ஒழிந்துபோம், என் ஆவியோ... அல்லது என் வார்த்தைகளோ ஒழிந்து போவதில்லை'' என்றார். நிச்சயமாக அது ஒழிந்து போகாது. ''பிதா...“ 45.இப்பொழுது, “நான் செய்கிற கிரியைகளை...'' தேவன் தமது கிரியைகளைத் தொடர்ந்து நடத்துவதற்காக தமது சபையில் இருக்கிறார். அதற்காகத்தான் அவர் பரிசுத்த ஆவியை அனுப்பினார். வேறு எந்த வழியிலும் அதை செய்ய முடியாது என்று அவர் அறிந்திருந்தார்... எனவே அவர் பரிசுத்த ஆவியை அனுப்ப வேண்டியதாயிற்று. பிதா குமாரனை அனுப்பினார்; குமாரனிலிருந்த எல்லாவற்றையும் உங்களுக்குள் வைத்திருக்கிறார். எனவே அவர் செய்த அதே கிரியைகளை; இயேசு செய்த அதே கிரியைகளை, நீங்களும் செய்வீர்கள்; சபையானது செய்யும். தேவனுடைய கிரியைகளைச் செய்வதற்கு உங்களுக்கு விருப்பம் உண்டு அல்லவா? ”நீங்கள் தேவனுடைய கிரியைகளைச் செய்ய வேண்டுமானால், என்னை விசுவாசியுங்கள்'' என்றார். அவரை நீங்கள் விசுவாசிப்பது எப்படி? நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறும் வரைக்கும் அப்படி செய்ய முடியாது. ஏனெனில் பரிசுத்த ஆவி இல்லாமல், எந்த மனிதனும் அவரை தேவனுடைய குமாரன் என்று அழைக்க முடியாது, மற்றவர்கள் அப்படி கூறுவதனால் நீங்களும் கூறுவீர்கள். “அவர் தேவனுடைய குமாரன் என்று வேதம் கூறுகிறது. நான் வேதத்தை விசுவாசிக்கிறேன்'' சரி. ''அவர் தேவனுடைய குமாரன் என்று வேதம் கூறுகிறது. நான் வேதத்தை விசுவாசிக்கிறேன். அவர் தேவனுடைய குமாரன் என்று போதகர் கூறுகின்றார். நான் போதகரை விசுவாசிக்கிறேன். அவர் தேவனுடைய குமாரன் என்று தாயார் கூறுகிறார்கள். நான் தாயாரை விசுவாசிக்கிறேன். அவர் தேவனுடைய குமாரன் என்று என் நண்பன் கூறுகின்றான். என் நண்பனை விசுவாசிக்கிறேன்.'' ஆனால் பரிசுத்த ஆவி எனக்குள் வந்து அதைக் குறித்து சாட்சி கொடுத்தால் மாத்திரமே, நான் அவரை தேவனுடைய குமாரன் என்று அழைக்கமுடியும். பரிசுத்த ஆவியினாலேயன்றி ஒருவனும் இயேசுவை “கிறிஸ்து” என்று அழைக்க முடியாது. தேவனுடைய ஆவியினால் பேசுகிற எந்த மனிதனும் இயேசுவை சபிக்கப்பட்டவர் என்றோ, அல்லது அந்த நாளில் அவர் ஒருவிதமாக இருந்தார். இந்த நாளில் வேறுவிதமாக இருக்கிறார் என்றோ கூறமுடியாது. அது அவரை பலவீனமுள்ளவராகவும் தவறு செய்பவராகவும் செய்துவிடுகிறது. இல்லை, ஐயா! அவர் நேற்றும், இன்றும், என்றும், மாறாதவராயிருக்கிறார். எந்த உண்மையான ஆவியும் அதற்கு சாட்சி பகரும். 46.அவர், ''நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்“ என்றார் (யோவான்: 14:12). அதே கிரியைகள்! ஓ, அவர்கள், ''சபை இன்று அதைப் பார்க்கிலும் பெரிய கிரியையை செய்கிறது.'' என்கின்றனர். எந்த வகையில்? அவர், ''நான் செய்கிற கிரியைகளை'' என்றார். அவர்கள், ''ஓ, எங்களுக்கு உலகம் முழுவதிலும் மிஷனரிமார்கள் உள்ளனர். அது அதைப் பார்க்கிலும் பெரிய கிரியை'' என்கின்றனர். ஆனால் அவரோ, “நான் செய்கிற கிரியைகளை'' என்றார். முதலில் அதை செய்யுங்கள். பிறகு மிஷனரிமார்களைக் குறித்துப் பேசுங்கள். இன்று... சில நாட்களுக்கு முன்பு ஒரு முகமதியனைக் குறித்து இங்கு நான் கூறினேன். அவன், ''முகம்மது மரித்துவிட்டாரென்பது உண்மை. அவர் கல்லறையில் இருக்கிறார். ஒருநாள் அவர் உயிரோடெழுவார். அவர் கல்லறையிலிருந்து உயிரோடெழுந்தால், இருபத்து நான்கு மணி நேரத்துக்குள் முழு உலகமே அதை அறியும். இயேசு உயிரோடெழுந்து இரண்டாயிரம் ஆண்டுகளாகிவிட்டது என்று நீங்கள் கூறுகிறீர்கள். ஆனால் உலகிலுள்ள மக்களில் மூன்றில் ஒரு பாகம்கூட அதை இன்னும் அறியவில்லையே“ என்றான். அதன் காரணம் என்னவெனில், உங்கள் அறிவுத்திறனில் உண்டான கருத்தை நீங்கள் கூறி வந்தீர்கள். ஒரு வேதாகம பள்ளியில் கற்றதனால் கிடைக்கப் பெற்ற கல்வியறிவைக் கொண்டு நீங்கள் அதை எடுத்துக் கூறினீர்கள். கத்தோலிக்கர்கள், பிராடெஸ்டெண்டுகள் அடங்கிய இந்த மகத்தான தேவனுடைய சபை முழுவதும் பரிசுத்த ஆவியைப் பெற்றிருக்குமானால், இந்த உலகம் திடமான கிறிஸ்தவ மார்க்கத்தைக் கொண்டதாயிருக்கும். கம்யூனிஸம் என்பது அப்பொழுது இருந்திருக்காது. சர்ச்சை, விரோதம், நீசத்தனம், வெறுப்பு போன்ற எதுவுமே இருந்திருக்காது. இயேசு தமது சிங்காசனத்தில் வீற்றிருப்பார். நாமும் நித்திய ஜீவனை உடையவர்களாய், ஏற்கனவே உயிர்த்தெழுந்து, புது சரீரத்தை பெற்றவர்களாய், தேவனுடைய பரதீசில் நடந்து, என்றென்றைக்கும் உயிர் வாழ்ந்து, வயோதிபராகாமல், தலை நரைக்காமல், வியாதிப்படாமல், பசியில்லாதவர்களாய், தேவனுடைய சந்தோஷத்தில் நடந்து, மிருகங்களுடன் பேசி... ஓ, அது எப்படிப்பட்ட நாளாயிருக்கும்! 47.ஆனால் அவர் செய்யக் கூறினதை தவிர மற்றெல்லாவற்றையும் நாம் செய்துள்ளோம். அவர். “நீங்கள் உலகமெங்கும் போய் சுவிசேஷத்தைப் பிரசங்கியுங்கள்'' என்றார். சுவிசேஷம் என்றால் என்ன? அது வெறும் வார்த்தை மாத்திரமல்ல, ஆனால் பரிசுத்த ஆவியின் வல்லமையோடும் கிரியைகளோடும் கூட வார்த்தை பிரசங்கிக்கப்படுவதே சுவிசேஷம். தேவனுடைய வார்த்தையை கிரியைகளுடன் வெளிப்படுத்துவதே சுவிசேஷம். இயேசு தமது சபையில் வாழ வேண்டுமென்று அறிந்திருந்தார். நாம் அறிவுத்திறன் கொண்ட பள்ளிக்கூடங்களைப் பெற்றிருப்போம் என்றும் அவருக்குத் தெரியும். இதை நீங்கள் அறிவுத்திறன் கொண்ட பள்ளிக்கூடத்தில் பெற முடியாது. அவர்கள் இதற்கு விரோதமாக இருப்பார்கள். ஏனெனில் அவர்களுக்குத் தெரிந்த அனைத்துமே ஒரு புத்திசாலியின் கல்வி கற்றல், அவர்கள் வாழ்வதற்காக சில கோட்பாடுகளும் ஸ்தாபனங்களுமே. அவர்கள் உங்களை அதில் சேர்த்துக்கொண்டு அங்கத்தினராக்கி, பிழையற்றது போல் தோற்றமளிக்கும் ஒரு கோட்பாட்டை ஏதாவது ஒன்றிலிருந்து அவர்கள் எடுத்துரைப்பார்கள். “பெரிய பரிசுத்த சபை, தாய், அநேக இன்னல்களைத் தாங்கி இன்னும் நிலை நிற்கிறது'' என்பார்கள். பிசாசும் அப்படித்தான். அவன் சென்ற ஏறக்குறைய எல்லாவிடங்களிலும் உதைத்து வெளியே தள்ளப்பட்டிருக்கிறான். அவன் இன்னமும் நிலைநிற்கிறான். ஆம் ஐயா! ஓ, அவர்கள் புத்தகங்களிலிருந்து எடுத்துரைக்க முயல்வார்கள்... 48.எனவே இயேசு, அவர் நாட்களிலிருந்தது போன்ற அறிவுத்திறன் கொண்ட ஒரு மகத்தான அசைவு இருக்கும் என்று அறிந்திருந்தார் - கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவும் விதத்தில், உடுக்கும் விதத்தில், கழுத்துப் பட்டையை திருப்பி உடுக்கும் விதம் போன்றவைகளில், அவர்கள் அவ்வாறு செய்வார்கள் என்று அவர் அறிந்திருந்தார். எனவே அவர், ''ஒரு நிமிடம் பொறுங்கள். நான் உங்களைத் திக்கற்றவர்களாக விடேன். உங்களோடு கூட இருக்க நான் திரும்பி வருவேன். எனவே நான் செய்கிற கிரியைகளை நீங்களும் செய்வீர்கள்'' என்றார். பரிசுத்த ஆவியை அனுப்பின நோக்கம் என்னவெனில், ஒரு கூட்ட ஜனங்களுடன் அவர் தொடர்ந்து இருக்கவும், ஒரு கோட்பாட்டினாலோ அல்லது ஸ்தாபனத்தினாலோ அல்லாமல் அவருடைய உயிர்த்தெழுதலின் வல்லமையினால் தேவனை உலகிற்கு தொடர்ந்து வெளிப்படுத்தவும் (அது முற்றிலும் உண்மை). அவருடைய வார்த்தையை தத்ரூபப்படுத்தி, அவருடைய வாக்குத்தத்தத்தை விசுவாசித்து தேவனில் விசுவாசம் கொண்டிருக்கும் இந்த சிறுபான்மையோரின் சார்பில் நிற்கவும், கறுத்த வானம் அகன்று போய், தேவனுடைய வல்லமை உள்ளே வந்து ஆதிக்கம் பெறவுமே. ஆமென்! அதுதான் அவருக்கு வேண்டும். அதற்காகத்தான் பரிசுத்த ஆவி அனுப்பப்பட்டது. அந்த நோக்கத்துக்காகவே அவர் அதை அனுப்பினார். அது என்னவென்று இப்பொழுது நாம் அறிந்து கொண்டோம். அதற்காகத்தான் அவர் அதை அனுப்பினார். 49.எனவே, வேறெந்த இரத்தமும் ஜனங்களை பரிசுத்தமாக்க முடியாது. நான் உங்களைப் பரிசுத்தமாக்க முடியாது, நீங்களும் என்னை பரிசுத்தமாக்க முடியாது. ஏனெனில் நாம் அனைவருமே இனசேர்க்கையினால் பிறந்தவர்கள். ஆனால் இயேசுவோ இனசேர்க்கையின்றி பிறந்தவர். அது உண்மை. எனவே அவருடைய இரத்தம் பரிசுத்தமாக்கும் தன்மை வாய்ந்தது. தேவன் தமக்கென்று ஒரு சரீரத்தை உண்டாக்கி, இறங்கி வந்து அதில் வாசம் செய்து, பரிசுத்தமாக்கும் பொருட்டு தம்முடைய இரத்தத்தை சிந்தினார். அந்த இரத்தம் நம்மை பாவத்தின் குற்றத்திலிருந்தும் அவமானத்திலிருந்தும் முற்றிலுமாக விடுவித்தது. பிறகு விசுவாசத்தின் மூலம், அதை விசுவாசிப்பதனால், அந்த இரத்தத்தினால் பரிசுத்தமாக்கப்பட்ட மானிட சரீரத்துக்குள் தேவன் இறங்கி, விசுவாசத்தின் மூலம் அவனை ஆபிரகாமின் சந்ததியாக்கி, பரிசுத்த இரத்தம் அற்புதமாக வரும் என்பது போன்ற விசுவாசத்தை அவனுக்குள் வைக்கிறார். ஆபிரகாமின் சரீரம் செத்த பின்பும், அவன் இருபத்தைந்து ஆண்டுகளாக தேவனை விசுவாசித்தான். அவனுக்கு அப்பொழுது எழுபத்தைந்து வயது, அவனுக்கு நூறு வயதாகும் வரைக்கும் விசுவாசித்தான். சாராளுக்கு அறுபத்தைந்து வயது. அவளுக்கு தொண்ணூறு வயதாகும் வரைக்கும் விசுவாசித்தாள். அவன் சரீரம் செத்துப் போயிருந்தது... தேவன் அவனிடம், ''ஜனங்கள் அதைக் காணத் தவறக்கூடாது. உன் மகனை மலையின்மேல் கொண்டுபோய் அவனை எனக்கு பலி செலுத்து“ என்றார். 50.ஆபிரகாம் தன் வேலைக்காரரிடம், ''நீங்கள் கழுதையை நிறுத்தி இங்கே காத்திருங்கள், நானும் பிள்ளையாண்டானும் அவ்விடமட்டும் போய், தொழுது கொண்டு, உங்களிடத்துக்குத் திரும்பி வருவோம்'' என்றான். ஓ, அவன் எப்படி அதை செய்யப் போகின்றான்? ஆபிரகாம், ''மரித்தோரிலிருந்து அவனைப் பாவனையாகப் பெற்றுக் கொண்டேன். நான் மாத்திரம் அவருடைய வார்த்தையை கைக்கொண்டால், மரித்தோரிலிருந்து அவனைப் பாவனையாகக் கொடுத்தவர், மரித்தோரிலிருந்தும் அவனை எழுப்ப வல்லவராயிருக்கிறார். அவருடைய வார்த்தையைக் கைக்கொண்டால்... அவருடைய வார்த்தையை நான் கைக் கொள்கிறேன். எனவே மரித்தோரிலிருந்து அவனைத் தேவன் எழுப்ப வல்லவராயிருக்கிறார்“ என்றான். அது கிறிஸ்துவைக் குறித்து பரிபூரணமாக முன்னுரைக்கிறது. அதோ அவர் இருக்கிறார். அந்த இரத்த அணுக்களின் வழியாக பரிசுத்த ஆவி புறப்பட்டு வந்தது. அது தன்னை இயேசு என்னும் சரீரத்தில் கட்டுப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த இரத்தம் விசுவாசத்தின் மூலம் பரிசுத்தமாக்கி, தேவனால் தெரிந்து கொள்ளப்பட்டு மீட்கப்பட்டவர்களை அழைக்கிறது. நீங்கள் ஏற்றுக் கொள்ளும்போது, பரிசுத்த ஆவி உங்களிலுள்ள நீசத்தனம் அனைத்தையும் எடுத்துப் போடுகின்றது. தேவன் தாமே உள்ளே வந்து, தமது சித்தத்தை நிறைவேற்றுகிறார். இங்கு நீசத்தனமான முதலாளி கடுகடுப்பாக இருந்தாலும், அந்த வயோதிப இன்னார் இன்னின்னதை செய்தாலும், இந்த வயோதிபன் அதற்கு விரோதமாய் பேசினாலும், பரிசுத்த ஆவியினால் நிறைந்த ஒரு மனிதன் அதையெல்லாம் வெற்றிகரமாக சந்திப்பான். ஆமென்! 51.அவர்கள் அறிந்து கொண்டார்கள். அவர்கள் படிப்பறியாதவர்களென்றும், பேதமையுள்ளவர்களென்றும், அறிந்தபடியினால் ஆச்சரியப்பட்டு, அவர்கள் இயேசுவுடனே கூட இருந்தவர்களென்று அறிந்து கொண்டார்கள். அதற்காகத்தான் பரிசுத்த ஆவி வந்தது. ஒரு வயோதிப செம்படவனுக்கு தன் பெயரைக் கையொப்பமிடவும் கூட அறியவில்லை. அவன் அங்கு நின்று கொண்டு, “யாரை நாங்கள் விசுவாசிப்பது, மனிதனையோ, தேவனையா? (ஆமென்!) நாங்கள் இயேசுவின் நாமத்தில் போதிப்போம் என்று நீங்கள் எல்லோரும் அறிந்து கொள்ளுங்கள்” என்றான். ஆ, என்ன தைரியம்! ''அவனுக்கு மறுகரையில் ஒரு வீடு உண்டு“ என்று அவன் அறிந்திருந்தான். அது உண்மை. அவன் இங்கு அந்நியனும் பரதேசியுமாயிருந்தான். அவன் வரப்போகும் நகரத்தை நாடிக் கொண்டிருந்தான். அந்த மாய்மால ஆசாரியனைக் குறித்து அவன் ஏன் பயப்பட வேண்டும்? அவன் பரலோகத்தின் தேவனின் ஆதிக்கத்தின் கீழ் இருந்தான். அவர் தமது குமாரனாகிய கிறிஸ்து இயேசுவை எழுப்பி, அவனை தேவனுடைய ஆவியினால் நிரப்பினார். அவரே வானத்தையும் பூமியையும் படைத்தவர். அதுதான். அவன் அவனைப் பார்த்து பயப்படவேயில்லை. இல்லை, ஐயா! 52.மரணம்... அவர்கள் ஸ்தேவானை வெளியே கொண்டு சென்று, “இனிமேல் அப்படி சொல்லாதே'' என்றனர். அவன், ”வணங்காக் கழுத்துள்ளவர்களே, இருதயத்திலும் செவிகளிலும் விருத்தசேதனம் பெறாதவர்களே, உங்கள் பிதாக்களைப் போல நீங்களும் பரிசுத்த ஆவிக்கு எப்பொழுதும் எதிர்த்து நிற்கிறீர்கள்“ என்றான். அவர்கள், ''நாங்கள் உன்னை அடித்துக் கொல்லுவோம்'' என்றனர். அவன், “உங்களால் அப்படி செய்ய முடியாது'' என்றான். ''எங்களால் செய்ய முடியுமா இல்லையாவென்று காண்பிக்கிறோம்“, அவர்கள் பெரிய கற்பாறைகளைத் தூக்கி அவன் தலையை நொறுக்கினார்கள். அவன் வானத்தை அண்ணாந்து பார்த்து, “வானங்கள் திறந்திருக்கிறதை காண்கிறேன். ஏணி கீழே வருவதைக் காண்கிறேன். தேவனுடைய மகிமையின் வலது பாரிசத்தில் இயேசுவானவர் நிற்கிறதைக் காண்கிறேன்'' என்றான். அவன் மரித்துப் போனதாக வேதம் கூறவில்லை; அவன் நித்திரையடைந்தான் என்று அது கூறுகிறது. ஓ, என்னே! ஒரு தேவதூதன் கீழே இறங்கி வந்து, அவன் நித்திரையடையும் வரைக்கும் ஒரு தாயைப் போல் தொட்டில் ஆட்டினதை என்னால் காண முடிகிறது. ஓ, என்னே! நிச்சயமாக, அதுதான் பரிசுத்த ஆவியின் நோக்கம். அதற்காகத்தான் தேவன் பரிசுத்த ஆவியை அனுப்பினார். 53.உங்களுக்கு வல்லமையை அளிக்க பரிசுத்த ஆவி வந்துள்ளது. இங்கு இன்னும் சில வேதவாக்கியங்களை குறித்து வைத்துள்ளேன். ஒரு நிமிடம். உங்களுக்கு வல்லமையை அளிக்க பரிசுத்த ஆவி வந்துள்ளது (நான் - நான். இதை நீங்கள் காணலாம், இன்றிரவு நான் அதிக தூரம் சென்றுவிட்டேன்). உங்களுக்கு வல்லமை அளிக்கிறது, ஜெபத்தில் வல்லமை. நல்ல வாழ்க்கை வாழ்ந்த ஒரு மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள். ஆனால் அவர்கள் எப்பொழுதுமே தோல்வியடைந்தவர்கள். “ஓ, நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்...” நல்லவர், “ஓ, சகோதரன் பிரான்ஹாமே, நான் நிச்சயமாக கர்த்தரை நேசிக்கிறேன்'' எப்பொழுதுமே தோல்வியடைந்தவர்கள், அவர்களுடைய ஜெபத்திற்கு பதில் கிடைப்பதில்லை. ஆனால் அந்த ஸ்திரீயை ஒரு முறை பரிசுத்த ஆவியால் நிறைத்து, என்ன நடக்கிறதென்று கவனியுங்கள்! அவள் தேவனுடைய சமுகத்துக்கு முன்பாக வரும்போது, ஒருபோதும் தோல்வியடைவதில்லை. அவள் தைரியமாக தேவனுடைய சிங்காசனத்துக்கு முன்பாக, விசுவாசித்து வருகிறாள்! அவளுக்கு உரிமையுண்டு, ஏனெனில் அவள் பிறப்பின் மூலம் தேவனுடைய குமாரத்தியாயிருக்கிறாள். அந்த மனிதனை எடுத்துக் கொள்ளுங்கள். அவன் ஒரு கோழை. அவனுடைய முதலாளி அவனை எல்லாவிடங்களிலும் உதைத்து தள்ளுகிறான். அவனை ஏதோ ஒன்று மாற்றிவிடுகிறது. பாருங்கள்? அவன் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொண்டான். அவர் உங்களுக்கு வல்லமை அருளுகிறார். உங்கள் வாழ்க்கை வல்லமை நிறைந்ததாய் உள்ளது. 54.அவர் உங்கள் பேச்சில் வல்லமை அளிக்கிறார். என்னே, அங்கு பயந்து நின்று கொண்டிருந்தவர்கள். பேதுரு, யாக்கோபு, யோவான், லூக்கா, இன்னும் மற்றவர்கள் மேலறையில் ஒன்று கூடியிருந்தனர். அவர்கள், “ஓ, நாங்கள் இன்னும் காத்திருக்க முடியாது. இங்கு பாருங்கள். டாக்டர் இன்னார், இன்னார், வெளியே நின்று கொண்டிருக்கிறார். ஜெப ஆலயத்தலைவர் இன்னார், இன்னார், அங்கிருக்கிறார். உங்களுக்குத் தெரியுமா, அவர் கல்லூரியில் நான்கு பட்டங்கள் பெற்றவர். நாம் எப்படி அவர்களுக்கு எதிராக நிற்கப் போகிறோம்?'' என்றனர். பேதுரு, “ஓ, ஒரு நாள் அவருக்கு நான் மீன் விற்றது எனக்கு ஞாபகம் வருகிறது. அவர் பேசினார். அவர் என்ன பேசினாரென்று என்னால் அறிந்துகொள்ளவே முடியவில்லை, ஓ, அவருக்கு எதிராக என்னால் நிற்கமுடியாது. சகோதரரே, நாம் என்ன செய்வோம்?'' என்றான். அவர், ''காத்திருங்கள்“ என்றார். ''நாங்கள் நான்கு நாட்களாக காத்திருக்கிறோமே'' ''காத்திருக்க மாத்திரம் செய்யுங்கள்''. “எவ்வளவு நாட்கள்?'' “அது வரும் வரைக்கும்!'' “அது ஐந்தாம் நாள் வருமென்று கூறினாரா?'' ''அவர் எவ்வளவு நாட்கள் என்று கூறவில்லை. அவர், “அது வரும் வரைக்கும்” என்று தான் கூறினார். எனவே அவர்கள் காத்திருந்தனர். எவ்வளவு நாட்கள்? ''அது வரும் வரைக்கும்“ ''எட்டு நாட்கள் கடந்தன'' ''அது வரும் வரைக்கும்“ ''ஒன்பது நாட்கள் கடந்தன'' ''அது வரும் வரைக்கும்“. 55.முடிவில் பெந்தெகொஸ்தே என்னும் நாள் வந்தபோது, அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள். தேவன் அவர்கள் மேல் அக்கினி மயமான மேகத்தில் இருந்தார். தேவன் அவர்களோடு பூமியில் நடந்து கொண்டிருந்தார். இப்பொழுதோ வேறு ஏதோ ஒன்று சம்பவிக்கப் போகின்றது, ஏதோ ஒன்று நடக்கக் காத்துத் கொண்டிருக்கிறது. அவர்களெல்லாரும் ஒருமனப்பட்டு ஓரிடத்திலே வந்திருந்தார்கள், அப்பொழுது பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போல, வானத்திலிருந்து சடுதியாய் ஒரு முழக்கமுண்டாகி, அவர்கள் உட்கார்ந்திருந்த வீடு முழுவதையும் நிரப்பிற்று, அல்லாமலும் பிரிந்திருக்கும் நாவுகள், அவர்கள் மேல் வந்து அமர்ந்தது. 'பிரிந்திருக்கும்' (Cloven) என்றால் என்ன? 'பிளந்திருத்தல்' (Parted), திக்குநாவைப் போல், யாராகிலும் திக்கிப் பேசுவதை நீங்கள் கேட்டதுண்டா? அவர்கள் “ஆ -ஆ -ஆ'' என்று பேசுவார்கள் (சகோ. பிரான்ஹாம் திக்கி பேசிக் காண்பிக்கிறார் - ஆசி). பாருங்கள்? அவர்களால் எதையும் கூறவே முடியாது. ”பிரிந்திருத்தல், பிளந்திருத்தல்“, பிளுவுபட்ட குளம்பைப் போல், அதன் அர்த்தம் என்னவெனில், அது ”பிளவுபட்டிருந்தது. அவர்கள் பேசவில்லை, அவர்கள் பிதற்றிக் கொண்டிருக்கவில்லை, அவர்கள் ஒன்றும் செய்யவில்லை. அவர்கள் சத்தமிட்டுக் கொண்டிருந்தார்கள், அக்கினி மயமான நாவுகள் போலப் பிரிந்திருக்கும் நாவுகள் அவர்கள் மேல் வந்து அமர்ந்தது. ஓ, அவர்களால் அடக்கிக் கொண்டிருக்க முடியவில்லை. அவர்களெல்லாரும் பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டனர். வ்யூ! 56.பிறகு என்ன நடந்தது? அவர்கள் தெருக்களில் சென்றனர், “ரவி ஜோன்ஸ் எங்கே? அந்த ஆசாமி எங்கே? அந்த அறிவாளி எங்கே? தேவன் மோசேக்கு பற்றி எரிகிற முட்செடியில் தரிசனமான போது, எங்கள் மேல் இருந்தார். அவர் பரத்திலிருந்து மன்னாவினால் எங்களை போஷித்தார், அதன் பிறகு அவர் மூன்று ஆண்டு காலம் மூன்று வருடம் ஆறு மாதங்களாக பூமியில் எங்களோடு கூட நடந்தார். இப்பொழுது அவர் எனக்குள் இருக்கிறார். பேசுவது நானல்ல. அது அவரே, அவர் யாரென்று நானறிவேன். நான் யாரென்றும் நான் அறிந்திருக்கிறேன். இனி நான் அல்ல, அவரே, அது யாராயிருந்தாலும் என் முன் கொண்டு வாருங்கள்'' என்றனர். “யூதர்களே, எருசலேமில் வாசம் பண்ணுகிற ஜனங்களே, நீங்களெல்லாரும் அறிந்து கொள்வீர்களாக, என் வார்த்தைகளுக்குச் செவிகொடுங்கள். போதகர்களே, ரபீக்களே'' வ்யூ! என்னே! பேச்சில் வல்லமை. ஓ! ''இவர்கள் வெறிகொண்டவர்களல்ல (அந்த சிறு பான்மையோராகிய நூற்றிருபது பேர்களின் சார்பில், பத்தாயிரம் பேர்களுக்கும் அதிகமான பேர்களுக்கு எதிராக)... நீங்கள் நினைக்கிறபடி இவர்கள் வெறி கொண்டவர்களல்ல, பொழுது விடிந்து மூன்றாம் மணிவேளையாயிருக்கிறதே (நான் ஒரு முழு சுவிசேஷப் பிரசங்கி). தீர்க்கதரிசியாகிய யோவேலினால் உரைக்கப்பட்டபடியே இது நடந்தேறுகிறது, ”கடைசி நாட்களில் நான் மாம்சமான யாவர் மேலும் என் ஆவியை ஊற்றுவேன் (வ்யூ!). அப்பொழுது உங்கள்... மரியாள் அங்கு ஆவியில் நடனமாடி, அந்நிய பாஷைகள் பேசிக் கொண்டிருப்பதைக் காண்கிறீர்கள் அல்லவா? “என்னுடைய ஊழியக்காரிகள் மேலும் என் ஆவியை ஊற்றுவேன். அல்லாமலும் உயர வானத்திலே அற்புதங்களையும், தாழப் பூமியிலே அக்கினி ஸ்தம்பம், புகைக்காடாகிய அதிசயங்களையும் காட்டுவேன். தேவன் அப்பொழுது அவருடைய ஜனங்களுக்குள் இருந்தார். பாருங்கள்? ஆமென்! 57.''நல்லது, நீ என்ன பட்டங்களைப் பெற்றிருக்கிறாய்? நீ எந்த வேதாகம பள்ளியிலிருந்து வருகிறாய்?'' “இப்பொழுது அதனால் ஒரு வித்தியாசமுமில்லை”, ''ஓ, அவன் வேத வாக்கியங்களை சரமாரியாய் பொழிகிறான். ''தாவீது அவரை முன்கூட்டியே கண்டான். கர்த்தரை எப்பொழுதும் எனக்கு முன்பாக வைத்திருக்கிறேன்... நான் அசைக்கப்படுவதில்லை. அதனாலே என் இருதயம் மகிழ்ந்தது, என் நாவு களிகூர்ந்தது. அவர் என் ஆத்துமாவை பாதாளத்தில் விடமாட்டார், அவருடைய பரிசுத்தர் அழிவைக் காணவொட்டார். நான் உங்களுடனே தைரியமாய்ப் பேசுகிறதற்கு இடங்கொடுங்கள். கோத்திரத் தலைவனாகிய தாவீது மரணமடைந்து அடக்கம் பண்ணப்பட்டான், அவனுடைய கல்லறை இந்நாள் வரைக்கும் நம்மிடத்திலிருக்கிறது, அவன் தீர்க்கதரிசியாயிருந்து, நீதியுள்ள இவருடைய வருகையை முன்கூட்டி கண்டான். ஆகையினால், உங்கள் பொல்லாத கைகளினால் நீங்கள் சிலுவையில் அறைந்த இந்த இயேசுவையே தேவன் ஆண்டவரும் கிறிஸ்துவுமாக்கினாரென்று யாவரும் நிச்சயமாய் அறியக்கடவர்கள்.'' ''சகோதரரே, இரட்சிக்கப்படுவதற்கு நாங்கள் என்ன செய்ய வேண்டும்?'' பேதுரு அவர்களை நோக்கி, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவ மன்னிப்புக்கென்று இயேசுகிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள். வாக்குத்தத்தமானது உங்களுக்கும், உங்கள் பிள்ளைகளுக்கும், நம்முடைய தேவனாகிய கர்த்தர் வரவழைக்கும் தூரத்திலுள்ள யாவருக்கும் உண்டாயிருக்கிறது'' என்றான். ஆமென்! 58.தேவனுக்கு ஒரு கூட்டம் ஜனங்கள் உள்ளவரைக்கும், தேவனுக்கு ஒரு சபை உள்ளவரைக்கும், அதனுடன் பரிசுத்த ஆவி அணிவகுத்து செல்லும்படி தேவன் செய்கிறார். அதற்காகத்தான் தேவன் பரிசுத்த ஆவியை அருளினார். படித்த மேதைகள் எழும்புவார்கள், அவர்கள் எப்பொழுதும் எழும்புவார்கள். ஆனால் தேவனுக்கு எங்கோ ஓரிடத்தில் சிறுபான்மையோர் இருப்பார்கள். அந்த வெளிச்சத்தை உரிமைகோர, பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தைப் பெற்று முன்செல்ல தேவனுக்கு ஒரு சிறு சபை உள்ளது. இவர்கள்தாம், தங்கள் சாட்சியின் மூலம், உலகத்தை நியாயந்தீர்ப்பார்கள். “இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள், அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்'' என்று வேதம் கூறவில்லையா, இயேசு கூறவில்லையா? (மத்: 5:8) மற்றுமொரு வேதவாக்கியம், பரிசுத்தவான்கள் உலகத்தை நியாயந்தீர்ப்பார்கள் என்று கூறுகிறது அல்லவா? (Iகொரி: 6:2) நிச்சயமாக. இன்றைய உங்கள் சாட்சி இந்நகரத்துக்கு விரோதமாய் நியாயத்தீர்ப்பைக் கொண்டு வரும், பரிசுத்த ஆவியின் அபிஷேகம், தேவனுடைய வல்லமை, பரிசுத்த வாழ்க்கை இவைகளைக் குறித்து நாம் கொண்டிருக்கும் சாட்சி இந்நகரத்துக்கு விரோதமாய் நியாயத்தீர்ப்பைக் கொண்டு வரும். 59.முந்தினோர் பிந்தினோராயும் பிந்தினோர் முந்தினோராயும் இருப்பார்கள். எனக்கு சாங்கி, மூடி, இவர்களின் உயிர்த்தெழுதலைக் குறித்து ஒன்றும் தெரியாது. அவர்களுக்கும் என்னைக் குறித்தும் இதைக் குறித்தும் ஒன்றும் தெரியாது. ஆனால் நான் இதில் நின்று சாட்சி கொடுப்பேன். நீங்களும் சாட்சி கொடுப்பீர்கள், அதன் மூலமாக, உங்கள் வெளிச்சம் எல்லாவிடங்களிலும் சிதறும் காரணத்தாலும், பரிசுத்த ஆவியின் அபிஷேகத்தின் மூலமாகவும், நீங்கள் வாழும் வாழ்க்கையின் மூலமாகவும், அவர் இங்கு அசைந்து கொண்டிருக்கிறார் என்பதை நிரூபிக்க அவர் செய்துவரும் அற்புதங்கள் மூலமாகவும்; புத்தி கூர்மையுள்ளவர்கள் அதைக் கண்டு நகர்ந்து சென்றுவிட்டார்கள்; இவையனைத்தின் மூலமாகவும் அவர்கள் பரிசுத்தவான்களால் நியாயந்தீர்க்கப்படுவார்கள். அவர்கள் ஏற்கனவே நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டார்கள். அவர்கள் நியாயத்தீர்ப்பின் வழியாய் பிரவேசித்துவிட்டார்கள். 60.ஓ, என்னே! நான் ஜெபத்தின் வல்லமையைக் குறித்தும், பேச்சின் வல்லமையைக் குறித்தும் பரிசுத்த வாழ்க்கை வாழ்வதற்காக கிடைத்துள்ள வல்லமையைக் குறித்தும் பேசிக் கொண்டிருந்தேன். ஆமென்! அதைத்தான் பரிசுத்த ஆவி செய்ய வேண்டியதாயுள்ளது. உங்களில் சிலர், ''மது அருந்துவதை என்னால் நிறுத்த முடியவில்லை, என்னால் இதை நிறுத்த முடியவில்லை'' என்கிறீர்கள் ''முடியவில்லை'' என்னும் இவைகளை உங்களிலிருந்து அகற்றவே (அது உண்மை!) பரிசுத்த ஆவி வந்து உங்களுக்குள் வாழ்கிறது. அது ஸ்திரீகள் தலைமயிர் கத்தரித்துக் கொள்வதையும், குட்டைகால்சட்டை, கால் சட்டை அணிவதையும் (சாக்கு போக்கு எதுவுமேயில்லை!) வம்புப் பேச்சு பேசுவதையும் நிறுத்தச் செய்கிறது. ஓ, ஆமாம்! அதற்காகத்தான் அது வந்துள்ளது. நீங்கள் பரிசுத்த வாழ்க்கை வாழும்படி செய்ய, அது ஒவ்வொரு முறையும் வேதத்திலுள்ள புத்திமதிகளைப் பின்பற்றும். ஒரு ஸ்திரீ, “மிகவும், உஷ்ணமாயிருப்பதால், நான் இத்தகைய உடைகளை அணிகிறேன். தலைமயிரை வளர்த்தால் எனக்கு தலைவலி வந்துவிடுகிறது எனலாம். ஆனால் பரிசுத்த ஆவியிடம் எந்த சாக்கு போக்கும் கூறமுடியாது. உங்களை அப்படி செய்ய வைக்கவே அது வந்துள்ளது. அது தேவனுடைய வார்த்தையை அப்படியே பின்பற்றும். பரிசுத்த ஆவி அதை தான் செய்ய வேண்டும். மனிதர்களாகிய நீங்கள் அரை நிர்வாணமுள்ள ஸ்தீர்களைக் கண்டு அவர்களை இச்சியாதபடிக்கு அது உங்கள் தலைகளைத் திருப்பச் செய்யும். அத்தகைய ஸ்திரீகள் சபை அங்கத்தினர்கள்! அதைத்தான் அது செய்ய வேண்டியதாயுள்ளது. 61.அது நீங்கள் புகைபிடிப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்தும்படி செய்கிறது. நீங்கள் பெரியவர்களாக வேண்டுமெனும் எண்ணத்தை அது உங்களிலிருந்து எடுத்துப் போடுகிறது. அப்படி நீங்கள் செய்யும் போது, அது உங்களை தாழ்த்துகிறது. அதற்காகத்தான் பரிசுத்த ஆவி உள்ளது. அது பரிசுத்த வாழ்க்கையை ஆதரிக்கிறது. (அது உண்மை!): நீங்கள் வீண்பேச்சு பேசுவதை அது நிறுத்தும்படி செய்கிறது. நீங்கள் சீட்டு விளையாடுதல், சூதாடுதல் இன்னும் மற்றவைகளில் ஈடுபடுதல் போன்றவைகளை அகற்றிவிடுகின்றது. உங்கள் மனைவிக்கு உண்மையில்லாத வாழ்க்கை நீங்கள் நடத்துவதை அது அகற்றிவிடுகின்றது. அதைதான் அது செய்யும். அது உண்மை. வேறொவரின் மனைவியை நீங்கள் மணக்க விரும்புவதை அது அகற்றிவிடுகின்றது. அது முற்றிலும் உண்மை. அதுதான் அது. நீங்கள் பரிசுத்த வாழ்க்கை வாழும்படி செய்வதே அதன் நோக்கம். அதற்காகத்தான் பரிசுத்த ஆவியின் வல்லமை அருளப்படுகிறது நீங்கள் மேலானவைகளை நாடுவதற்காக. கிறிஸ்துவின் சிந்தை உங்களில் இருக்கிறது. அவைகளைக் காண்பதை நீங்கள் தவிர்க்க முடியாது. ஆனால் அவைகளைக் காணும்போது உங்கள் தலையை திருப்பிக் கொள்வீர்கள். அது உண்மை. நீங்கள், ''என்னால் முடியாது. ஓ, என்னால் முடியாது'' என்கிறீர்கள். நிச்சயமாக உங்களால் முடியாது தான். ஆனால் பரிசுத்த ஆவி வந்துள்ள நோக்கமே உங்கள் பழைய பழக்க வழக்கங்களையும், நீங்கள் புரியும் தகாத செயல்களையும் உங்களை விட்டு எடுத்து போடவே, அதைத்தான் அது செய்கிறது. உங்கள் புறங்கூறுதல், உங்களை பிரித்துக் கொண்டு, “கர்த்தருக்கு ஸ்தோத்திரம். நான் ஒரு மெதோடிஸ்டு. அந்த உருளும் பரிசுத்தர்களுடன் நான் எவ்வித தொடர்பும் கொள்ள மாட்டேன்” என்று கூறுதல்; இவைகளை உங்களிலிருந்து எடுத்து போடவே பரிசுத்த ஆவி வந்துள்ளது. 62.''நான் ஒரு பிரஸ்பிடேரியன். நான் அந்த உகுளும் பரிசுத்தர் கூட்டத்துக்கு செல்லமாட்டேன். உங்கள் பெருமை அனைத்தையும் உங்களிலிருந்து எடுத்துப் போடவே பரிசுத்த ஆவி வந்துள்ளது. அதை தான் அது செய்கிறது. அது உங்களை இரத்தத்தில் கழுவி, இஸ்திரி போடுகின்றது. அதைச் செய்யவே அது வந்துள்ளது. அது உங்களை நேராக்க வந்துள்ளது, நீங்கள் கூறினீர்கள்... கோணலான இடங்கள் செவ்வையாக்கப்படும் அதைத்தான் அது செய்ய வந்துள்ளது, அதை செவ்வையாக்க, உயர்ந்த இடங்களெல்லாம் தாழ்த்தப்பட்ட, மலைகளெல்லாம் ஆட்டுக்கடாக்களைப் போல் துள்ள, இலைகளெல்லாம் உங்களுக்கு கைகொட்ட (சகோ. பிரான்ஹாம் கை கொட்டுகிறார் - ஆசி) பறவைகள் வித்தியாசமாக பாடும் மகிழ்ச்சியின் மணிகள் ஒலிக்கும். சாக்கு போக்குக்கு இடமேயில்லை. அதைத்தான் அது செய்ய வருகிறது. இவைகளை நீங்கள் செய்யவேண்டும் என்னும் நோக்கத்துக்காகவே தேவன் பரிசுத்த ஆவியை அனுப்பியுள்ளார் நீங்கள் அவர் பின்னால் நடக்க வேண்டும் என்பதற்காக. 63.உங்களை நான் புண்படுத்த விரும்பவில்லை. நான் ஆழ்ந்து உத்தமத்துடன் இங்குள்ளேன் என்று உங்களுக்குக் கூறினேன். உங்களை நோகச் செய்யாமலிருக்க, நான் எப்பொழுதாவது ஒரு முறை ஒன்றைக் கூறாமல் விட்டு விட்டு எங்காவது சென்று விடுகிறேன் (அங்கு சென்று சத்தியத்தில் நிலைநிற்கிறேன்). உங்களை அதிகம் நோகச் செய்யாமல் இருக்க அதில் நிலைநின்று, அதை ஒருவிதமாக கூறிவிடுகிறேன். ஆனால், உங்களிடம் ஒன்றைக் கூற விரும்புகிறேன். ஒரு ஸ்திரீ தலை மயிரைக் கத்தரிக்கக் கூடாது என்று வேதம் கூறி, உங்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதென்று கூறிக்கொண்டு உங்கள் தலைமயிரைக் கத்தரிப்பீர்களானானால், உங்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதாவென்று வியக்கிறேன். கோபங்கொள்ளாதீர்கள். உங்களில் இருக்குமானால், அது உங்களுக்கு விரோதமான ஒரு குறியாயிருக்கும். 64.ஒரு ஸ்திரீ புருஷனின் உடைகளைத் தரிக்கலாகாது என்று வேதம் கூறி, ஆண்களின் மேலாடைகளையும் கால்சட்டைகளையும் அணிந்து தெருவில் செல்வீர்களானால்... வளர்ந்துள்ள ஸ்திரீகளாகிய நீங்கள்... ஒரு சிறு குழந்தை சிறு பையன்களின் உடைகளை அணிவதனால் பரவாயில்லை என்று எண்ணுகிறேன். ஆனால் பதினைந்து, பதினாறு, பதினெட்டு வயதுள்ள பெண்களும், இன்னும் வளர்ந்து பாட்டி பருவத்தை அடைந்துள்ள ஸ்திரீயும் ஆண்களின் உடைகளை அணிந்து தெருவில் செல்வதைக் காணும்போது... இப்படிப்பட்ட உடைகளை ஸ்திரீகள் உடுத்தல் தேவனுடைய பார்வைக்கு அருவருப்பானது என்று வேதம் கூறுகின்றது. நீங்கள் அதை அணிந்துகொண்டு, அதே சமயத்தில் உங்களுக்கு பரிசுத்த ஆவி உள்ளதாக கூறிக் கொள்கிறீர்களே! சில நேரங்களில் நான் வியக்கிறேன். பரிசுத்த ஆவி தேவனுடைய வார்த்தையை ஒரு எழுத்தும் பிசகாமல் அப்படியே பின்பற்றும். அதை பிரசங்க பீடத்திலிருந்து பிரசங்கிக்க போதுமான கிருபை இல்லாத போதகருக்கு, பரிசுத்த ஆவி உள்ளதா என்று சந்தேகிக்கிறேன். நல்லது. அதற்காகத் தான் பரிசுத்த ஆவி உள்ளது. 65.அது போதகருக்கு அபிஷேகத்தைக் கொடுக்கவும், அந்த குழுவுக்கு பரிசுத்தத்தை அளிக்கவும், சபையை ஒழுங்குபடுத்தவும், ஆவிக்குரிய ஒற்றுமையை அளிக்கவும், நம்மை வல்லமையினால் ஒன்றாக இணைக்கவும், சகோதர அன்பினால் நம்மை பிணைக்கவும் அளிக்கப்பட்டுள்ளது. நீங்கள் மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, பிரஸ்பிடேரியன், லூத்தரன் யாராயிருந்தாலும் எனக்குக் கவலையில்லை. நாம் அனைவரும் ஒரே பரிசுத்த ஆவியினால் ஒரே சரீரத்துக்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்ட இயேசு கிறிஸ்துவின் சரீரத்தின் அங்கத்தினர்களாயிருப்போமானால்... இப்போதுள்ள எதுவும், வருங்காலத்திலுள்ள எதுவும்; அது பசியோ, பட்டினியோ, நம்மைத் தேவனுடைய அன்பைவிட்டுப் பிரிக்க மாட்டாது... கிறிஸ்துவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு. ஏனெனில் நாம் அவருடைய ஆவியினாலே பிறந்து, அவருடைய இரத்தத்தினாலே கழுவப்பட்டிருக்கிறோம். நாம் புது சிருஷ்டியாயிருக்கிறோம். அதைச் செய்யவே தேவன் வந்தார். அதற்காகத்தான் பரிசுத்த ஆவி உள்ளது. ஆம், ஐயா! அதுதான்! 66.இப்பொழுது ஜனங்களே, என் முகத்தை நோக்குங்கள். பரிசுத்த ஆவி பெற்றுள்ளதன் அறிகுறியாக அநேக கரங்கள் இங்கு உயர்த்தப் பட்டன. பாருங்கள்? நிச்சயமாக. ஓ, இப்பொழுது இங்கு சிறிது வலியுறுத்தப் போகின்றேன். இது ஒலிப்பதிவு செய்யப்படுகிறது. இதைக் குறித்து அதிகம் நாம் நாளை இரவு காணப்போகின்றோம். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுள்ளதாக கூறிக்கொண்டு, இவைகளில் குற்றஞ் செய்தவர்களாக இருப்பீர்களானால், உங்களை வழி நடத்துவது எது என்று வியக்கிறேன். தேவன் உங்களை ஒருபோதும் வார்த்தையை விட்டு அகலும்படியாக வழிநடத்த மாட்டார். அவர் உங்களை வார்த்தையில் காத்துக் கொள்வார். ஏனெனில் அதுவே தேவன் தமது சபையிலுள்ள ஜனங்களுக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் வகுத்துள்ள தமது பிரமாணமாயுள்ளது. நீங்கள் நான் இதை, “அதை செய்வதனால் ஒரு பாதகமுமில்லை” என்கிறீர்கள். பாதகமில்லையா? பாதகமுண்டு என்று வார்த்தை கூறுகின்றது. பரிசுத்த ஆவி உங்களுக்குள் இருந்தால், அது உங்களை நேரடியாக வார்த்தைக்கு வழி நடத்தும். அதற்கு ஒரு சாக்குபோக்கும் இருக்காது. தேவன் மாறுதல்களை உண்டாக்குவதோ, அல்லது சாக்கு போக்கு கூறுவதோ கிடையாது. அவர் குறியிடுகிறார். நீங்கள் அதை பின்பற்றுகின்றீர்கள். அவ்வளவுதான். ஒவ்வொருவரிடமும் அதுதான் அது. நீங்கள் அதே வழியில் வருகின்றீர்கள். பேதுரு, “நீங்கள் மனந்திரும்பி, ஒவ்வொருவரும் பாவமன்னிப்புக்கென்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஞானஸ்நானம் பெற்றுக் கொள்ளுங்கள், அப்பொழுது பரிசுத்த ஆவியின் வரத்தைப் பெறுவீர்கள்” என்றான். பாருங்கள்? அதுதான், அதை நீங்கள் அப்படியே பின்பற்ற வேண்டும். 67.உங்களை புண்படுத்த வேண்டுமென்று இதைக் கூறவில்லை. உங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன். ஆனால் சகோதரனே, சகோதரியே, கடைசி நாட்களில் உயிர்த்தெழுதலின்போது இந்த சந்ததியாரோடு நான் நின்று இந்த வார்த்தைக்கு கணக்கொப்புவிக்க வேண்டுமென்று அறிந்திருக்கிறேன் என்று நீங்கள் உணருகிறீர்களா? பரிசுத்த ஆவி இதை எனக்குக் காண்பித்து, நான் அங்கு பிரசங்கித்துக் கொண்டிருப்பதையும் காண்பித்தார். நீங்கள் எங்கு நிற்கப் போகின்றீர்கள்? இதிலிருந்து நீங்கள் எப்படி தப்பித்துக்கொள்ளப் போகின்றீர்கள்? நண்பனே, நீ ஒருக்காலும் தப்ப முடியாது. செய்யாதே... அதை நிறுத்தி விடு நீ செய்யும் தவறான செயல்கள் அனைத்தையும் நிறுத்தி விடு. நீ “என்னால் முடியாது'' என்கிறாய். அப்படியானால் ”முடியாது“ என்பதை உன்னிலிருந்து போக்கும் ஒன்றை உனக்குள் நீ இன்னும் பெறவில்லை. பரிசுத்த ஆவி வரும்போது, அவர் உலகத்தின் மேல் வெற்றி சிறக்க உனக்கு வல்லமையளிப்பார். நீ... அவர் என்ன கூறினார் என்பதைக் கவனி: ''நீ உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்புகூர்ந்தால், உன்னிடத்தில் தேவனின் அன்பு இல்லை'' (1யோவான்: 2:15). சாக்கு போக்குக்கு இடமேயில்லை. அவர் வெளிப்படையாக்கியிருக்கிறார். நாம் அந்த நிலைக்கு வர வேண்டியவர்களாயிருக்கிறோம். நான் பயங்கரமானவன் என்று நீங்கள் நினைப்பதாக நான் அறிகிறேன். இப்பொழுது நான் பயங்கரமாக நிறைந்திருக்கிறேன். பாருங்கள்? கவனியுங்கள். அது உண்மை. 68.சகோதரனே, சகோதரியே, அந்த நிலைக்கு வந்துவிடுங்கள். இங்குள்ள அறிவு நிறைந்த வேதாகமக் கல்லூரிகள் உங்களிடம், ''ஓ, அது பழங்காலத்து மனிதனின் கருத்து“ என்று கூற அனுமதியாதேயுங்கள். இது பழங்காலத்து மனிதனின் கருத்தானால், தேவனும் பழங்காலத்தவரே. தேவன் பழங்காலத்தவரானால், நானும் கூட பழங்காலத்தவனே. ஆமென்! அவரைப் போல் நான் இருக்க விரும்புகிறேன். ஏன்? அவருடைய ஆவி எனக்குள் இருந்துகொண்டு, பசிதாகமுற்று, தேவனுடைய வார்த்தைக்கு முரணாயிருக்கும் அனைத்தையும்... ஜனங்கள், “ஒரு மனிதன் பொழுதுபோக்குக்காக சிறிது சீட்டு விளையாடி, ஓரிரண்டு காசு வைத்து சூதாடினால் பரவாயில்லை” என்கின்றனர். ஆனால் தேவனோ அது தவறு என்கிறார். “ஓ, நீங்கள் நல்ல ஒரு சமுதாய மது அருந்தி, எப்பொழுதுதாவது ஒரு முறை குடிப்பதனால்...'' ஆனால் தேவனோ, ”அவனுக்கு ஐயோ!'' என்கிறார். ஓ, நீங்கள், ''சகோ. பிரான்ஹாமே, மற்ற பெண்கள் செய்வது போல், நானும் என் தலைமயிரைக் கத்தரித்துக் கொள்கிறேன்'' என்கிறீர்கள். மற்ற பெண்கள் என்ன செய்கிறார்கள் என்று எனக்குக் கவலையில்லை. அவர்கள் உங்களுக்கு உதாரணம் அல்ல, அவர்கள் உங்கள் முதலாளி அல்ல. உங்களுக்குள் பரிசுத்த ஆவி இருக்குமானால், ஜனங்கள் உங்களைக் குறித்து என்ன கூறினபோதிலும், அவருடைய புத்திமதிகளையே நீங்கள் பின்பற்றுவீர்கள். “நல்லது, சகோ. பிரான்ஹாமே, வெகு உஷ்ணமாயுள்ளது. எனவே நான் இந்த சிறு இன்னின்ன உடைகளை உடுக்க வேண்டியதாயுள்ளது''. அருமை சகோதரியே, நரகம் இதைக் காட்டிலும் அதிக உஷ்ணமாயிருக்கும் என்று உன்னிடம் கூற விரும்புகிறேன். வேண்டாம். அதை நினைவில் கொள். 69.பரிசுத்த ஆவி எப்பொழுதுமே உங்களை சத்தியத்துக்குள் வழி நடத்தும். அவருடைய வார்த்தையே சத்தியம். ''என் வசனமே சத்தியம். மனிதனுடைய வார்த்தை ஒவ்வொன்றும் பொய்யாகவும், என் வார்த்தை சத்தியமாகவும் இருப்பதாக''. சற்று யோசித்து பாருங்கள், அருவருப்பு. உங்களால் நினைத்துப் பார்க்க முடிகிறதா? ஒரு போதகருக்கு இதைக் கூறுவது அருவருப்பாயுள்ளது. நான் பல இடங்களில் கழிவறைகளுக்குச் சென்றிருக்கிறேன். அங்கு... நீங்கள் வெட்கி வெளியே வந்து விடுவீர்கள். அது அப்படித்தான். சுவர்களில் கேவலமான காரியங்கள். நான், ''ஜனங்கள் எவ்வாறு இத்தகைய மோசமான நிலையை அடையமுடியும்?“ என்று மனதில் எண்ணினேன். துர்நாற்றம்! அந்த இடங்களுக்கு நான் செல்லும்போது ''என்ன ஒரு துர்நாற்றம்'' என்று எண்ணுவதுண்டு. என் கைகளை கழுவும்போது, என் மூக்கை இப்படி பிடித்துக் கொள்வேன். நான் மறுபடியும் கதவு கைப்பிடியை பிடிக்கும்போது, அதில் இனசேர்க்கை வியாதியின் காரணமாக உண்டான கிருமிகள் இருக்குமா என்று அஞ்சுவதுண்டு . நான், ''ஓ!'' என்று நினைத்தேன். ஒருநாள் நான் ஒரு விமான நிலையத்துக்குள் நடந்து சென்றேன்... அது ரயில்நிலையம் என்று நினைக்கிறேன். நான் அதற்குள் நடந்து சென்றபோது, ''ஓ, இரக்கம்!'' என்று நினைத்தேன். ஏதோ ஒன்று என்னிடம், “அப்படித்தான் இவ்வுலகம் தேவனுக்கு துர்நாற்றமாய் அமைந்துள்ளது” என்றது. அது அருவருப்பு! 70.ஒரு பெண் இவ்விதமாக ஆண்களின் உடைகளை உடுத்து தெருவில் நடந்து செல்லும்போது, அப்படித்தான் அது தேவனுடைய பார்வையில் காணப்படுகிறது என்று எண்ணினேன். அது அருவருப்பு. தேவனுக்கு முன்பாக அது அசுத்தமும் துர்நாற்றமுமாய் உள்ளது. இருப்பினும், அவள் அழகாக உடுத்திக் கொண்டு ஞாயிறன்று ஆலயத்துக்குச் செல்கிறாள். அங்கு ஒரு மனிதன் குடித்து, ஏமாற்றி, பண ஆசை கொண்டவனாயிருக்கிறான். சிறிது கூடுதல் பணம் பெற அவன் தன் அண்டை வீட்டாரை ஏமாற்றுவது போன்ற செயல்களில் ஈடுபடுகிறான். சூதாடுகிறான், புகை பிடிக்கிறான், குடிக்கிறான். பொய் சொல்கிறான். அதன் பிறகு அவன் சபைக்குச் சென்று சாட்சி கூறுகிறான். அருவருப்பு, அசுத்தம்! அதுதான் மனித அறிவு கொண்ட சபை. நீங்கள், “நல்லது, நான் இந்த சபையைச் சேர்ந்தவன்” என்கிறீர்கள். ஆம், சபையிலுள்ள டீகன்களும், மற்றவர்களும், போதகரும் கூட, புகை பிடிப்பதற்கென்று நீங்கள் பதினைந்து நிமிடங்கள் அவர்களை வெளியே செல்ல அனுமதித்து, மீண்டும் சபை ஆராதனை நடத்துகிறீர்கள். எனக்கு சொல்லுங்கள். எல்லா அசுத்தமான காரியங்களினின்றும் பிரிந்து வாருங்கள். ''சரீரத்தை அசுசிப்படுத்தினால், அதை நான் நிர்மூலமாக்குவேன்'' என்று தேவன் கூறியுள்ளார். 71.இன்றைக்கு புற்றுநோய்... தொண்டை. நுரையீரல் புற்று நோயினால் மரிக்கும் தொண்ணூறு சதவிகிதம் பேருக்கு, இது புகை பிடிப்பதனால் ஏற்பட்ட ஒன்று. சரீரத்தை அசுசிப்படுத்தினால், அதை நான் நிர்மூலமாக்குவேன். ஆனால் அவர்கள் இப்படியாக நரகத்தை நோக்கிச் சென்று கொண்டிருப்பதை அறியாமல் இருக்கின்றனர். வேதாகமக் கல்லூரியில் நான்கு பட்டங்கள் பெற்று பிரசங்க பீடத்தில் நிற்கும் போதகரில் சிலரும் கூட, புகை பிடிக்கின்றவராயிருக்கிறனர். சகோதரனே, உன்னிடத்தில் ஒன்றை நான் கூறட்டும். அதிலிருந்து ஆண்களையும் பெண்களையும் வெளியே அழைக்கவே பரிசுத்த ஆவி அனுப்பப்பட்டது. பிரிந்து வாருங்கள்! ''சபை'' என்னும் சொல் 'பிரித்தெடுக்கப்படுதல்' என்று பொருள்படும். ''நீங்கள் அவர்கள் நடுவிலிருந்து புறப்பட்டுப் பிரிந்து போய், அசுத்தமானதைத் தொடாதிருங்கள் என்று கர்த்தர் சொல்லுகிறார். அப்பொழுது, நான் உங்களை ஏற்றுக்கொண்டு, உங்களுக்குப் பிதாவாயிருப்பேன். நீங்களும் எனக்குக் குமாரரும் குமாரத்திகளுமாயிருப்பீர்கள்'' (2கொரி:6:17-18). ஓ, என்னே! நான் நீசத்தனமாக இருக்கவேண்டுமென்பதற்காக இதை கூறவில்லை. நான் உத்தமமும் உண்மையுள்ளவனாயிருக்க விரும்புகிறேன். ஆம், ஐயா! ஓ, என்ன ஒரு பயங்கரமான காரியம்! 72.மனிதரே, ஸ்திரீகளே, இன்று நாம் எங்கிருக்கிறோம்? நாம் எங்கு அடைந்துள்ளோம்? நாம் நிறுத்திக் கொள்வோம். அன்றொரு இரவு, அறையிலுள்ள ஒரு சிறு பழைய இருக்கைக்கு முன்பாக (இப்பொழுது, நான் முடிக்கவேண்டும்), மூன்று நான்கு நாட்கள் ஜெபம் செய்த பிறகு, நான் ஒரு நிலையையடைந்தேன். நான் இங்குமங்கும் நடந்துகொண்டே, ''ஓ, தேவனே'' என்று மனதில் எண்ணினேன். நான் என்ன செய்ய வேண்டுமென்று அறியமுடியாத அப்படிப்பட்ட நிலையை அடைந்தவனாய், “தேவனே, நாங்கள் பாதையின் முடிவை அடைந்துள்ளோம். நான் அலட்சியம் செய்துவிட்டேன் என்று உணருகிறேன். நான் செல்வதற்கு அழைப்புகள் வந்தன, ஆனால் எனக்கு களைப்பாயிருந்த காரணத்தால் நான் செல்லவில்லை'' என்றேன். அப்பொழுது நான், ''என் ஆண்டவர் இருளில் தள்ளாடிச் செல்வதை என்னால் காணமுடிகிறது. அவர் மிகுந்த களைப்பாயிருந்த காரணத்தால், ஓரடி எடுத்து வைக்கவும் கூட அவரால் முடியவில்லை. ஆனால் மரித்துப் போன பையனை அந்த ஸ்திரீ கொண்டு வந்தபோது, அவர் அவளுக்காக நின்று, பாடையின் அருகில் சென்று தொட்டு, அவருக்குள் இருந்த அந்த சிறு பெலத்தைக் கொண்டு அந்த பையனை உயிரோடெழுப்பினார். நான் ஏன் களைப்படைந்துவிடுகிறேன் ஆண்டவரே, எனக்கு என்ன நேர்ந்தது?'' என்று எண்ணினேன். நான், ''எனக்கு வயதாகின்றது. என்னால் முடியாது'' என்று நினைக்கிறேன். 73.அங்கு மோசே (நான் ஆராதிக்கும் அதே தேவன்) நூற்றிருபது வயதுடையவனாய் நின்றுகொண்டு ஊழியம் செய்தான். காலேப் தன் தொண்ணூறாம் வயதில் கையில் பட்டயத்தை ஏந்தினவனாய், “யோசுவா இந்த பட்டயத்தை நாற்பது வருடங்களுக்கு முன்பு என் கைகளில் கொடுத்தான் (அப்பொழுது அவனுக்கு எண்பது வயது) அன்றிருந்தது போலவே இன்றும் நான் திடகாத்திரமுள்ளவனாய் இருக்கிறேன்'' என்றான். ஆமென்! நான், ''தேவனே, என் மேல் கிருபையாயிரும். ஓ, இங்கு பாரும். நான் எப்பொழுதுமே...“ என்றேன், நான் என் மனைவியின் கையைப் பிடித்துக்கொண்டு இந்த வேதாகமத்தின் மேலும் அவளுடைய வேதாகமத்தின் மேலும் வைத்து, ”தேவனே, நான் அதிக அலட்சியமாய் இருந்துவிட்டேன். பரிசுத்த ஆவியானவர் எனக்குள் இருந்துகொண்டு என்னைக் குற்றப்படுத்துகிறார். நான் அங்கு சிருஷ்டிக்கப்பட்ட அணில்களை நினைத்துப் பார்க்கிறேன். நான் ஹாட்டி ரைட்டையும் அவளுடைய மகன்களையும் நினைத்துப் பார்க்கிறேன். தேவன் என்ன செய்தார் என்பதையும், அவரால் சிருஷ்டிக்க முடியும் என்பதை காண்பித்ததையும் நினைத்துப் பார்க்கிறேன். அல்லேலூயா! அநேக ஆண்டுகளுக்கு முன்பே அவர் என்னிடம், “நான் உன்னை விட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை. உன் வாழ்நாள் பூராவும் எந்த மனிதனும் உனக்கு முன்னால் நிற்க முடியாது. நான் உன்னோடு கூட இருப்பேன். கையைப் பிடித்து என்ன வியாதி என்று அறிந்து கொள்வதிலிருந்து, அது நீ இருதயத்தின் இரகசியங்களை அறிந்துகொள்ளும் நிலையை அடையும். அதன் பிறகு அது படிப்படியாக உயரும், என்றார்” என்றேன். அதற்கு அடுத்த ஆண்டு, உலகம் முழுவதிலும் அது பிழையின்றி நிகழ்ந்தது. அதைக் காட்டிலும் மிகப்பெரிய இந்த ஊழியம் இதோ வந்துள்ளது. நான் தொடர்ந்து, ''தேவனே, நான் உன் கரத்தைப் பிடித்திருக்கிறேன். தேவனுடைய உதவியினாலும், தேவனுடைய கிருபையினாலும், நான் மறுபடியும் அலட்சியமாயிருக்க அனுமதிக்காதேயும். இங்குள்ள இந்த எழுப்புதல் கூட்டத்துக்கு நான் சென்று, இதுவரைக்கும் பிரசங்கிக்காத அளவுக்கு நான் பிரசங்கிக்கட்டும். முதலில் நான் என்னை தானே பரிசுத்தமாக்கிக் கொண்டு, ஜனங்களுக்கு வழியை உண்டாக்கட்டும். என் சொந்த பாவங்களும், என் அலட்சியமும், என் குறைகளும் இரத்தத்தின் கீழ் வைக்கப்பட்டு, நான் சென்று, “ஜனங்களே, என்னைப் பின்பற்றுங்கள் என்று சொல்லட்டும்” என்றேன். அது உண்மை. ஒரு மனிதன், ''அதை போய் செய்'' என்று சொல்வது எனக்கு விருப்பமில்லை. யாராகிலும் அதை செய்து காண்பித்து, மற்றவர்களுக்கும் வழி காண்பிப்பதைக் காணவே நான் விரும்புகிறேன். ஆம், ஐயா! 74.இங்கு சில நாட்களுக்கு முன்பு ஃபா எண்ணெய் கம்பெனியில் தீ பிடித்துக் கொண்டது. ஜெபர்ஸன்வில் தீயணைக்கும் படையினர் அழைக்கப்பட்டனர். என் நண்பர் ஒருவர் (மிகவும் நல்லவர்); இப்படிப்பட்ட பெரிய தீக்களை அணைத்து அவருக்கு பழக்கமில்லை. அவர் அங்கு மிங்கும் நடந்து, ''பையன்களே இங்கு சிறிது தண்ணீர் பீச்சுங்கள், அங்கு சிறிது தண்ணீர் பாய்ச்சுங்கள்'' என்று அவர்களுக்குக் கட்டளை கொடுத்துக் கொண்டிருந்தார். பிறகு க்ளார்க்ஸ்வில் தீயணைக்கும் படை “டிங், டிங், டிங், டிங்'' என்று மணி அடித்துக் கொண்டே வந்தது. அந்த படையின் தலைமை அதிகாரியும் அங்குமிங்கும் ஓடி, ''இங்கு சிறிது தண்ணீர் பிச்சுங்கள்'' அந்த ஜன்னலை உடையுங்கள். ”அங்கு சிறிது தண்ணீர் பிச்சுங்கள்'' என்றார். ஆனால் ஆற்றுக்கு அப்பாலுள்ள, நன்கு பயிற்சி பெற்ற தீயணைப்பவர் லூயிவில்லிலிருந்து வந்தனர். அந்த கொக்கியும் ஏணியும் நிற்கக் கூட இல்லை. அதற்குள் அதன் தலைமை அதிகாரி ஏணிப்படிகளின் அருகில் சென்றுவிட்டார். ஏணி மேலே உயர்த்தப்பட்டபோது, அவர் ஏறி மேல்படியை அடைந்துவிட்டார், அவர் உள்ளே நுழையும் முன்பு தமது கோடாரியால் ஜன்னலை உடைத்தெறிந்து, ''பையன்களே, என் பின்னால் வாருங்கள்'' என்றார். அவ்வளவுதான். சில நிமிடங்களில் தீ அணைக்கப்பட்டது. “இங்கு சிறிது தண்ணீர் பீச்சுங்கள், அங்கு சிறிது தண்ணீர் பீச்சுங்கள்'' என்று கட்டளையிட்டுவிட்டு அவர் சும்மா இருந்துவிடவில்லை. அது மனித அறிவு பெற்ற சில போதகர்களை எனக்கு ஞாபகப்படுத்துகிறது. வாருங்கள், போகலாம்! அது சத்தியமென்று நானறிவேன்! அதை நான் ருசித்து பார்த்திருக்கிறேன். பரிசுத்த ஆவி கூறுவது உண்மையே! தேவன் நல்லவர். இங்கும் அங்கும் முயற்சி செய்து கொண்டிருக்காதீர்கள். அவருக்குள் நாம் நடப்போம்! அவர் இங்கிருக்கிறார். அது உங்களுக்காகவே. தேவன் தமது வல்லமையை தமது சபைக்கு கொடுத்திருக்கிறார். இங்கு கொஞ்சம் பீச்சுதல், அங்கு கொஞ்சம் பீச்சுதல் அல்ல. அப்படி செய்தால், உங்களுக்கு ஒன்றுமே நடக்காது. முன்னேறிச் செல்லுங்கள். ஆமென்! வ்யூ! அவர்கள் மூலமாக நாம் இனி ஒருபோதும் காணமுடியாது. ஆமென்! நாம் என்ன செய்யப் போகிறோம்? 75.இங்கு அமர்ந்துள்ள ஒவ்வொருவரும் ஏதோ ஒன்றினால் நிறைக்கப்பட்டுள்ளனர். (இதன் பிறகு நான் முடிக்கப்போகிறேன். நான் முடித்தே ஆகவேண்டும்). நீங்கள் ஏதோ ஒன்றினால் நிறைக்கப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் ஏதோ ஒன்றினால் நிறையப்படாமல் இங்கு உட்கார்ந்திருக்க முடியாது. உங்களுக்குள் நீங்கள் ஜீவனைப் பெற்றிருக்கிறீர்கள். அந்த ஜீவன் உங்களை ஆளுகிறது. அந்த ஜீவன் ஒரு ஆவியினால் ஆளப்படுகிறது. நீங்கள் உலகத்தினால் நிறைந்தவர்களாய், உலகத்திலும் உலகத்திலுள்ளவைகளிலும் அன்பு கூருகிறவர்களாய் இருக்கலாம். தேவன் உங்கள் மேல் இரக்கமாயிருப்பாராக. நீங்கள் ஏதோ ஒரு சபையின் கோட்பாடுகளினால் நிறைந்தவர்களாயிருந்து, சிறு ஜெபங்களை ஏறெடுத்து, அது உங்களை... அல்லது மரித்துப்போன யாரோ ஒருவரிடம் உங்கள் ஜெபத்தை ஏறெடுத்து, அது உங்களை அல்லது ஏதோ ஒரு அடையாளத்தை உங்கள் உடலின் குறுக்கே போடுபவர்களாய் இருக்கலாம்; தேவன் உங்கள் மேல் இரக்கமாயிருப்பாராக. நீங்கள் மார்க்கத்தினால் நிறைந்தவர்களாய் இருக்கலாம். அது இன்னும் மோசமானது. அது உண்மை. அது உண்மை . கடைசி நாட்களில் அவர்கள் மிகவும் மத சார்பு கொண்டவர்களாய், தேவ பக்தியின் வேஷத்தை தரித்து அதன் பெலனை மறுதலிக்கிறவர்களாயிருப்பார்கள். இப்படிப்பட்டவர்களை நீ விட்டுவிலகு என்று வேதம் கூறுகிறது. நீங்கள் மார்க்கத்தினால் நிறைந்தவர்களாயிருந்தால், நீங்கள் பரிதபிக்கப்படத் தக்கவர்கள். வெறும் மார்க்கம், அவ்வளவுதான். நீங்கள் கோட்பாடுகளினால் நிறைந்தவர்களாயிருந்தால், நீங்கள் எதைக் குறித்து பேசுகிறீர்கள் என்பதை அறியாமலிருக்கிறீர்கள். நீங்கள் உலகத்தினால் நிறைந்தவர்களாயிருந்தால், நீங்கள் குருடராயிருக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறைந்தவர்களாயிருக்கலாம். ஆமென்! நீங்கள் அப்படி இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். அப்படி இல்லையென்றால், நீங்கள் நிறைக்கப்படுவீர்கள் என்று நம்புகிறேன். நீங்கள் பரிசுத்த ஆவியில் நிறைந்தவர்களாயிருந்தால், நீங்கள் என்ன பெற்றிருக்கிறீர்கள்? நீங்கள் வல்லமை பெற்றிருக்கிறீர்கள், அன்பு பெற்றிருக்கிறீர்கள், சமாதானம் பெற்றிருக்கிறீர்கள். ''என் சமாதானத்தையே உங்களுக்குக் கொடுக்கிறேன். உலகம் கொடுக்கிற பிரகாரம் நான் உங்களுக்குக் கொடுக்கிறதில்லை'' (யோவான்: 14:27) நீங்கள் சமாதானம் பெற்றிருக்கிறீர்கள், நீங்கள் முத்தரிக்கப்பட்டிருக்கிறீர்கள், உங்களுக்கு ஒரு அடையாளம் உண்டு. ஆமென்! உங்களுக்கு இளைப்பாறுதல் உண்டு, உங்களுக்கு சொல்லி முடியாததும் மகிமையால் நிறைந்ததுமான சந்தோஷம் உள்ளது. நீங்கள் நங்கூரமிடப்பட்டிருக்கிறீர்கள். ஓ, என்னே!பரிசுத்த ஆவி உள்ள போது நீங்கள் அப்படித்தான் இருக்கிறீர்கள். நீங்கள் பரிசுத்த ஆவியால் நிறைந்திருந்தால், நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குள் பிரவேசித்து, கடைசி நாளில் உயிர்த்தெழுதலுக்காக காத்திருப்பீர்கள். 76.நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் வரப் போகும் உலகத்தில், அவர் மகிமையிலும் மகத்துவத்திலும் வரப் போவதாக கூறியுள்ளார். சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவிக்கும். அவருக்குள் நித்திரையடைந்தோரின் அழிவுள்ள சரீரங்கள். அவருக்குள் நீங்கள் எப்படி நுழைகிறீர்கள்? ஒரே ஆவியினாலே நாமெல்லாரும் ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டிருக்கிறோம். அவருக்குள் நித்திரையடைந்தோரின் அழிவுள்ள சரீரங்கள் அவருடைய மகிமையின் சரீரத்துக்கு ஒப்பாக மறுரூபமடையும். அந்த மகிமையின் சரீரத்தில் அவர் எல்லாவற்றையும் தமக்கு கீழ்ப்படுத்திக் கொள்ள வல்லவராயிருக்கிறார். “பின்பு பரலோகத்திலிருந்து ஒரு சத்தம் உண்டாகக் கேட்டேன்; அது கர்த்தருக்குள் மரிக்கிறவர்கள் இது முதல் பாக்கியவான்கள் என்றெழுது; அவர்கள் தங்கள் பிரயாசங்களை விட்டொழிந்து இளைப்பாறுவார்கள்; அவர்களுடைய கிரியைகள் அவர்களோடே கூடப்போம்” என்று யோவான் கூறினான். (வெளி: 14:13). அதற்காகத்தான் அவர் பரிசுத்த ஆவியை அனுப்பினார். ஓ! இயேசு என்னுடையவர் என்னும் ஆசீர்வதிக்கப்பட்ட உறுதி. நான் அவரில் இருக்கிறேன்; அவர் என்னில் இருக்கிறார்; பிதா அவரிலும், அவர் பிதாவிலும், பிதா என்னிலும் நான் அவரிலும். ...இயேசு என்னுடையவர் ஓ, தெய்வீக மகிமையின் என்னே ஒரு முன் அனுபவம் நான் இரட்சிப்பின் சுதந்தரவாளி, தேவனால் கிரயத்துக்கு கொள்ளப்பட்டவன். அவருடைய ஆவியினால் பிறந்து, அவருடைய இரத்தத்தால் கழுவப்பட்டவன் ஆமென்! அதை நான் விற்றுப் போடமாட்டேன். ஓ, என்னே! மாணிக்கம், இரத்தினக் கற்கள், வெள்ளி, பொன் ஆகியவைகளினால் அவருடைய பொக்கிஷம் நிறைந்துள்ளது, சொல்லி முடியாத ஐசுவரியம் அவருக்குள்ளது நான் ராஜாவின் பிள்ளை, நான் ராஜாவின் பிள்ளை என் இரட்சகர் இயேசு என்னை ராஜாவின் பிள்ளையாக்கினார்! ஆமென்! ஆமென்! அதை நான் எதற்காகவும் மாற்றிக் கொள்ளமாட்டேன். அதை நான் எதற்காகவும் மாற்றிக் கொள்ளமாட்டேன். என்னிடம் இன்னும் இரண்டு மூன்று. இங்கு மற்றொரு வேதவாக்கியம். நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறையப்படும்போது (இவைகளை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்). நீங்கள் உலகத்துக்கு என்னவாயிருக்கிறீர்கள்? அந்நியராய் (தாமதமாகிவிட்டதென்று அறிவேன்). ஆனால் இதற்கு அதிக தாமதமாகிவிடவில்லை. அந்நியர். ஓ! நாம் இங்கு அந்நியரும் பரதேசிகளுமாயிருக்கிறோம். நாம் வரப்போகும் நகரத்தை நாடுகிறோம். அவருடைய விலையுயர்ந்த கற்களை வீட்டில் சேகரிக்க ஜீவக் கப்பல் விரைவில் வரும். 77.ஓஹையோ நதியில் தண்ணீர் தெறிக்கும் சத்தத்தை என்னால் கேட்க முடிகிறது. நான் ஏறக்குறைய இருபத்திரண்டு வயதுள்ள வாலிபப் பிரசங்கியாக அங்கு இந்த பாடலைப் பாடிக் கொண்டிருந்தபோது, நான் கேட்டேன். நான் மேலே நோக்கியபோது, ஒரு சத்தம் ''மேலே நோக்கிப் பார்!'' என்றது. அப்பொழுது அந்த பெரிய ஒளி இறங்கி வந்து என் மேலே தொங்கினது. அது, ''இயேசுவின் முதலாம் வருகைக்கு முன்னோடியாக யோவான் ஸ்நானன் அனுப்பப்பட்டது போல, உன் செய்தி கிறிஸ்துவின் இரண்டாம் வருகைக்கு முன்னோடியாகத் திகழும்'' என்றது. ஓ, அதை என்னால் எப்படி நம்பமுடியும்! ஆனால் அது நிகழ்ந்தது. இன்றிரவு எழுப்புதல் தீ உலகின் எல்லாவிடங்களிலும் எரிந்து கொண்டிருக்கிறது. கிரயத்தினால் கொள்ளப்பட்ட மகத்தான தேவனுடைய சபை அவ்விடத்திலிருந்து தன்னை மேலே உயர்த்தியுள்ளது. மகத்தான தெய்வீக சுகமளிக்கும் கூட்டங்கள், அற்புதங்கள், அடையாளங்கள் போன்றவை அவருடைய வருகையை முன்னறிவித்து வருகின்றன. 78.நீங்கள் அந்நியர்களாயிருக்கின்றீர்கள். நீங்கள் வினோதமான செயல்களைப் புரிகின்றீர்கள். அவை நீங்கள் முன்பு செய்தவைகளைக் காட்டிலும் வித்தியாசமான செயல்களாயுள்ளன. நீங்கள் முன்புபோல் நடந்து கொள்வதில்லை. ஜனங்கள்... பரிசுத்த ஆவி உங்கள் மேல் வந்து, நீங்கள் பரிசுத்த ஆவியினால் நிறையப்படும்போது, நீங்கள் உலகத்தின் காரியங்களை அசட்டை செய்கிறீர்கள். உங்களைச் சுற்றி நெருங்கி நிற்கிற காரியங்களை நீங்கள் அசட்டை செய்கிறீர்கள். அப்பொழுது நீங்கள் விசித்திரமாக நடந்து கொள்ளும் சிருஷ்டியாக, காண்பதற்கு அவலட்சணமான வாத்துக் குட்டியாக; கழுகு தன் கூட்டைக் கலைக்கும் போது என்னும் செய்தியில் நான் பிரசங்கித்தது போன்று, பெட்டைக் கோழியின் கூட்டில் பொறித்த கழுகுக் குஞ்சாக அவர்களுக்கு காணப்படுகிறீர்கள். நீங்கள் அவர்களுடைய வேடிக்கையாக தோற்றமளிக்கும் சிருஷ்டியாக காணப்படுகிறீர்கள். ஆனால், ஓ, என்னே, ராஜாவின் பெரும்பாதையில் நீங்கள் நடந்து செல்கிறீர்கள். ஆமென்! அது பரலோகத்துக்கு செல்லும் பெரும்பாதை. நான் ராஜாவின் பெரும்பாதையில் நடந்து செல்கிறேன். அவர்கள், அந்த உருளும் பரிசுத்தரைப் பாருங்கள், அந்த அவலட்சணமான வாத்துக் குட்டியை. அவர், “ஒரு உருளும் பரிசுத்த போதகர்'' என்கின்றனர். 79.புகழ் வாய்ந்த ஒரு மெதோடிஸ்டு போதகர் இன்று லூயிவில்லிலுள்ள ஒரு மனிதனிடம், ''எனக்கு சகோ. பில்லிக்கு உதவி செய்ய விருப்பம் தான். ஆனால் அது என்ன செய்துவிடும் தெரியுமா? என் கழுத்தை நீட்டும்படி செய்துவிடும்“ என்றாராம். நீங்கள் உங்கள் கழுத்தை நீட்ட வேண்டிய அவசியமில்லை. அவர் எனக்காக தமது ஜீவனையே வெளியே நீட்டி கொடுத்திருக்கிறார். ஆமென்! ராஜாவின் பெரும்பாதையில் நான் நடந்து சென்று கொண்டிருக்கிறேன். அவ்வளவுதான். ஓ, என்னே! அவருடைய ஆவியினால் நிறையப்பட்டு, அவருடைய ஆவியினால் பிறந்து, அவருடைய இரத்தத்தினால் கழுவப்பட்டிருக்கிறேன். அல்லேலூயா களிகூருகிறேன்! வேறொரு காரியம், ஏன்? உங்களை அப்படி செய்யும்படி செய்வது எது? நீங்கள் இன்னும் மானிடரே. உங்களை அப்படி செய்யும்படி செய்வது எது? பரத்திலிருந்து இறங்கி வந்துள்ள ஆவி. அது உங்களுக்குள் இருக்கும் தேவன். 80.நான் ரோமாபுரிக்கு சென்றிருந்தபோது, அங்கிருந்த எல்லோருக்கும் ரோமாபுரி ஆவி இருப்பதை கவனித்தேன். நான் கிரேக்க நாட்டுக்கு சென்றிருந்தபோது, அங்கிருந்த அனைவரும் கிரேக்க ஆவியைக் கொண்டிருந்தனர். நான் இங்கிலாந்துக்கு சென்றிருந்தபோது, அங்கிருந்தவர் இங்கிலாந்து ஆவியைப் பெற்றிருந்தனர். நீங்கள் இங்குள்ள வெவ்வேறு இடங்களுக்கு செல்லும்போது அமெரிக்க ஆவியைக் காண்கிறீர்கள். அது மிகவும் பயங்கரமானது. நான் ரோமாபுரியிலுள்ள சான் ஆஞ்சலோவின் கல்லறைகளுக்குச் சென்றிருந்தபோது, அங்கு, ''அமெரிக்க பெண்களே, மரித்தோரை கெளரவிக்கும் வகையில், தயவுகூர்ந்து ஆடைகளை அணிந்து வாருங்கள்'' என்று எழுதி தொங்கவிடப்பட்டிருந்தது. அமெரிக்க ஆவி. அவர்கள் குறைவான ஆடைகளை அணிந்து விமானத்தை விட்டு இறங்குவதையும், எல்லோரும் அவர்களையே உற்று நோக்குவதையும் பாருங்கள். இதோ குமாரி அமெரிக்கா வருகிறாள். அது அமெரிக்க ஆவி. அவள் எந்த நாட்டைச் சேர்ந்தவள் என்று நீங்கள் சொல்லிவிடலாம். அவள் குறைவான உடை உடுத்தி ஒழுகும் மூக்குடைய 'பூடுல்' நாயை கையில் பிடித்தக் கொண்டு வருகிறாள். ஓ, ஆமாம்! அவள்தான் குமாரி அமெரிக்கா. அவள் கர்வத்துடன் இப்படி நடந்து வருகிறாள். ஏன்? அவளுக்கு அமெரிக்க ஆவி உள்ளது! ஆனால் இயேசு கூறினார். அவர் அந்நாளில் இதற்கு விரோதமாக சாட்சியுரைத்தார். அவர், “நீங்கள் தாழ்விலிருந்துண்டானவர்கள், நான் உயர்விலிருந்துண்டானவன்'' என்றார். (யோவான்: 8:23). நீங்கள் கிறிஸ்துவின் ஆவியை உங்களுக்குள் பெற்றிருந்தால், நீங்கள் உயர்விலிருந்துண்டானவர்கள். அப்பொழுது நீங்கள் இங்கு அந்நியராகிவிடுகிறீர்கள். நீங்கள் எந்த இடத்திலிருந்து வருகிறீர்களோ அந்த இடத்தின் தன்மையை உடையவர்களாயிருக்கிறீர்கள்; அதைத்தான் நான் கூற முயல்கிறேன். 81.ரோமாபுரியைச் சேர்ந்த ஒருவன் இங்கு வந்தால், அவன் தலையை சொறிகிறான். ஜெர்மானிய தேசத்தான் ஒருவன் இங்கு வந்தால், அல்லது அமெரிக்கன் ஒருவன் அங்கு சென்றால் ஏன்? நீங்கள் எந்த நாட்டைச் சேர்ந்தவர்களோ, அந்த நாட்டின் ஆவியை உடையவர்களாயிருக்கிறீர்கள். அதுதான் நம்மை உலகத்தினின்று அவ்வளவு வித்தியாசமுள்ளவர்களாக செய்கிறது. நீங்கள் உயர்விலிருந்துண்டானவர்கள். நீங்கள் வேறொரு ராஜ்யத்தின் குடிமக்கள். அதை நீங்கள் விசுவாசிக்கிறீர்களா? அதைத்தான் பரிசுத்த ஆவி செய்கிறது. உன்னை தேவனுடைய ராஜ்யத்தின் குடிமகனாகச் செய்கிறது. நீங்கள் தேவனுடைய ராஜ்யத்தின் குடிமக்களாக இருந்தால், அது உங்களை எவ்வாறு நடந்து கொள்ளும்படி செய்கிறது? தேவன் தமது ராஜ்யத்தில் என்ன செய்கிறாரோ, அது போன்று. தேவன் தமது ராஜ்யத்தில் என்ன செய்கிறார். அதன் பரிசுத்தம், நீதி, சிந்தனையின் தூய்மை, மனதின் தூய்மை, வல்லமை, அன்பு, இழந்து போனவர்களிடம் செல்லுதல், வியாதியஸ்தர்களைச் சுகப்படுத்துதல், அற்புதங்களைச் செய்தல், பெரிய காரியங்களைச் செய்தல். அப்பொழுது நீங்கள் உலகத்துக்கு பைத்தியக்காரராய் காணப்படுகிறீர்கள். அவர்கள், “அவர்களுக்கு மூளைக் கோளாறு ஏற்பட்டுவிட்டது'' என்கின்றனர். பாருங்கள்? ஆனால் நீங்களோ தேவனுடைய ராஜ்யத்தின் குடிமகன். 82.இன்னுமொரு வேதவாக்கியம், நீங்கள் குறித்துக் கொள்ள விரும்பினால், யோவான் 12:24. அதை நான் வேகமாக எடுத்துரைக்கிறேன். ''கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால் தனித்திருக்கும், செத்ததேயாகில் மிகுந்த பலனைக் கொடுக்கும்'' என்றார் இயேசு. இப்பொழுது கவனியுங்கள். முடிக்கும் தருணத்தில் ஒரு ஆலோசனை, இதை ஞாபகம் கொள்ளுங்கள், இது உங்களுக்கு மிகவும் அவசியமானது. நீங்கள் இப்பொழுது பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளவேண்டும். அது முற்றிலும் அவசியமானதும், கட்டாயமானதும் கூட. நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெறாவிட்டால், உயிர்த்தெழுதலில் வரமுடியாது. இப்பொழுது கவனியுங்கள். தேவன் தமது விதிகளை மீற முடியாது. அது நமக்குத் தெரியும். அவர் தமது விதிகளை பின்பற்றுகிறார். இயேசு இங்கு கூறினதுபோல், ஒரு கோதுமை மணியை எடுத்துக் கொள்வோம். வேதத்தில் எந்த விதையுமே - கோதுமை, பார்லி, சோளம் எதுவுமே - மணியென்று அழைக்கப்படுகிறது. கோதுமை மணி நிலத்தில் விழும்போது... இப்பொழுது அங்கு... இது நிகழ்கிறதென்று நம்மெல்லோருக்குமே தெரியும். ஒரு கோதுமை மணி மிகவும் பரிபூரணமாக காணப்படக் கூடும். அதை நீங்கள் நிலத்தில் விதைக்கும்போது, அந்த கோதுமை மணிக்கு... அதற்கு நிரந்தரமான ஜீவன் உண்டு. அது இன்றைக்கு நிலத்தடியில் சென்று, தன்னை ஒரு தண்டில் மறுபடியும் உற்பத்தி செய்துகொண்டு, கீழே சென்று, மேலே வந்து, கீழே மறுபடியும் செல்வதாயிருக்கும். அதற்கு நிரந்தர ஜீவன் உண்டு. ஆனால் அந்த கோதுமை மணிக்கு ஜீவன் இல்லாமற்போனால், அது காண்பதற்கு எவ்வளவு அழகாக இருந்தாலும், அது ஒருக்காலும் மேலே எழும்பி வராது. அது நிலத்தடியில் சென்று அழுகிப் போகும். அவ்வளவுதான். அதன் ஒருபாகம் (பொருட்கள்) நிலத்தில் உரமாக பயன்படும். ஆனால் அது மறுபடியும் ஜீவிக்கும் என்பதைப் பொறுத்த வரையில், அதில் நிரந்தர ஜீவன் இருந்தாலொழிய அது மறுபடியும் ஜீவிக்க முடியாது. அது எவருக்கும் தெரியும். உங்களால் ஒன்றுமே செய்யமுடியாது. 83.ஒரே போல் காணப்படும் இருவர் இருக்கலாம். அவர்களில் ஒருவன் நல்லவனாயிருக்கலாம், நற்கிரியைகளைச் செய்யலாம். ஆனால் அவனுக்குள் நித்திய ஜீவன் இருந்தாலொழிய, அவன் உயிர்த்தெழுதலின் போது எழுந்திருக்க முடியாது. அவனால் முடியாது. ஏனெனில் அவன் எழுந்திருக்க அங்கு ஒன்றுமில்லை. அவனை மேலே கொண்டு வர அங்கு ஒன்றுமில்லை; அங்கு ஜீவன் இல்லை. எனவே என் அருமை சகோதரனே, அருமை சகோதரியே, பாருங்கள். ஒருவன் மறுபடியும் பிறவாவிட்டால், இந்த ராஜ்யத்தில் பிரவேசிக்க முடியாது. அவனால் முடியாது. அவனால் முடியாது. “இந்த கோதுமை மணியானது நிலத்தில் விழுந்து சாகாவிட்டால்...'' அவர் தம்மைக் குறித்து இங்கு பேசுகிறார். அவருக்கு நிரந்தரமான (perpetual) ஜீவன் இல்லை . அவருக்கு நித்திய (Eternal) ஜீவன் இருந்தது. நீங்களும் அதேவிதமான ஜீவனைப் பெற வேண்டுமென்று கருதி, அந்த ஜீவனை அவர் உங்களுக்காக கொடுத்தார். உங்களுக்கு மானிட ஜீவன் மாத்திரம் இருக்குமானால், நீங்கள் இவ்வுலகில் வாழ்ந்து இச்சிக்க அது போதுமானதாயிருக்கும், ''சுக போகமாய் வாழ்கிறவள் உயிரோடே செத்தவள்'' (1தீமோ: 5:6). உன்னால் உயிரோடெழுந்திருக்க முடியாது. நீ ஒருக்கால் பள்ளிக் கூடத்திலேயே மிகவும் பெயர் பெற்றவளாக இருக்கலாம். உன் சங்கத்தில் சீட்டு விளையாடுவதில் நீ மிகவும் பெயர் போனவளாக இருக்கலாம். தேசத்திலே நீ மிகவும் சிறந்த உடை உடுத்தும் பெண்ணாக இருக்கலாம். நீ அழகில் சிறந்தவளாக இருக்கலாம். நீ சிறந்த தேக அமைப்பு கொண்டவளாக இருக்கலாம், உன் கணவனுக்கு நீ விக்கிரகமாக இருக்கலாம். இவையனைத்துமாக நீ இருக்கலாம். அதெல்லாம் நல்லதுதான். ஆனால் சகோதரியே, உனக்குள் பரிசுத்த ஆவியை நீ பெறாமல் இருந்தால் - அதுவே நித்திய ஜீவன் - இந்த பாதையின் முடிவில் நீ முடிந்துவிடுவாய். காண்பதற்கு நீ எவ்வாறு இருந்தாலும், இவைகளெல்லாம் எப்படியிருந்தாலும், நீ புகழ் வாய்ந்தவளாக அல்லது பெயர் கெட்டவளாக இருந்தாலும், நீ அழகாக அல்லது அவலட்சணமாக இருந்தாலும், எனக்கு அதைக் குறித்து கவலையில்லை. உனக்கு நித்திய ஜீவன் இருக்குமானால், நீ என்றென்றைக்கும் ஜீவிப்பாய். 84.சந்திரனும் நட்சத்திங்களும் போய் விட்ட பிறகு, பூமியானது மலைகளில் கண்ணீர் விட்டு அழுத பிறகு, வனாந்தரங்களும் மற்றவைகளும் இல்லாமல் போன பிறகு, இரவில் குடிபோதைக் கொண்டு தள்ளாடி வீட்டுக்கு வரும் மனிதனைப் போல் உலகம் தள்ளாடும்போது, நட்சத்திரங்கள் ஒளியைக் கொடுக்க மறுத்து வானத்திலிருந்து விழும்போது, சந்திரன் இரத்தமாக மாறி, சூரியன் வெட்கத்தால் சிவந்து அதன் முகத்தை மறைத்துக் கொள்ளும்போது, அவர்கள் மனுஷகுமாரன் வருவதைக் காணும்போது, நீங்கள் கல்லறையிலிருந்து வெளி வந்து இயேசு கிறிஸ்துவின் நீதினால் பிரகாசித்து, ஒரு அழகான வாலிபப் பெண் தன் துணைவரைப் பெற்றுக் கொள்வது போல் அவரைப் பெற்றுக்கொண்டு, என்றென்றைக்கும் நித்திய காலமாக வாழ்வீர்கள். அதற்காகத்தான் பரிசுத்த ஆவி அருளப்பட்டது. 85.உங்களுக்கு சிறிதளவு இழுப்பு ஏற்படுவதை நீங்கள் உணர்ந்தாலும், அதை புறக்கணித்துவிடாதிருங்கள். பரிசுத்தஆவி என்பது என்ன? தேவன் உங்களுக்குள் இருத்தல். எதற்காக? தமது ஜனங்களின் மத்தியில் தமது கிரியையை தொடர்ந்து செய்ய, தமது சபையை ஒன்றாக இணைக்க, இந்த நாளில் தமது சபையை லூத்தரன், மெதோடிஸ்டு, பெந்தெகொஸ்தே சபைகளுக்கு அப்பாற்பட்ட ஒரு நிலைக்கு - புத்திர சுவிகாரத்துக்கும் எடுத்துக் கொள்ளப்படுதலின் கிருபைக்கும் - கொண்டு வந்து, ஆவியானவர் இந்த சபையில் அசைவாடும்போது, அது எழும்பும். அது இந்த ஆவியைத் தொட்ட மீட்கப்பட்ட அனைவரையும் உயிரோடு கொண்டு வரும். நீதிமானாக்கப்படுதலினால் பெற்ற ஒளி அனைத்திலும் நின்ற அந்த லூத்தரன்கள்; பரிசுத்தமாக்கப்படுதலின் மூலம் கிடைக்கப் பெற்ற ஒளி அவர்களைத் தாக்கியதால் தரையில் விழுந்த அந்த மெதோடிஸ்டுகள் - அவர்கள் முகத்தில் தண்ணீர் தெளிக்க வேண்டியதாயிற்று. தெருக்களில் அங்கும் இங்கும் நடந்து, ''பிதற்றல்காரர்கள்'', 'வாத்து மொழி பேசுபவர்கள்' என்றெல்லாம் அழைக்கப்பட்டு பரிகாசம் செய்யப்பட்ட அந்த பெந்தெகொஸ்தேயினர்; இவர்கள் அனைவரும், இந்த வேதாகமம் இங்கு வைக்கப்பட்டுள்ளது எவ்வளவு நிச்சயமோ, அவ்வளவு நிச்சயமாக அந்த நாளில் தேவனுடைய பார்வையில் நீதியுள்ளவர்களாய் நிற்பார்கள். நான் ஊழியக்காரன் என்று நீங்கள் விசுவாசித்தால் (நீங்கள் என்னை தீர்க்கதரிசியென்று அழைக்கிறீர்கள், என்னை நான் அப்படி நினைத்துக் கொள்வதில்லை, நீங்கள் கவனியுங்கள்); நான் கர்த்தருடைய நாமத்தினால் இதை உங்களிடம் உரைக்கிறேன்: கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களை தேவன் உயிர்த்தெழுதலின் போது அவரோடு கொண்டு வருவார்; கிறிஸ்துவுக்குள் இருப்பவர்களை மாத்திரம். 86.ஜனங்களே, நாம் எப்படி கிறிஸ்துவுக்குள் நுழைவது? ஒரு கோட்பாட்டினால் நாம் இணைக்கப்பட்டதன் மூலமா? இல்லை. ஒரு கை குலுக்குதலின் மூலம் நாம் உள்ளே இழுக்கப்படுகிறோமா? இல்லை. ஒரு தண்ணீரினால் நாம் ஞானஸ்நானம் பண்ணப்பட்டதன் மூலமா? இல்லை. அல்லது ஒரு ஸ்தாபனத்தினாலே நாமெல்லாரும் ஸ்தாபனத்துக்குட் படுத்தப்பட்டிருக்கிறோமா? இல்லை. ஆனால் (1கொரி. 12:13). ஒரே ஆவி யினாலே (பரிசுத்த ஆவியினாலே, தேவனுடைய ஆவியினாலே), நாமெல்லாரும் (மெதோடிஸ்டு, பாப்டிஸ்டு, லூத்தரன், பிரஸ்பிடேரியன்). அவர் ஒளியிலிருக்கிறது போல நாமும் ஒளியிலே நடந்தால் ஒருவரோடொருவர் ஐக்கியப்பட்டிருப்போம்; அவருடைய குமாரனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தம் சகல பாவங்களையும் நீக்கி, நம்மைச் சுத்திகரிக்கும் (1யோவான்: 1:7). “ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டு, எல்லாரும் அவருடைய கிருபையில் பங்குள்ளவர்களாகிறோம்.'' 87.நீங்கள் நியாயந்தீர்க்கப்படுவதில்லை. ''என் வசனத்தைக் கேட்டு என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு (பரிசுத்த ஆவி அவருடைய உயிர்த்தெழுதலைக் குறித்து சாட்சி கொடுக்கும்போது; பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ளாமல் ஒருவனும் விசுவாசிக்க முடியாது) நித்திய ஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத் தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான்'' என்ன? நீங்கள் நியாயத்தீர்ப்புக்குச் செல்வதில்லை. நீங்கள் வெள்ளை சிங்காசனத்துக்கு முன்பாக நியாயத்தீர்ப்புக்காக நிற்பதில்லை. உங்கள் நியாயத்தீர்ப்பை நீங்கள் இங்கே அடைந்துவிடுகிறீர்கள். நீங்கள் நான் ஒன்றுக்கும் உதவாதவன், “என் படிப்பு ஒன்றுக்கும் உதவாது. கர்த்தாவே, எனக்குள் வாரும். என்னை எடுத்து என்னை வழி நடத்தும் ஆண்டவரே. இந்த பைத்தியக்கார உலகம் என்ன கூறினாலும் எனக்குக் கவலையில்லை. ஆண்டவரே, உமது ஆவியினால் என்னை நடத்தும்'' என்று சொன்ன போதே நியாயத்தீர்ப்பைக் கடந்துவிட்டீர்கள். அப்பொழுதே நீங்கள் நியாயந்தீர்க்கப்பட்டுவிட்டீர்கள். உங்களை கிறிஸ்துவுக்கென முட்டாளாக நியாயந்தீர்த்துக் கொள்ளுங்கள். அப்பொழுது அந்த நாளில் அவருடைய நீதியில் நாம் அவருடைய சாயலைப் பெற்று என்றென்றைக்கும் மரிக்காமல் இருப்போம். 88.ஒரே ஒரு வழியுண்டு. எப்படி? ''நாம் எல்லாரும் ஒரே ஆவியினாலே ஒரே சரீரத்திற்குள்ளாக ஞானஸ்நானம் பண்ணப்பட்டோம்.'' நீங்கள் அந்த சரீரத்தில் இருக்கும்போது, அந்த சரீரம் ஏற்கனவே நியாயந் தீர்க்கப்பட்டுவிட்டது; நீங்கள் அவரை உங்கள் பாவங்களை நிவர்த்தி செய்யும் கிருபாதார பலியாக ஏற்றுக் கொண்டுவிட்டீர்கள். நீங்கள், ''சகோ. பிரான்ஹாமே, நான் அதை செய்திருக்கிறேன்'' என்கிறீர்கள். பரிசுத்த ஆவி மறுபடியும் வந்து ஒரு அடையாளமாக உங்களுக்கு முத்திரையை அளித்திருக்கும்போது, அந்த ஆவி உங்களை கிறிஸ்துவின் சரீரத்திற்குள் கொண்டு வந்துவிடுகிறது. நீங்கள் மற்ற பக்கம் திரும்பி, கிறிஸ்து இயேசுவுக்குள் புது சிருஷ்டியாகிவிடுகின்றீர்கள். நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குள் பிரவேசித்துவிடுகின்றீர்கள். பழையவைகள் ஒழிந்து போயின. நீங்கள் கிறிஸ்துவுக்குள் புதிதாகிவிடுகின்றீர்கள். ஓ, என் கிறிஸ்தவ சகோதரனே, சகோதரியே, இந்த எழுப்புதல் உங்களைக் கடந்து செல்ல விட்டுவிடாதிருங்கள் என்று உங்களுக்கு அறிவுறுத்த விரும்புகிறேன். நீங்கள் பரிசுத்த ஆவியைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அது என்ன? தேவனுடைய ஆவி. அது எதற்காக அருளப்பட்டது? உங்களை வழிநடத்த, உங்களுக்கு வழிகாட்ட, உங்களை நிறைக்க, உங்களைப் பரிசுத்தப்படுத்த, உங்களை வெளியே அழைத்து சபையில் சேர்க்க, சபை என்றால் என்ன! 'சபை' என்னும் வார்த்தைக்கு அர்த்தம் என்ன? 'வெளியே அழைக்கப்படுதல்', 'பிரித்தெடுக்கப்படுதல்' (ஓ, இப்பொழுதே இதிலிருந்து ஒரு பிரசங்கத்தை நான் துவங்க முடியும்), 'வெளியே அழைக்கப்படுதல்', 'பிரித்தெடுக்கப்படுதல்' அந்நியர், உலகத்துக்கு அப்பாற்பட்டவர்கள், அந்நியரும் பரதேசிகளும், நாம் வாழ விரும்புவதற்கு பூமியில் நகரம் இல்லை என்று அறிக்கையிடுதல். ஓ, என்னே! 89.ஆபிரகாமும், ஈசாக்கும், யாக்கோபும் சஞ்சாரிகளாய் திரிந்து, தேசத்தில் கூடாரத்தில் வாழ்ந்தது போல. அவர்கள் அந்நியரும் பரதேசிகளுமென்று அறிக்கையிட்டனர். சுதந்தரவாளியின் சந்ததியார், அங்கு சுதந்தரவாளி; தகப்பன் சுதந்தரவாளி. நாம்; அவர்களுடைய சந்தியார். அவர்கள் தேவன் கட்டின பரம தேசத்தை எதிர்நோக்கியிருந்தார்கள். ஆமென்! அவர்கள் நாடிக் கொண்டிருந்தார்கள். இன்றைக்கு அவர்களுடைய சந்ததியார் இன்னும் அந்த பரம தேசத்தை எதிர்நோக்கியுள்ளனர். இந்த உலகத்தோடு நான் இணங்க விரும்பவில்லை. இந்த உலகத்தோடு நான் எவ்வித தொடர்பும் கொள்ள விரும்பவில்லை. நான் நான்கு பக்கமும் சதுரமாயுள்ள நகரத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். நித்திய ஜீவன் உள்ள நகரத்தை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். அங்கு சூரியன் அஸ்தமிப்பதில்லை, அங்கு வயதாவதில்லை, அங்கு கதவு கைப்பிடியில் மரணத்தின் காரணத்தால் துக்கம் அனுசரிக்கும் அடையாளம் எதுவும் காணப்படாது. மலைப்பகுதியில் ஒரு கல்லறையும் கூட இருக்காது. தேவன் கட்டின அந்த நகரத்தை நான் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன். 90.அதை கண்டுபிடிக்க ஒரே ஒரு வழி உண்டு. ஒரு கல் கையால் பெயர்க்கப்படாமல் மலையிலிருந்து பெயர்ந்து உலகத்துக்கு உருண்டு வந்து அதை நொறுக்கி போட்டது. அப்பொழுது அது போராடிக்கிற களத்திலுள்ள பதரைப் போலாயிற்று. கிறிஸ்து இயேசுவாகிய அந்த கல், உலகத்துக்கு இடறுதற்கான கல்லும் தவறுதற்கான கன்மலையும், சபைக்கு பரிகாசமான கல்லும், இடறலாகவும் அமைந்துள்ளது. ஆனால் விசுவாசிக்கோ அது விலையுயர்ந்த காந்தக் கல்லாகவும், உறுதிதரும் கல்லாகவும், இளைப்பாறும் கல்லாகவும் (ஒ, என்னே!), இளைப்பாறுதல் நான் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குள் பிரவேசித்துவிட்டேன் என்று அறிவேன். என் ஆத்துமா இளைப்பாறிக் கொண்டிருக்கிறது. “வருத்தப்பட்டு பாரஞ்சுமக்கிறவர்களே, நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள், நான் உங்கள் ஆத்துமாக்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்'', ''அது விரோதமாகப் பேசப்படும் அடையாளமாயிருக்கும்'' என்று தீர்க்கதரிசி மரியாளிடம் கூறினான் (லூக்கா: 2:34). அது ஒரு அடையாளமாயிருக்கும். நிச்சயமாக அது அப்படியிருக்கும். ஆனால் அது உறுதி அளிக்கும் ஒன்றாகவும், அன்பாகவும், திருப்தி அளிக்கக் கூடியதாகவும் இருக்கும். நீங்கள் மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குள் பிரவேசித்துவிட்டீர்கள் என்று நீங்கள் அறிந்துகொள்வதற்கு அது ஏதுவாயிருக்கும். 91.என் சகோதரனே, என் சகோதரியே, உங்கள் சகோதரன் என்னும் முறையில், கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்னும் முறையில், என் முழு இருதயத்தோடும் உங்களைக் கெஞ்சி கேட்டுக் கொள்கிறேன். இது உங்கள் தலையின் மேல் தப்பிச் செல்லவோ, உங்கள் பக்கமாக சென்றுவிடவோ, அல்லது உங்கள் அடியில் செல்லவோ விட்டுவிட வேண்டாம். இதை உங்கள் இருதயத்தில் ஏற்றுக் கொள்ளுங்கள். அப்பொழுது நீங்கள் உலகில் மகிழ்ச்சியுள்ள நபராயிருப்பீர்கள். நீங்கள் பத்து லட்சம் டாலர்கள் பெறுவீர்களென்று நான் வாக்களிக்கமாட்டேன். இல்லை, ஐயா! சகோ. லியோ, தற்பொழுது இப்படிப்பட்டவை அதிகமாக வாக்களிப்பட்டு வருகின்றன கோடிக்கணக்கான டாலர்கள் பெற்றுக் கொள்ளுதல் போன்றவை. வெவ்வேறு மக்கள், “நீங்கள் கிறிஸ்தவர்களாக மாறினால், பத்து லட்சம் டாலர்கள் பெறுவீர்கள், நீங்கள் பணக்காரராகிவிடுவீர்கள்'' என்று கூறுகின்றனர். நான் அப்படிப்பட்ட ஒன்றையும் வாக்களிக்க மாட்டேன். இதை நான் உங்களுக்கு வாக்களிக்கிறேன். நான் உங்களுக்கு வாக்களிக்கக் கூடிய ஒன்றே ஒன்று இரட்சிப்பே. அவருடைய கிருபை ஒவ்வொரு சோதனைக்கும் போதுமானதாயுள்ளது. 92.பெந்தெகொஸ்தே நாளிலிருந்த மக்கள், தங்களுக்கிருந்ததை கூட வேண்டாமென்று தள்ளிவிட்டார்கள். ஆனால் இன்றைக்கோ கோடீசுவரராவதைக் குறித்து பேசுகின்றனர். சகோதரி ஆஞ்சி, அவர்களுக்கிருந்தது கூட அவர்களுக்கு வேண்டாம். என்றாவது ஒரு நாள் நீயும் கொடியும் (அவள் எங்கே?) வீடு திரும்பும் வாரம் என்னும் பாடலைப் பாடுவதைக் கேட்க விரும்புகிறேன். அன்று முதல் அநேகர் எல்லையைக் கடந்து சென்றுவிட்டனர். ஓ, என்னே! அவர்கள் பெரிய காரியங்களைக் கேட்கவில்லை. அவர்கள் பணத்தைக் கேட்கவில்லை. பேதுரு, “வெள்ளியும் பொன்னும் என்னிடத்திலில்லை, என்னிடத்திலுள்ளதை உனக்குத் தருகிறேன்'' என்றான். நண்பர்களே, இன்றிரவு இதைக் கூறுகிறேன். கிறிஸ்துவினாலும் அவருடைய, உயிர்த்தெழுதலினாலும், என்னிடத்திலுள்ள சந்தோஷம், அன்பு, உறுதி ஆகியவைகளை உங்களுக்குத் தருகிறேன். நீங்கள் தேவனுடைய பிள்ளை என்னும் முறையில் அவைகளை உங்களுக்குத் தருகிறேன். தேவன் உங்களை அழைப்பாரானால், நீங்கள் சிலுவையண்டையில் வந்து அங்கேயே காத்திருங்கள், அங்கிருந்து எழுந்திருக்க வேண்டாம். நாளை இரவு நீங்கள் வரும்போது, அங்கு சென்று அது முடியும் வரைக்கும் அங்கேயே தங்கியிருங்கள். அல்லது மேலே வாருங்கள்; நாங்கள் உங்கள் மேல் கைகளை வைத்து ஜெபிக்கப் போகிறோம்... அது தான் வேதத்தில் கூறப்பட்டுள்ள முறை - பரிசுத்த ஆவிக்காக கைகளை அவர்கள் மேல் வைத்து ஜெபித்தல். அதன் பிறகு நீங்கள் வீட்டுக்குச் செல்லுங்கள். இங்கு நீங்கள் தங்க எண்ணினால் இரவு முழுவதும் தங்குங்கள். அடுத்த நாள் தங்குங்கள், அதற்கடுத்த நாள் தங்குங்கள், விடுமுறை நாட்கள் முழுவதும் தங்குங்கள், வருடத்தின் முதலாம் நாள் வரைக்கும் தங்குங்கள். அதைப் பெற்றுக் கொள்ளும் வரைக்கும் தங்குங்கள். நாளை இரவைக் குறித்து நாங்கள் என்ன அறிவுரை கூறினாலும், என்ன வரவேண்டுமென்று நாங்கள் வேதத்திலிருந்து காண்பிக்கிறோமோ, அது வரும். அது வரும்போது, வேதனைப்படும் போதிய பிசாசுகள் இருக்காது. நீங்கள் மரணத்தை விட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறீர்கள் என்பதை அறிந்திருக்கிறீர்கள். நீங்கள் கிறிஸ்து இயேசுவில் புது சிருஷ்டியாயிருக்கிறீர்கள். பரலோகத்தின் மகிழ்ச்சி மணிகள் ஒலிக்கும். 93.சகோ. ஒத்தல், நான் உங்களுக்கு சொல்லுகிறேன். அது உங்களில் அக்கினியை மூட்டும். இங்கு என் பழைய சகோதரர் ஒருவர் உட்கார்ந்து கொண்டிருக்கிறார். அவர் தன் இடுப்பில் துப்பாக்கியை சொருகிக் கொண்டு யாரைக் கொலை செய்யலாம் என்று சுற்றித் திரியும் ஒரு கொள்ளைக்காரனாயிருந்தார், என்ன நடந்தது? ஒரு நாள் அவர் நோக்கிப் பார்த்து ஜீவனுக்கென்று விசுவாசித்தார். அவர் என் கூட்டங்களுக்கு தொடர்ச்சியாக வரத் தொடங்கினார். அந்த ஏழை மனிதனுக்கு உண்ண போதிய உணவின்றி, அவர் புதர்களிலும் கூடாரங்களின் பக்கங்களிலும் படுத்து உறங்கி, பசியும் தாகமும் கொண்டார். ஒருநாள் பரிசுத்த ஆவியானவர் அவர்மேல் வந்தார். ஓ, என் சகோதரனே, அது உங்களை மாற்றினது. அல்லவா? அது ஜீவனைக் கொண்டு வந்து, மரணத்தை எடுத்துப் போட்டது. வெறுப்பு விட்டகன்று அன்பு உள்ளே வந்தது. ஓ, என்னே! விரோதமும் சச்சரவும் அனைத்தும் அகன்றன, புது ஜீவன் உள்ளே வந்தது. இங்கு கவனியுங்ங்கள், வேறு சமயங்களில் வேறு மக்கள், வெளியே அங்கேயும், ஓ, பரலோகத்தின் மகிழ்ச்சி மணிகள் ஒலிக்கின்றன. நண்பர்களே, அதை விவரிக்க எனக்கு வழியே தெரியவில்லை. 94.கவனியுங்கள், இதை நான் இங்கு விட்டுவிடட்டும். நான் கிறிஸ்துவின் ஊழியக்காரன் என்றும், தேவனுடைய வேதாகமத்திலிருந்து அது சரியென்று நான் காண்பிக்க முயன்றேன் என்றும், என் சாட்சியை நீங்கள் விசுவாசித்தால், ஒருக்கால் இதைக் குறித்த என் வார்த்தைகள் வினோதமாகத் தென்படுமானால், விஞ்ஞான உலகிலுள்ள புகைப்படத்தைப் பாருங்கள். இஸ்ரவேல் புத்திரரை வழிநடத்தின இந்த அக்கினி ஸ்தம்பத்தை கவனியுங்கள். அது கொடுக்கும் பலனைக் கவனியுங்கள். அது என்ன செய்கிறதென்றும் என்ன கூறுகிறதென்றும் பாருங்கள். பேசுகிறது நானல்ல, அவர் தான் உங்கள் மூலமாய் பேசுகிறார். பாருங்கள்? தரிசனம் காண்பது நானல்ல, அவர் தான் உங்கள் மூலமாய் பேசுகிறார். வியாதியஸ்தர்களை சுகப்படுத்துவது நானல்ல, உங்களுக்குள் இருக்கும் அவர்தான். வியாதியஸ்தர்களை சுகப்படுத்துகிறார். பிரசங்கம் செய்வது நானல்ல, நான் பின் தங்கும் ஒரு கோழை. அதை கேட்ட மாத்திரத்திலே ஓடிவிடுவேன். அவர்தான் என் மூலம் பேசுகிறவர். எனக்கு வார்த்தை தெரியாது, ஆனால் அவருக்குத் தெரியும். அதுதான்! அதுதான்! அதுதான் அது. அவர் இங்கிருக்கிறார். அதே கர்த்தருடைய தூதன் இன்றிரவு இக்கட்டிடத்தில் இருக்கிறார். ஓ, நான் எவ்வளவாக அவரை நேசிக்கிறேன். 95.எத்தனை பேர் பரிசுத்த ஆவியைப் பெற விரும்புகிறீர்கள்? நமது வாழ்க்கையை சோதித்துப் பார்ப்போம். எத்தனை பேர் அதைப் பெறாமலிருந்து, அதை பெற விரும்புகிறீர்கள்? உங்கள் கைகளையுயர்த்தி, ''சகோ. பிரான்ஹாமே, என் இருதயத்தின் ஆழத்திலிருந்து நான் பரிசுத்த ஆவியைப் பெற விரும்புகிறேன்'' என்று கூறுங்கள். எல்லாவிடங்களிலும் கையுயர்த்தின உங்களை தேவன் ஆசீர்வதிப்பாராக. அதைப் பெற்றுக் கொண்ட உங்களில் எத்தனை பேர், அவர்கள் அப்போஸ்தலர் 4-ல் செய்தது போல், போக விரும்பி, ''ஓ, கர்த்தாவே, ஓ, கர்த்தாவே, உம்முடைய கரத்தை நீட்டி உம்முடைய பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் நாமத்தினாலே அடையாளங்களும், அற்புதங்களும் நடக்கும்படி செய்யும். பேசுவதற்கு எனக்கு முழு தைரியத்தையும் அன்பையும், ஆவியின் புது நிறைவையும் தந்தருளும்'' என்று கூறுவீர்கள்? ஆம், இதோ என் கரமும் கூட. தேவனே, அதை எனக்குத் தந்தருளும். நமது தலைகளை நாம் ஆழ்ந்த உத்தமத்துடன் வணங்குவோம். ஒவ்வொரு நபரும் உங்கள் விருப்பத்தை உங்கள் இருதயத்தில் கொண்டிருங்கள். 96.கர்த்தராகிய இயேசுவே, வார்த்தையின் பேரிலும் பரிசுத்த ஆவியின் பேரிலும் உண்டாயிருந்த ஐக்கியத்துக்குப் பிறகு இந்த இரவு இச்சிறு கூட்டத்தை நாங்கள் முடித்துக் கொள்கிறோம். அவர் எவ்வளவாக எங்களை ஆசீர்வதித்து, அவருடைய வார்த்தை என்னும் தைலத்தை எங்கள் இருதயங்களில் ஊற்றினார். இங்கு போதகர்கள் உள்ளனர்; கர்த்தர் நல்லவர் என்பதை ருசித்து பார்த்துள்ள வாழ்க்கையில் வெவ்வேறு துறைகளில் உள்ளவர்களும் இங்குள்ளனர். பரிசுத்த ஆவி என்னவென்று இப்பொழுது நாங்கள் அறிந்திருக்கிறோம், அது தேவனுடைய வாக்குத்தத்தமாயுள்ளது. விசுவாசிக்கிறவர்கள் எத்தனை பேர்களோ, அத்தனை பேர்களுக்கும் அது நித்திய ஜீவனாய் உள்ளது. பரிசுத்த ஆவி என்பது மறுபடியும் அனுப்பப்பட்ட இயேசு கிறிஸ்துவின் ஆவி என்பதை நாங்கள் அறிந்திருக்கிறோம். இன்றைக்கு அவர் எங்களுக்குள் இருக்கிறார். தேவன் எங்கள் மேல் அந்த அக்கினி ஸ்தம்பத்தில் இருந்தார். அதன் பிறகு அவர் எங்களோடு இம்மானுவேல் என்று அழைக்கப்பட்ட சரீரத்தில் நடந்தார் ''எங்களோடிருக்கும் தேவன் இப்பொழுது அவர் எங்களுக்குள் பரிசுத்த ஆவியாக இருக்கிறார் எங்களுக்குள் இருக்கும் தேவன். ஓ, இயேசு, “நான் என் பிதாவிலும், நீங்கள் என்னிலும், நான் உங்களிலும் இருக்கிறதை அந்நாளிலே நீங்கள் அறிவீர்கள். அந்நாளிலே நீங்கள் புரிந்து கொள்வீர்கள், ஏனெனில் இப்பொழுது நீங்கள் அந்தகார உலகில் இருக்கின்றீர்கள். ஆனால் அந்நாளிலே, நீங்கள் புரிந்து கொள்வீர்கள்'' என்றார். 97.பிதாவே, அதை வெளிப்படையாகவும், பரிபூரணமாகவும், அப்பொழுது கூற இயலவில்லை, ஏனெனில் நாங்கள் விசுவாசம் கொள்ள எங்களுக்கு ஒன்றும் இருந்திருக்காது. தேவனுடைய எல்லா கிரியைகளுமே விசுவாசத்தை அடிப்படையாய் கொண்டது. உம்முடைய வார்த்தையின் பேரிலுள்ள விசுவாசத்தையும், இப்பொழுது பிரசன்னமாயுள்ளது என்று நாங்கள் அறிந்துள்ள பரிசுத்த ஆவியின் சாட்சியையும் அடிப்படையாய் கொண்டு, இங்குள்ள பசியுற்ற ஒவ்வொரு ஆத்துமாவும் பரிசுத்த ஆவியினால் நிறைய வேண்டுமென்று வேண்டிக் கொள்கிறேன். அதை பெறாமலிருந்து அதற்காக பசியுற்றிருப்போருக்கு, கர்த்தாவே, நாங்கள் ஞாபகமூட்டுவது, நீர் கூறியுள்ள, “பசிதாகமுள்ளவர்களாகிய நீங்கள் பாக்கியவான்கள். நீங்கள் நிறையப்பட்டு திருப்தியடைவீர்கள்” என்னும் வசனமே. அது ஒரு வாக்குத்தத்தம். பசியுற்றிருப்பது ஒரு ஆசீர்வாதமே. தேவன் உங்களோடு பேசினார் என்று நீங்கள் அறிந்து கொள்வதே உங்களுக்கு ஆசீர்வாதமாயுள்ளது. ஏனெனில், ''என் பிதா ஒருவனை இழுத்துக் கொள்ளாவிட்டல், அவன் என்னிடத்தில் வரமாட்டான்“ என்று கூறப்பட்டுள்ளது. கர்த்தாவே, இங்குள்ள பழைய வீரர்கள் தங்கள் கரங்களை உயர்த்தினர். நானும் என் கையையுயர்த்தினேன். ஓ, கர்த்தாவே, எங்களுக்கு பெலனை அருளும். உமது பரிசுத்த பிள்ளையாகிய இயேசுவின் கரத்தை நீட்டி, அற்புதங்களும் அடையாளங்களும் நடந்து, இது முன்னைக் காட்டிலும் ஆழமான ஊழியமாகத் திகழவும், இதுவரையில் நிகழாத ஒரு பெரிய காரியம் நிகழ்வதற்கு எங்களுக்கு வல்லமையருளும். மக்களிடம் பேசுவதற்கு எங்களுக்கு தைரியத்தையும் அன்பையும் தந்தருளும். ஆண்டவரே, இதை அருளும். எல்லா காரியங்களிலும் எங்களோடு கூட இரும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். 98.நாளை இரவு, கர்த்தாவே, பலத்த காற்று அடிக்கிற முழக்கம் போன்ற ஒரு முழக்கம் இந்த கட்டிடத்துக்குள் உண்டாகி, அது பெந்தெகொஸ்தேவைப் போன்ற மற்றுமொரு நாளாய் திகழ்வதாக. அஸ்திபாரம் போடப்பட்டுவிட்டது. எல்லாமே ஆயத்தமாயுள்ளது. காளை கொல்லப்பட்டுவிட்டது. கொழுத்த கன்றுகள் கொல்லப்பட்டுவிட்டன. ஆட்டுக்கடாக்கள் கொல்லப்பட்டுவிட்டன. மேசையின் மேல் எல்லாம் வைக்கப்பட்டுவிட்டது. விருந்தினருக்கு அழைப்பு கொடுத்தாகிவிட்டது. ஓ, கர்த்தாவே, நாளை இரவு இக்கட்டிடத்துக்குள் பெந்தெகொஸ்தே யூபிலியை அனுப்பி, ஒவ்வொரு ஆத்துமாவையும் பரிசுத்த ஆவியில் நிரப்புவீராக. பிதாவே, இதை அருளும். இயேசுவின் நாமத்தில் கேட்கிறோம். ஆமென். நாங்கள் நிறைய காரியங்களை அறிந்துகொள்வோம். பொன்னால் செய்யப்பட கின்னரம் எங்களுக்கு இருக்கும். ஒருக்கால் அதற்கு ஆயிரம் கம்பிகள் இருக்கும் நாங்கள் பாடி, சத்தமிட்டு, நடனமாடுவோம் ஆட்டுக்குட்டியானவர் எங்கள் கண்ணீரைத் துடைப்பார் எங்களுக்கு வீடுதிரும்பும் ஒரு வாரம் இருக்கும் அதுவே முதல் ஆயிரம் வருடங்கள் (ஆமென்!) தேவனுடைய குமாரனின் விலையேறப்பெற்ற இரத்தம், அவருடைய நாமத்திற்காக ஒரு அருமையான ஜனத்தை சுத்தம் செய்து பரிசுத்தமாக்கினது; அவர்கள் தாமே “மணவாட்டி” என்று அழைக்கப்படுகின்றனர். இங்கே அவர்கள் புறக்கணிக்கப்பட்டு, நிராகரிக்கப்பட்டிருந்தாலும், ஒரு நாளில் அந்த தெரிந்துக் கொள்ளப்பட்வர்களை தேவன் தாமே வாசலண்டை கொண்டு வருவார்; அது எல்லாவற்றை காட்டிலும் தகுதி வாய்ந்ததாயிருக்கும்.